From netranger@... Wed May 29 07:16:24 2002
Return-Path: X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 29 May 2002 14:16:24 -0000
Received: (qmail 97745 invoked from network); 29 May 2002 14:16:24 -0000
Received: from unknown (66.218.66.216) by m13.grp.scd.yahoo.com with QMQP; 29 May 2002 14:16:24 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.174.30) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 29 May 2002 14:16:23 -0000
Received: from smtp1 ([202.9.178.22]) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Wed, 29 May 2002 19:52:22 +0530
Received: from 202.9.169.63 by smtp1 (InterScan E-Mail VirusWall NT); Wed, 29 May 2002 19:54:33 +0530
Message-ID: <3CF4E126.C0126A6A@...>
Date: Wed, 29 May 2002 19:39:42 +0530
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: tamil,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: Re:ஞானத்துக்கடா - 2
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
Return-Path: netranger@...
X-OriginalArrivalTime: 29 May 2002 14:22:22.0765 (UTC) FILETIME=[3F9EDDD0:01C2071C]
From: ஞானவெட்டியான் X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18319
முருகன் - உருவ விளக்கம்
(font : TSC AVARANGAL)
ஞானத்துக்கடா - 2 :
தைப்பூசத்தைப்பற்றி :
கீழ்கண்ட அநுபவமுத்துக்கள், குன்றுதோறாடல், கந்தபுராணம்
ஆகியவைகளில் கூறப்பட்டவைகளிலிருந்தும், என்
பெரியப்பன், சிதம்பரம் இராமலிங்கம் அவ்வப்போது
ஆங்காங்கே கூறியவைகளிலிருந்தும் புரிந்துகொண்டவை.
தைப்பூசத்தில் அழகன் முருகனைப்பற்றிக் கொள்ளவேண்டிய
வழிமுறையினைத் தெளிவாக விளக்கும் திருப்புகழின் 21ம்
பாடலையும், அறிவிலும், வயதிலும் மூத்த பெரியவர்
வாரியாரின் பொழிப்புடனுடமீந்தமை இன்றைய
இடப்பாட்டிற்கு (context) உகந்ததே.
இவ்வறிய காலத்தே, முருகனை ஏன் படங்களிலும்,
பாடல்களிலும் சித்தரித்துள்ளனர் என்று கொஞ்சம்
சிந்தித்தல் அவசியமே :
முகம் ஆறு - ஆறு சோதியாகவும், ஆற்றறிவாயும்,
ஆறுதலையுடையதாக
இருப்பதால் முகம் ஆறு.ஆறுதலைத் தருவதாலும்
ஆறு
முகமுண்டாயிற்றென்று விளம்பலுமுண்டு.
கால் இரண்டு - தோன்றும் அறிவு, தோற்றுவிக்கும் அறிவு
- என்ற இரண்டறிவாகிய
விடய உணர்வும், நிர்விடய உணர்வும் ஆகும்.
கை பன்னிரண்டு - ஆறு ஆதாரங்களிலுமுள்ள பிரகாச,
அப்பிரகாசமாகும்.
தசாயுதம் - வச்சிரம் - தீட்சண்ய உணர்வு
வேல் - சக்தி (இச்சா, கிரியா,
ஞானா சக்திகள்) - Potential &
kinetic
energy.
அருள் - அறிவு
மணி - ஆன்ம விளக்கமாகிய நாதம்.
த்வஜம் - புகழாகிய கீர்த்தி
ஸரஸிஜம் - தயவு
குக்குடம் - மாச்சரியமில்லாத
நிறைவு.
பராகம் - பாச நீக்கம்.
தண்டம் - வைராக்கிய அறிவு.
பாணம் - அன்பு.
அபயம் - சமாதான உணர்ச்சி
வரதம் - நிராபரமாகிய ஆதரவென்னும் சகிப்பு.
கடப்ப மாலை - சர்வ தத்துவ கண்டனம்.
மயில் - விசித்திர வடிவுடையதாகியதும், பல
வர்ணமுள்ளதும், மறதி முதலிய
குணங்களுக்குக் காரணமானதும், விசித்திர
மாயைக்கு
இருப்பிடமானதுமான் மூலப்பிரகிருதி.
