From suganjb@... Wed May 29 04:49:31 2002
Return-Path:
X-Sender: suganjb@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 29 May 2002 11:49:31 -0000
Received: (qmail 45273 invoked from network); 29 May 2002 11:49:30 -0000
Received: from unknown (66.218.66.216) by m3.grp.scd.yahoo.com with QMQP; 29 May 2002 11:49:30 -0000
Received: from unknown (HELO smtp7.jaring.my) (61.6.32.57) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 29 May 2002 11:49:30 -0000
Received: from user (j13.spt2.jaring.my [161.142.105.87]) by smtp7.jaring.my (8.11.4/8.11.4) with SMTP id g4TBnR022876 for ; Wed, 29 May 2002 19:49:27 +0800 (MYT)
Message-Id: <3.0.3.32.20020529194607.006d94b8@...>
X-Sender: suganjb@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Wed, 29 May 2002 19:46:07 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Continued - Re: Enter Dr.Jolly - Re: [agathiyar] Nambikkai#4 - A Book's Story
In-Reply-To: <3.0.3.32.20020528191757.006f6e0c@...>
References: <3.0.3.32.20020527200223.006dece0@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=68538591
X-Yahoo-Message-Num: 18312

At 07:17 PM 5/28/02 +0800, you wrote:
>At 11:09 AM 5/28/02 -0000, you wrote:
>>சுவையாய்ப் போகிறது. தொடருங்கள் ஐயா!
>>அன்புடன்,
>>குமார்
>>
>
> இப்போது இன்னும் எஞ்சினை அடுத்துத்தானே இருக்கிறேன்.
>கார்டு வண்டிக்கு வருவதற்கு நாழியாகும்:-)
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி


முதன்முதலில் பம்பாய் டாக்டர் ஜாலியைச் சந்திக்கும்போது,
அறிமுகப்படுத்தி வைத்த டாக்டர் ஏ.வி.ஜெயச்சந்திரன்,
"Dr.Jolly....tell him about 'Think and Grow Rich'....Dr.Bharathi would
be soon readng it," என்றார்.

"Oh yes! Yes! Yes! That book has shaped my life and I happen
to be what I am, because of that book", என்றார்.

இந்த மடலைத் தமிழில் எழுத ஆரம்பித்துவிட்டதால், ஜாலி
சொன்னது வச்சது எல்லாவற்றையும் தமிழேயே சொல்லிவிடுகிறேன்.

"பஞ்சாபில் மிகவும் ஏழ்மைப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவன், நான்.
என் தந்தையார், மற்ற மூதாதையர் எல்லாருமே தற்சமயம் பாக்கீஸ்தானில்
இருக்கும் மாண்ட்கோமரி ஜில்லாவைச் சேர்ந்தவர்கள். இந்த உலகில்
இருக்கும் நாற்பது சதவிகிதம் சீக்கியர்கள் மாண்ட்கோமரி ஜில்லாவைச்
சேர்ந்தவர்கள், தெரியுமா? எங்களுக்கென்று நிலபுலனெல்லாம் நிறைய
இருந்தது. ஆனால் பார்ட்டிஷன் சமயத்தில் அத்தனையையும் விட்டுவிட்டு
நாங்கள் பஞ்சாபுக்குக் குடியேறிவிட்டோம். அப்போது பெப்ஸு(PEPSU)
என்னும் 'பாட்டியாலா ஈஸ்ட் பஞ்சாப் ஸ்டேட்ஸ் யூனியனில்' எங்களுக்கு
உறவினர் இருந்தபடியால் எப்படியோ அங்கேயே குடியேறி ஒப்பேறினோம்.
எங்கள் கிராமத்தில் நான் சிறுவயது முதலே ஒரு பெண்ணைக்
காதலித்தேன். பத்து வயது இருக்கும்...அப்போதே. அவளும் என்னுடன்
காதலாக இருந்தாள். Anyway..... it seemed so.....
அந்தக் கிராமத்திலேயே அவள்தான் அழகி. அவள் ஒரு பெரிய
பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். <இதுவரைக்கும் 'அழகி' கதை>
நாங்களோ பரதேசி.....Beleive it or not, Doctor....
That's what they called us.....'Pardeshi'. ஏனெனில் நாங்கள்
பாக்கீஸ்தானிலிருந்து அகதிகளாக வந்தவர்கள் அல்லவா?
நான் படித்து முடித்ததும் வேலையற்று ரொம்பநாள் கிராமத்தில்
இருந்தேன். அப்போதெல்லாம் அகாலி தள் (Akhali Dhal - a Punjaabi
religio-socio-political movement of post-independant India), காங்கிரஸ்
கட்சியுடன் போட்டாபோட்டி போட்டுக்கொண்டிருந்த சமயம். நானோ
அகாலிதள் ஆதரவாளனாக இருந்தேன்?

