From sarabeswar@... Wed May 29 05:42:43 2002
Return-Path: X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 29 May 2002 12:42:43 -0000
Received: (qmail 60835 invoked from network); 29 May 2002 12:42:43 -0000
Received: from unknown (66.218.66.218) by m12.grp.scd.yahoo.com with QMQP; 29 May 2002 12:42:43 -0000
Received: from unknown (HELO n14.grp.scd.yahoo.com) (66.218.66.69) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 29 May 2002 12:42:43 -0000
Received: from [66.218.67.142] by n14.grp.scd.yahoo.com with NNFMP; 29 May 2002 12:42:42 -0000
Date: Wed, 29 May 2002 12:42:40 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Avvai uNda kaL (was -Re: ஒளவைக் குறள்(1 - 10)
Message-ID: In-Reply-To: <3CF4C740.AAE8233E@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 2153
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar" X-Originating-IP: 202.152.1.146
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18318
அன்புசால் ஞானவெட்டியான் அவர்களைப் பணிந்து,
தங்களின் இந்த மடலைப் படித்தவுடன் சிலிர்த்துப் போனது.
இதுநாள் வரை இந்த அறிஞரவையில் உளறல் என்றால் அது என்
தனி உரிமை என்றிருந்தது. இறையருளால் இன்னும் கைகள்
தேறும் போலிருக்கிறதே!
அன்புடன் வணங்கி,
குமார்
--- In agathiyar@y..., ஞானவெட்டியான் wrote:
> அன்பு நண்பர் திரு.குமார் அவர்கட்கு,
> வணக்கம்.
> உள்ளத்தில்(உள்+அது) உள்ளது உணர்தல் வேண்டும்
> உணர்ந்த பின் உண்ணலாம் நறுந் தேறல்.
> தெளிந்த பின் கிட்டுவதோ தெளிவு
> அத்தெளிவே நமது அறிவு.
>
> சூக்குமம் மறைத்ததே மறை. முதல் ஞானி முதல் ஈறானவன்
> வறை அருந்திய அமிழ்தம் இதுவே.
> பாற்கடல் கடைந்தெடுத்தலும் இதுவே.
> உளறல்கள் தொடரும்.
> -ஞானவெட்டியான்
> -திண்டுக்கல்(தமிழ்நாடு)
> sarabeswar wrote:
> >
> > அன்புசால் ஞானவெட்டியாருக்கு,
> >
> > அற்புதமாய் எழுதி வருகிறீர்கள்
> >
> > > நீர்,(உள்முகத்திலிருந்து)
> > > இடக்கண்ணிலிருந்து வெளிவரும்
> > > சந்திராமிர்தம்,வலக்கண்ணிலிருந்து
> > > வரும் சூரியாமிர்தம்
> >
> > முன்னர் ஔவை உண்ட கள் என்ற திரியில் இதுகுறித்து
> > எழுதியிருந்தேன்.
> >
> > சோமபானம் சுராபானம் என்பது இவைதானே?
> > பாரதி பாடும் சிவசக்தி பாட்டைப் பார்ப்போம்:
> >
> > தெளிவுறும் அறிவினை நாம் கொண்டு
> > சேர்த்தனம் நினக்கது சோமரசம்,
> > ஒளியுறும் உயிர்ச்செடியில் - இதை
> > ஓங்கிடும் மதிவலி தனிற்பிழிந்தோம்.
> > களியுறக் குடித்திடுவாய் - நின்றன்
> > களிநடங் காண்பதற் குளங்கனிந்தோம்;
> > குளிர்சுவைப் பாட்டிசைத்தே - சுரர்
> > குளத்தினிற் சேர்ந்திடல் விரும்புகின்றோம்.
> >
> > அவளைப் பெண்குலத்தின் வெற்றியடி என்றவன்
> > மருவியிருந்தது இந்தச் சூக்குமம் உணர்ந்தல்லவா!
> >
> > பணிவன்புடன்,
> > குமார்
> >
> >
> > ------------------------------------------------------------------
---------------
> > For archives click
> > http://groups.yahoo.com/group/agathiyar/messages
> > ------------------------------------------------------------------
---------------
> >
> >
> >
> > Your use of Yahoo! Groups is subject to
http://docs.yahoo.com/info/terms/