From suganjb@... Wed May 29 04:57:18 2002
Return-Path:
X-Sender: suganjb@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 29 May 2002 11:57:17 -0000
Received: (qmail 86251 invoked from network); 29 May 2002 11:57:17 -0000
Received: from unknown (66.218.66.218) by m4.grp.scd.yahoo.com with QMQP; 29 May 2002 11:57:17 -0000
Received: from unknown (HELO smtp7.jaring.my) (61.6.32.57) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 29 May 2002 11:57:17 -0000
Received: from user (j13.spt2.jaring.my [161.142.105.87]) by smtp7.jaring.my (8.11.4/8.11.4) with SMTP id g4TBvD023930; Wed, 29 May 2002 19:57:14 +0800 (MYT)
Message-Id: <3.0.3.32.20020529195354.006d7afc@...>
X-Sender: suganjb@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Wed, 29 May 2002 19:53:54 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: More Dr.Jolly - Re: [agathiyar] Nambikkai#4 - A Book's Story
Cc: Narayan Swaminathan
In-Reply-To: <3.0.3.32.20020529194607.006d94b8@...>
References: <3.0.3.32.20020528191757.006f6e0c@...> <3.0.3.32.20020527200223.006dece0@...>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=68538591
X-Yahoo-Message-Num: 18313

At 07:46 PM 5/29/02 +0800, JayBee wrote:
>

>பம்பாய்க்குச் சென்றேன். அங்கே என் நண்பன் ஒருவன் இருந்தான்.
>அவனுடைய அறைக்குச் சென்றேன். மிகச்சிறிய அறை. அவனுக்கே
>போதாது. இருப்பினும் என்னைத் தன்னுடன் தங்க வைத்துக்கொண்டான்.
>உணவுக்குச் சிரமப்படவேண்டியிருந்தது. அவனுடைய உணவைப்
>பகிர்ந்துகொண்டேன்.
>

அந்த அறையில் பல புத்தகங்கள் இருந்தன.நண்பன் படிப்பான்.
அவற்றில் ஒன்று 'Think and Grow Rich'.
அதனை எடுத்து என் கையில் கொடுத்து,
"எனக்கு வாழ்க்கையில் வழிகாட்டியது இந்தப் புத்தகம். நீயும் படி.
ஆனால் ஒரு முறை மட்டுமே படிக்கக்கூடாது. பலமுறைகள் படிக்க
வேண்டும். அப்போதுதான் வேலை செய்யும்",என்றான்.
"என்னடாது! புத்தகம்.....வேலை செய்யுமா? அதெப்படி? நாமல்லவா
வேலை செய்யவேண்டும்?" எனக்குப் புரியவில்லை.
இருப்பினும் அதனை எடுத்துப் படித்தேன்.
மறுமுறையும் படித்தேன். மீண்டும் படித்தேன். அடுத்தடுத்துப்
படித்தேன். படித்தேன். படித்துக்கொண்டேயிருந்தேன்.(வீரபாண்டியக்
கட்டபொம்மன் படத்தில் எட்டப்பன் வீகேராமசாமி சொல்வது போலச்
சொல்லவேண்டும். இல்லையென்றால் போரடிக்கும்).