சூரன் - அண்டத்திலும், பிண்டத்திலும், மூல அஞ்ஞான
காரணமாயுள்ள
கேவலமாகிய மகா அகங்காரமென்னும் இராக்கத
அம்சமாகியதுவே.
மாமரம் - மாயை
கோழி - மாச்சரியம்
யானை முகம் - மகாமதம்
சிங்க முகம் - அதி குரோதம்
தெய்வ யானை - தாந்தர தத்துவம்
வேடர்கள் - இந்திரியங்கள்
வள்ளி - மானசமாகிய மானின் வயிற்றிலுதித்த சுத்த
மனம்
வடிவு - நினைப்புக்கும் மறதிக்கும் இடையில் - விவேக
உருவு
பாத முதல் நாபி வரை - அக்கினி(உஷ்ண)
உருவு
நாபி முதல் கண்டம் வரை - ஆதார நாடி
உருவு
கண்ட முதல் புருவ மத்தி வரை - மணி உருவு
(சுப்பிரமணியன்)
உச்சியில் - ஒளி உருவு
புத்தியில் - சுத்த அறிவு
அநுபவத்தில், நித்தியமாயும் எங்கும் நிறைவாயும்,
கோணத்தில் ஆறாயும்(ஆராயும்),மதங்களில் ஆறாயும்,
சமயத்தில் ஆறாயும் விளங்குபவனே சுப்பிரமணியம்.
படை வீடுகள் - 6 :
1.ஏரகம் - அழகு பொருந்திய உள்ளமென்னும் இடம்.
2.திருவாவினன்குடி - இலக்குமியாகிய மகிழ்ச்சியும்,
பசுவாகிய
சீவனும்,
இனன்(சூரியன்) ஆகிய புத்தியும், ஒன்றுகூடி
விளங்கும்
ஆன்ம அறிவின் சுத்த காரிய இடம்.
3.பழமுதிர் சோலை - (இந்திரிய,லரண,ஜீவ)அநுபவப்
பழக்கங்களாகிய
பிரயோசன
இன்பங்கள் நீங்கி குறைவற்ற அறிவாய் விளங்குமிடம்.
4.திருச்சீரலைவாய், திருச்செந்தில்,செயந்திபுரம் :
சுத்த மனத்தில்
(விஷயக்)
கடலில், அவாவாகிய அலை
அடித்துக்கொண்டிருக்கும்
இடமாகிய கரை,செந்துக்களின்
இருதய(இரு+உதய)
இடமாகிய மனம், அஞ்ஞான சூரனை வதைத்து
மகிழ்ச்சியைப் பெற்ற
பதிமனத்தின்(பதி+மனம்) விளக்கம்.
5.திருப்பரங்குன்றம் - அசைதலில்லாத விளக்கத்தையுடைய
விவெக
உல்லாச
இன்ப நிறைவு.
6.குன்றுதோறாடல் - மலையென்பது அலைவில்லாத
உணர்ச்சிக்கு
முதற்காரணமாயுள்ள துரிய நன்னிலை. சீவதுரியம்,
பரதுரியம்,
சுத்ததுரியம், குருதுரியம்,சிவதுரியம்,சத்திதுரியம்
ஆகிய
துரிய மலைகளுக்கு உடலிலிடம், கோசத்தினடி,
தொப்புளின்
கீழ்,தொப்புள், வயிற்றில் தொப்புளுக்கு மேல் மார்புக்குக்
கீழ்,
மார்பு,நெஞ்சு ஆக ஆறு.
ஞானிகள், கடவுளை எங்கும் கண்டு வணங்குவரென்றும்,
யோகிகள் இருதயத்தில் கண்டு வணங்குவரென்றும், கர்ம
காண்டிகள் அக்கினியில் கண்டு வணங்குவரென்றும்,
பத்திகாண்டிகள் விக்கிரகத்தில் கண்டு வணங்குவரென்றும்
விதித்துள்ளது.