From netranger@... Wed May 29 01:07:45 2002
Return-Path:
Received: (qmail 34488 invoked from network); 29 May 2002 08:07:45 -0000
Received: from unknown (66.218.66.218) by m7.grp.scd.yahoo.com with QMQP; 29 May 2002 08:07:45 -0000
Received: from unknown (HELO n12.grp.scd.yahoo.com) (66.218.66.67) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 29 May 2002 08:07:45 -0000
X-eGroups-Return: netranger@...
Received: from [66.218.67.154] by n12.grp.scd.yahoo.com with NNFMP; 29 May 2002 08:07:44 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 29 May 2002 08:07:44 -0000
X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 29 May 2002 07:00:17 -0000
Received: (qmail 15375 invoked from network); 29 May 2002 07:00:16 -0000
Received: from unknown (66.218.66.216) by m10.grp.scd.yahoo.com with QMQP; 29 May 2002 07:00:16 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.174.30) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 29 May 2002 07:00:15 -0000
Received: from smtp2 ([202.9.178.23]) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Wed, 29 May 2002 12:36:13 +0530
Received: from 202.9.169.154 by smtp2 (InterScan E-Mail VirusWall NT); Wed, 29 May 2002 12:24:17 +0530
Message-ID: <3CF47AEE.C8329528@...>
Date: Wed, 29 May 2002 12:23:34 +0530
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: tamil,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: ஒளவைக் குறள்(1 - 10)
References: <5.1.0.14.0.20020528093135.009fa030@pop>
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
X-OriginalArrivalTime: 29 May 2002 07:06:13.0921 (UTC) FILETIME=[51C62910:01C206DF]
From: ஞானவெட்டியான்
X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18303

ஓளவைக் குறள்

1. வீட்டுனெறிப்பால்

வீட்டு நெறிப்பால் - மோட்சம் செல்லும் வழி

ஆதியாய் நின்ற வறிவுமுத லெழுத்

தோதிய நூலின் பயன்.

மனிதர்கள் கற்ற நூல்களின் பயன் என்னவெனில்
எல்லாப்பொருட்களுக்கும் ஆதிமூலமாயும், முன்னதாகவும்
உதித்த முதல் எழுத்தாகியது குத்தெழுத்தே -( .)
அறிவினுள்ளிருக்கும் உணர்வைக் குறிக்கும் எழுத்தே
குத்தெழுத்து. நூல்களைப் படிப்பதனால் உண்டாகும் பயன்
தனக்குள்ளிருக்கும் ஆதிப்பொருளான அறிவை உணர்வதே.
வாசிட்டம்......................"அறியா
வறிவை யறியாரே"
தேவபூஜை கதை............"தெய்வந்தா
னியாதென்றோதில், கேவலமே யரியல்ல,
அரனல்ல, பூதவுடற் கிடைத்ததல்ல,
வோவுமன மன்றடி முடியுமிலாச்
செயப்படா உணர்வே தெய்வம்."
திருமந்திரம்..................."தரணி சல்ங்
கனல் காற்றத்த வானம்
அரணிய பானு வர்ந் திங்க ளங்கி
முரணிய தாரகை முன்னிய வொன்பான்
பிரணவ மாகும் பெரு நெறிதானே"

2.பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந்

தரமாறிற் றோன்றும் பிறப்பு.

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய
ஐம்பூதங்களின் சூட்சும சக்திகள், அளவின்படி அன்னத்தில்
கலந்து, அந்த அன்னத்தினாலேயே, நாதபிந்து கலைகள்
உண்டாகின்றன.
ஐம்பூதங்களின் சூட்சும சக்திகள், தங்களுடைய
கலைகளிலிருந்து பிறப்புக்கு வேண்டிய கலைகளைப் பிரித்து
நாத சக்தியில் கலப்பதினால் பிறப்பு உண்டாகிறது.


3.ஓசை பரிசமுருவஞ் சுவை நாற்ற

மாசை படுத்து மளறு.