அடுத்தாற்போல இரண்டு மாதங்கள் விடாமற் படித்துக்
கொண்டேயிருந்தேன்.
அந்த இரண்டு மாதங்கள் கழித்து ஒரு வேலை கிடைத்தது.
ஒரு வர்க் ஷாப்பில் எடுபிடி வேலை. அதுவரைக்கும் என்னுடைய
படிப்புதான், நான் தேடிவந்த வேலைகளை நிர்ணயித்தது. ஒருவித
மனத்தடையையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் அந்தத் தடையை
இப்போது காணோம். வேலையை ஓர் உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும்
செய்தேன். அங்கிருந்த அத்தனை மாதிரியான வேலைகளையெல்லாம்
பழகிக்கொண்டேன். ஸ்பேர் பார்ட்டுகளைஎப்படி modify செய்வது
என்ற வித்தையை நான் கற்றுக்கொண்டேன். என்னுடைய படிப்புக்கும்
அதற்கும் சம்பந்தமேயில்லை.
அந்த ஆண்டு முடிவுக்குள் அந்த வர்க் ஷாப்பில் மேலாளனாக
உயர்ந்துவிட்டேன். இந்தியாவிலுள்ள எல்லாவிதமான கார்களையும்
ரிப்பேர் செய்யமுடிந்தது. அத்தனை வகையான ஸ்பேர் பார்ட்டுகள்
எல்லாமே எனக்கு அத்துப்படி.
அடுத்த இரண்டாண்டுகளில் எனக்கென்று ஒரு சொந்த
வர்க் ஷாப் ஏற்பட்டது.
பிறகு ஒரு ஸ்பேர் பார்ட் சப்லையரிடம் சேர்ந்தேன்.
அடுத்த இரண்டாண்டுகளில் நானே சொந்தமாக ஒரு
நிறுவனத்தை ஏற்படுத்திக்கொண்டுவிட்டேன்.
ஆனால் அந்தப் புத்தகத்தைமட்டும் விடாமல் திரும்பத் திரும்பப்
படித்தேன். மொத்தம் இருநூறு தடவைகளுக்கு மேல் அந்தப்
புத்தகத்தைப் படித்துவிட்டேன். I have internalised the book.
நல்ல வருமானம். ஒரு பெரிய இடத்துப்பெண்; அழகானவள்;
படித்தவள்; பம்பாய்க்காரியைத் திருமணம் செய்துகொண்டேன்.
திருமணமான அந்த மாதக்கடைசியில் என்னுடைய கிராமத்துக்குச்
சென்றேன். ஐந்தாண்டுகள்கூட ஆகவில்லை.

If you beleive in Providence and coincidence, Doc..........
but I tell you.....it happened. It just happened that way.

நான் என்னுடைய கிராமத்திற்குச் சென்றதும் அதன் பெரிய
தெருவிற்குள் என் புதிய மனைவியுடன்(இப்படி எழுதவேண்டாம்.
அப்புறம் எல்லேய் பெரியபல்லவர், 'அப்படியானால் பழைய மனைவி
எங்கே?' என்று எதையாவது ஏடாகூடமாகக் கேட்டுவைப்பார்.
சின்னப்பல்லவராயருக்குத்தான் கடுமையான நேரமின்மையாயிற்றே.
இந்த மடலைக்கூட அவர் பார்க்கமாட்டார். படுபிசி. 'புதிய' என்ற
சொல்லை நீக்கிவிடவும்) என் மனைவியுடன் நடந்து சென்றேன்.
வேண்டுமென்றே மிகவும் மெதுவாக நடந்துதான் சென்றேன்.

அப்போது அந்தப் பெண்....கிணற்றிலிருந்து நீர் எடுத்துக்
கொண்டு எதிர்ப்புறமாக வந்தாள். என்னைப் பார்த்ததும் தலையைக்
குனிந்துகொண்டு சென்றாள். நான் அவளைக் கடந்து சென்றேன்."

"பாருங்கள், Doc. படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்தவன்;
ஏழை; வந்தேறுங்குடி; செல்வாக்குள்ளவர்கள் யாரையும் தெரியாதவன்;
உலகநடப்புத் தெரியாதவன்; கைத்தொழில் இல்லாதவன்; வருமானமே
இல்லாதவன்".

"ஐந்தே ஆண்டுகளில் சொந்த நிறுவனம்; வேலைத்திறன்;
பணக்காரன்; அழகிய, படித்த, பணக்கார பம்பாய்க்கார மனைவியின்
கணவன்".

எல்லாமே அந்தப் புத்தகத்தால்தான் ஏற்பட்டது.
Think and Grow Rich'.

அன்புடன்

ஜெயபாரதி

===================================