"இப்போ?", சமயாசந்தர்ப்பம் தெரியாமல் நான் கேட்டுவைத்தேன்.
"......................."

அவருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கவேண்டும். 'என்னடாயிது?
நாம் சீரியஸாக நம் வாழ்க்கையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம்.
இவன் பாட்டுக்கு என்னத்தையோ கேட்டுக் குறுக்குச்சால் ஓட்டுகிறானே!'
என்ற அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கவேண்டும். ஆகவே பதில் ஏதும்
சொல்லவில்லை.

தொடர்ந்தார்.

"அகாலிதள் ஆதரவாளனாக இருந்ததால் வேலை ஏதும்
கிடைக்கவில்லை. கிராமத்தில் இருந்துகொண்டு மேல்முயற்சிகளையும்
ஒழுங்காகச் செய்யவில்லை. செய்யவும் தெரியவில்லை. யாரையும் தெரியாது.
தெரிந்தால் அல்லவா push and pull செய்யலாம்?"

ஒருநாள், அந்தப் பெண்ணிடம் என்னை மணந்துகொள்ளுமாறு
கேட்டேன். அவள் மிகக் கிண்டலாகச் சிரித்துக்கொண்டு என்னை
ஏளனமாகப் பார்த்தாள்.
"நான் இந்த கிராமத்திலேயே பெரிய பணக்காரரின் பெண்.
இந்த கிராமத்திலும் சுற்றுவட்டாரத்திலும் ஜனக்கட்டு மிகவும் உள்ளவள்.
பாட்டியாலா மகாராஜா எங்களுக்கு மானியம் விட்டிருக்கிறார். அவர்கள்
குடும்பத்துடன் எங்கள் உறவினர்கள் மணத்தொடர்பு கொண்டவர்கள்.
நீயோ வந்தேறுங்குடி. பரதேசி. சொத்துப்பத்து ஒன்றுமில்லை. வேலையும்
இல்லை. என்னை மணந்துகொண்டு உன்னால் குடும்பம் நடத்தமுடியுமா?
.தூஉ..உ...உ....உ.....உ....... (அந்த 'உ'வைப் பார்த்தீர்களா? கொஞ்சம்
கொஞ்சமாகத் தள்ளிக்கொண்டே போகிறது? மேற்கத்திய இசை மரபில்
Decrescendo என்று சொல்வார்கள். அந்த மாதிரியில் சொல்லிப்பாருங்கள்
<இதெல்லாம் ஜேய்பி மார்க் கொனஷ்டை-patented>).

என்ன யோசிக்கிறீர்கள்? 'சீனியர், ஜூனியர்' மாதிரி கதை
போகிறதோ?
மேலே தொடர்ந்து படியுங்கள்.

கோபம், ரோஷம், வருத்தம் ஆகியவை தலைக்கேறியது. என்ன
செய்கிறோம் என்றே உணராதவகையில் நான் அவளிடம் அப்போதே ஒரு
சபதமிட்டேன்.

"உன்னைவிடப் பணக்காரி; உன்னைவிடப் படித்தவள்; உன்னைவிட
அழகியான நகரப்புறத்துப் பெண்ணை மணந்துகொண்டு, இதே கிராமத்துக்கு
வந்து உன் முன் நடந்துகாட்டுகிறேன், பார்", என்றேன்.

உடனேயே முதுகைத் திருப்பிக்கொண்டு வேகமாக வந்து,
அரைமணி நேரத்தில் அந்தக் கிராமத்தை விட்டு வெளியேறினேன்.

பஸ்ஸில் ஒரே அழுகையும் ஆத்திரமும்.

டெல்லிக்குச் சென்றேன். அங்கும் தங்காமல் ரயிலேறி
பம்பாய்க்குச் சென்றேன். அங்கே என் நண்பன் ஒருவன் இருந்தான்.
அவனுடைய அறைக்குச் சென்றேன். மிகச்சிறிய அறை. அவனுக்கே
போதாது. இருப்பினும் என்னைத் தன்னுடன் தங்க வைத்துக்கொண்டான்.
உணவுக்குச் சிரமப்படவேண்டியிருந்தது. அவனுடைய உணவைப்
பகிர்ந்துகொண்டேன்.

அன்புடன்

ஜெயபாரதி

====================================