ஐம்பூதங்களின் சூட்சும சக்திகளான ஓசை, பரிசம்,
உருவம், சுவை, வாசனை ஆகியவைகள் மனத்தில்
ஆசைகளோடு சம்பந்தப்படும்போது மனமானது
சேறாகிவிடும். அதாவது பஞ்சதன்மாத்திரைகள்
ஆசைகளோடு சம்பந்தப்படும்போது நரகிற்கு இட்டுச்செல்லும்.
பஞ்சதன்மாத்திரைகள்: செவி, நாக்கு, கண், மூக்கு,
தோல் என்னும் விண், வளி, தீ,
நீர், மண், என்னும் பூதங்களின் குணங்களினின்று தனித்த
குணங்களையுடைய மேற்படி பூதங்கட்குக் காரணமாயுள்ள -
சத்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தம் ஆகிய பொறிகளே
தன்மாத்திரைகள்.

4.தருமம் பொருள் காமம்வீடெனு நான்கு
முருவத்தா லாய பயன்.

ஆத்துமத்தை அறியும் தர்மம், தேகத்தினுள்ள மகத்தான
செல்வம், பரத்தாசை, இப்போது வசிக்கும் வீடாகிய
தேகத்தை (தேசம்)விட்டு ஆன்மா நீங்கியபின் அது
வசிப்பதற்கு வேண்டிய வீடாகிய மோட்சம்(உபதேசம்),
ஆகிய நான்கும் இத்தேகத்தினால் உண்டாகும் பயன்களாகும்.
ஆத்மா இத்தேகத்தைக் கொண்டே,
அறம்(தர்மம்),பொருள்(திரவியம்),இன்பம்(காமம்) என்னும்
வழிகளில் சென்று மோட்சத்தை அடைகிறது.

விளக்கம் : நாதபிந்து கலைகள் சேர்ந்து உடல் உருவாக்கப்
பட்டபோது, தர்மம் என்னும் மகத்தான ஒரு ஒப்பற்ற
சத்தியைக் கொண்டே அமைக்கப்பெற்றது. உலக செல்வம்
அனைத்துமே உடலையே உறைவிடமாக ஆக்கிக் கொண்டுள்ளன.
"அண்டத்திலுள்ளது பிண்டத்தில்" என்னும் முதுமொழி,
இகவாழ்வை மட்டுமே அறிந்தவற்களையும் கூட சிந்திக்க
வைக்கும். சிந்திக்கவில்லை எனில் பேரிழப்பு
அவற்களுக்குத்தான். உடலில் உள்ள செல்வங்களின் நிழல்களே
உலகில் தோற்றமாய்த் தோன்றுகின்றன.
அறிவுடையோர், உண்மைச் செல்வத்தின் சாயைகளைக்
கொண்டே தர்மம் என்பதில் சம்பந்தப்படுகிறார்கள்.
உண்மையான செல்வத்தின் கெதி(மூச்சோட்டம்)
என்னவாகிறது? இவ்வாறே, உடலிளுள்ள உண்மையான
செவங்களைத் தர்மத்தில் சம்பந்தப்படுத்துவதே
ஞானகர்மாக்களாகும். தர்மமும், செல்வமும் சேருவதால்
ஆத்தும சம்பந்தமாகிய புண்ணியம் என்னும் வினை
உண்டாகின்றது. இதனால் ஞான வாழ்க்கை அமைகிறது.
தர்மத்தையும், செல்வத்தையும் இணைப்பதற்கு ஒரு சிற்பி
வேண்டும். அதுவே காமம்(இன்பம் - இதுவும் சாயையே).
உடலோடு ஆத்மா கூடியுறவாடும்போது, உலக வாழ்வில்
இருக்க ஒரு வீடு(தேசம்) இருப்பதுபோல், ஆத்மாவாகிய
சீவன்(சிவன்) விலகியபின், சீவன் வசிக்க இன்னுமொரு
வீடு (பரவீடு - பரதேசம்) வேண்டியதுதானே.

5.நிலமைந்து நீர் நான்கு நீடங்கி மூன்றே
யுலவை யிறண்டொன் றுவிண்.

