From naga ganesan@... Sun May 26 19:52:04 2002
Return-Path:
Received: (qmail 80914 invoked from network); 27 May 2002 02:52:03 -0000
Received: from unknown (66.218.66.217) by m9.grp.scd.yahoo.com with QMQP; 27 May 2002 02:52:03 -0000
Received: from unknown (HELO n21.grp.scd.yahoo.com) (66.218.66.77) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 27 May 2002 02:52:04 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [66.218.67.148] by n21.grp.scd.yahoo.com with NNFMP; 27 May 2002 02:52:04 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 27 May 2002 02:52:03 -0000
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 27 May 2002 01:43:27 -0000
Received: (qmail 21468 invoked from network); 27 May 2002 01:43:26 -0000
Received: from unknown (66.218.66.216) by m8.grp.scd.yahoo.com with QMQP; 27 May 2002 01:43:26 -0000
Received: from unknown (HELO n27.grp.scd.yahoo.com) (66.218.66.83) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 27 May 2002 01:43:26 -0000
Received: from [66.218.67.165] by n27.grp.scd.yahoo.com with NNFMP; 27 May 2002 01:43:26 -0000
Date: Mon, 27 May 2002 01:43:26 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: ammAvukku - (On thamizth thAy)
Message-ID:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2713
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 209.144.227.155
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-eGroups-Edited-By: jaybee@...
X-Yahoo-Message-Num: 18272

சில மாதங்கள் முன்னர், பெ. சுந்தரனாரின் புதுவழி வகுத்த தமிழ்த்தாய் வாழ்த்தைப்
பற்றிப் பேசினோம். முழுச் செய்யுளும் வெளியிட்டபோது அதன் நயம் ஒன்று
தட்டுப்பட்டது. சொல்லவேண்டும் என்று எண்ணினேன். அது நாளை.

தமிழ்த் தாய் பற்றி நல்ல கவிதைகள் கவிஞர் எல்லே ராம் செய்துள்ளார்.
ப்ரிய ஸகி, சென்னை, 1993 என்னும் தொகுப்பிலிருந்து ஒன்று.
அவரது "தமிழன்னை எனக்கும் தாய்தான்" என்னைக் கவர்ந்தவற்றுள் ஒன்று.

அன்புடன்,
நா. கணேசன்


அம்மாவுக்கு
---------------
- L. A. ராம்

தமிழ்த்தாயே!

தலை நரைத்தவளே! - என்னை
உச்சி முகர்ந்தவளே
என் உடம்பெல்லாம் தொட்டுத்
தொட்டுப் பார்த்தவளே
உயிர் கொடுத்தவளே பெற்றவளே - நீ
சூல் கொண்டபோதே
சுருண்டு நான் உனக்கு
வயிற்றிலேயே வணக்கம் சொன்னேனே

தவழ்ந்தபோது நான் உனக்கு
தாளடியில் வணக்கம் சொன்னேனே
நடக்கக் கற்றபோது தடுக்கி
உன் காலடியிலே
முடங்கிச் சொன்னேனே
வணங்கினேனே

வளர்ந்த பின்னும்
நான் உன்னை
வணங்கத் தவறவில்லை

என்ன பாஷை பேசினாலும்
கொஞ்சு தமிழ் மறக்கவில்லை
பரதேசம் போனாலும் உன் முலைப்பால்
குடித்தது மறக்கவில்லை

நினைப்பெல்லாம் தமிழ்
நெஞ்சமெல்லாம் தமிழ்-
உன் அணைப்பெல்லாம் தமிழ்
ஆதரவே தமிழ்

அடிபணிந்து வணங்குகிறேன்
முடிதடவி நீ ஆசி கூறவேண்டும்

----------Los Angeles Ram wrote:
> --- naga_ganesan wrote:
>
> அன்பர்களே,
>
> நண்பர் கணேசன் குறிப்பிட்டிருந்த கவிதை இது தான். பல நண்பர்கள் தனி
> மடலிலும் இது பற்றிக் கேட்டிருந்ததினால் மறு பிரசுரம் செய்யப்படுகிறது.
>
> தமிழன்னை எனக்கும் தாய் தான்
> ==========================
>
> வலை போட்டு வளர்த்து நிற்க
> இது என்ன இளஞ்செடியா
> மலரா மொட்டா
> ஆல விருட்சமல்லவா அகிலத்துக்கும் நிழலல்லவா?
>
> காவல் காத்துக் கூட்டம் போட
> இது என்ன ஓடுகாலியா
> ஒன்றுமறியாப் பேதையா
> கற்புக் கனலல்லவா கண்ணகியின் தீ அல்லவா?
>
> தணிக்கை செய்து தனிமையில் படிக்க
> இது என்ன மஞ்சள் பத்திரிகையா
> அசிங்கமா அடுத்தவன் பார்க்காமல் ஒளிக்கவா
> ஆதி கால மொழியல்லவா ஆண்டவனின் குரலல்லவா
>
> வேண்டாம் வீண்பயங்கள் கற்பனைகள்
> தோண்டத் தோண்ட இனிக்கும் என் தமிழில்
> பிறமொழிக் கரும்புகளால் சேர்க்கையினால்
> இனிப்பு கூடுமன்றிக் குறைவில்லை பயமில்லை
>
> தமிழுக்கும் தமிழனுக்கும் குறைவில்லை
> குறையுமில்லை குற்றமுமில்லை
> வெறுப்புக்கும் வேதனைக்கும் இங்கே
> வேலையில்லை வாழ்க தமிழும் தமிழனும்
>
> அன்புடன்
>
> எல்லே ராம்
>