நிலம்.........5........ மெய், வாய், கண்,
மூக்கு, செவி
நீர்.............4........ ஆநந்தம், துக்கம்
ஆகியவைகளால் கண்ணிலிருந்து வரும்
நீர்,(உள்முகத்திலிருந்து)
இடக்கண்ணிலிருந்து வெளிவரும்
சந்திராமிர்தம்,வலக்கண்ணிலிருந்து
வரும் சூரியாமிர்தம்,
நாதநீராகிய சுக்கிலமும்(விந்து).
அக்கினி....3........ சூர்யாக்கினி,
சந்திராக்கினி, மூலாக்கினி
வாயு(உலவை)2... பிராணவாயு, அபானவாயு.
ஆகாயம்....1........ சூனியத்திலிருக்கும்(துவாத
சாந்தப் பெருவெளி) இராப்பகலற்ற சிதாகாசமே.
மானுட உடல் மேற்படி விகிதத்தில் உருவாகியுள்ளது.



6.மாயன் பிரமனு ருத்திரன் மகேசனோ
டாயுஞ்சிவ மூர்த்தி யைந்து.

சிவமூர்த்திகள் 5 பேர்கள் : பிரம்மா, விஷ்ணு,
ருத்திரன், மகேசன், சதாசிவன்.
பிரம்மா.............நிலம்(பிருதிவி)
விஷ்ணு.............நீர்
ருத்திரன்..........நெருப்பு
மகேசன்...........வாயு
சிவன்(சீவன்)....ஆகாயம்
*****

7.மாலயனங்கி யிரவிமதி யுமையோ
டேலும் திகழ்சத்தி யாறு.

விஷ்ணு சத்தியான இலக்குமியும், பிரும்ம சத்தியான
சரசுவதியும், அக்கினியும்(அங்கி), சூரியனும்(ரவி),
சந்திரனும்(மதி), பார்வதியும்(உமை) தேகத்தில்
பொருந்தி(ஏலும்) பிரகாசிக்கின்ற(திகழ்) சத்திகள்
ஆறு.
இலக்குமி - ஞானவினைகளுக்கு(கர்மாக்கள்),
இலட்சியத்திற்கு
சரசுவதி - அறிவிற்கு
அக்கினி - அஞ்ஞான இருளையகற்ற, பிராணணைப்
பலப்படுத்த
சூரியன் - பிரும்மத்தைக் காட்ட
சந்திரன் - தேகத்தைப் பார்ப்பதற்கு
பார்வதி - ஞானத்தைக் கொடுக்க

8.தொக்குதிரத் தோடூன் மூளைநிண மென்பு
சுக்கிலந் தாதுக்க ளேழு.

உடல்(தொக்கு), இரத்தம், மாமிசம்(ஊன்), மூளை,
கொழுப்பு(நிணம்), எலும்பு(அஸ்தி), சுக்கிலம் ஆக
தாதுக்கள் ஏழு.

9.மண்ணோடு நீரங்கி மதுயொடு காற்றிரவி
விண்ணெச்ச மூர்த்தியோ டெட்டு.

நிலம், நீர், அக்கினி, சந்திரன், வாயு, சூரியன்,
ஆகாயம், ஆத்துமா(பிராணண் - எச்சமூர்த்தி) ஆக
மூர்த்திகள் எட்டு. இவைகளையே எட்டு கைகளாக இறைவனின்
படத்தில் முன்னவர்கள் சித்தரித்துள்ளனர்.


10.இவையெல் லாங்கூடி யுடம்பாய வொன்றி
னவையெல்ல மானது விந்து.

விந்துவாகிய சுக்கிலமே மேலே சொன்ன
செல்வங்களையெல்லம் உண்டாக்கியது. அச்செல்வங்களெல்லாம்
ஒன்று சேர்ந்து உடம்பை உண்டாக்கியது. ஆக, விந்துவாகிய
சுக்கிலமே மூலவித்து.

-ஞானவெட்டியான்
-திண்டுக்கல்(தமிழ்நாடு)
***** XXXXX *****