From suganjb@... Wed May 29 07:25:10 2002
Return-Path: X-Sender: suganjb@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 29 May 2002 14:25:10 -0000
Received: (qmail 31190 invoked from network); 29 May 2002 14:25:10 -0000
Received: from unknown (66.218.66.217) by m8.grp.scd.yahoo.com with QMQP; 29 May 2002 14:25:10 -0000
Received: from unknown (HELO smtp4.jaring.my) (61.6.32.54) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 29 May 2002 14:25:09 -0000
Received: from user (j26.spt.jaring.my [161.142.105.220]) by smtp4.jaring.my (8.11.4/8.11.4) with SMTP id g4TEP3m28481; Wed, 29 May 2002 22:25:04 +0800 (MYT)
Message-Id: <3.0.3.32.20020529222142.006e8158@...>
X-Sender: suganjb@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Wed, 29 May 2002 22:21:42 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] Asthra PrayOgam
Cc: "balar@..." In-Reply-To: Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=68538591
X-Yahoo-Message-Num: 18320
At 06:36 PM 5/29/02 +0800, Balar wrote:
>
>யிதே வகையில் வியூகங்கள் அமைப்பதும் அதை உடைப்பதும் கூட
>ஆராய்ந்து நோக்கத் தக்கது. புராணங்களில் கூறப்படும் விளக்கங்களைக்
>கொண்டு பார்த்தால் போரில் வெல்வதற்கு உடல் வலிமை மட்டும் போதாது
>புத்தி கூர்மையும் சிந்தனா சக்தியும் நிறைய வேண்டும் என்று தெரிகிறது.
நிச்சயமாக.
அன்றிலிருந்து இன்றுவரைக்கும் இது உண்மையாகத்தான்
இருந்துவருகிறது.
வள்ளுவரின் போரியலிலும் இதைக் காணலாம்.
புராணங்களில் சொல்லியிருக்கும் படைகளும் அணிகளும்,
ஆயுதங்களும் வித்தியாசமானவை.
புராணங்களில் கண்டவாறு அத்தனை வியூகங்களை
அணிவகுத்திருப்பரா என்பது சந்தேகமே.புராண வியூகங்களில்
கூறப்பட்டிருக்கும் எண்ணிக்கைகள் மிக அதிகமானவை.
ஆனால் வரலாற்றுக்காலத்தில் நிகழ்ந்தபோர்களில்
இருந்த வியூகங்களைப் பற்றி அறியமுடிகிறது. கௌட்டில்யரின்
அர்த்த சாஸ்திரத்தில் சில விபரங்கள்இருப்பதைக் காணலாம்.
கிரேக்கர், அராபியர், துருக்கர் முதலியோர் இங்கு
புரிந்த போர்களில் வென்றது பற்றி நிறைய எழுதியிருக்கிறார்கள்.
Alexander's Indus Campaign-பற்றி அவருடன் கூடவே வந்த
டயரிக் காரர் விரிவாக எழுதியுள்ளார்.
அப்போது 'ரதகஜதுரபதாதி' என்றழைக்கப்படும் சதுரங்க
சேனைகள் பயன்படுத்தப்பட்டன. போரஸ் மன்னனின் சதுரங்க
சேனையை எப்படி அவன் அணிவகுத்திருந்தான் என்பதை நாம்
அறியமுடிகிறது. சில மணி நேரமே நடைபெற்ற அந்தப் போரில்
எப்படி போரஸின் படைகள் அழிந்தன என்பதை அந்த வரலாற்றாசிரியர்
விலாவாரியாக விவரித்திருக்கிறார்.
கோரி முஹம்மது - பிரிதிவிராஜன் ஆகியோருக்கிடையில்
நடைபெற்ற தாராய்ன் போரைப் பற்றி துருக்கர் விரிவாக விளக்கியுள்ளனர்.
படிப்படியாக அவர்கள் எந்த மாதிரியான வியூகத்தில் வந்து
எதை வைத்து எப்படி பிரிதிவிராஜனின் படைகளின் கதையை
முடித்தனர் என்பதையும் அறியலாம்.
ஆனால் பிரிதிவிராஜன் படை சதுரங்கமாக அமைந்திருக்க
வில்லை. தேர்ப்படை அப்போது பயன்படவில்லை.
படையில் வலுவானதாக விளங்கக்கூடியதுதேர். மிக விரைவாகச்
செல்லும். இரண்டிலிருந்து நான்கு பேர் வரை அதில் இருக்கலாம்.
எதிரி அணியை உடைக்கும் வண்ணம் தேர்களைச் செலுத்தலாம்.
பலவிதமான ஆயுதங்களைப் பிரயோகிக்கமுடியும். ஆனால் தேரின்
பலவீனங்களும் பல இருந்தன. எல்லாமாதிரியான தரையிலும்
அதைச் செலுத்த முடியாது. தேர் வரும் பாதையில் பெரிய
மரங்களைப் போட்டுவிட்டாலோ, பள்ளங்களைத் தோண்டிவிட்டாலோ,
அம்புட்டுத்தான். இரண்டாம் உலக யுத்தத்தில் டாங்க்கிகளைத்
தடுப்பதற்கு இதே மாதிரிதான் Tank obstacles வைத்திருந்தார்கள்.
ஃபீல்ட் மார்ஷல் ரோம்மெல், Atlantic Wall நிர்மாணித்தபோது
பெரிய பெரிய காங்க்ரீட் தடைகளையும் பள்ளங்களையும் Tank Trenches
செய்துவைத்திருந்தார்.
செஸ் விளையாட்டில்கூட பார்த்தீர்களானால் அடிப்பக்கத்துப்
பெரிய காய்களில் பலவீனமாகக் கருதப்படுவது தேர்தான். அந்தக்
காயின் தோற்றத்தை பார்க்கும்போது பிஷப்பின் தொப்பியைப்
போல இருப்பதால்தான் அதனை ஆங்கிலத்தில் பிஷப் என்று
சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையிலேயே தேர்தான்.
குலோத்துங்க சோழரின் கலிங்கத்துப்போரில் தேர்ப்படை
இருந்தது. கலிங்கத்துப் பரணியில் ஜெயங்கொண்டார் விவரித்திருக்கிறார்.
ஆனால் பாண்டியர் காலத்தில் தேர்ப்படை இருந்ததாகத்
தெரியவில்லை. மாலிக் காஃபூர், குஸ்ராவ் கான், முகம்மது பின் துக்ளக்
ஆகியோர் நடத்திய போர்களில் தமிழ் மன்னர்களின் தேர்ப்படையைப்
பற்றிக் குறிப்பிடக்காணோம்.
இதைப் பற்றி இன்னும் நிறைய எழுதிக்கொண்டே
போகலாம். ஆனால் இந்த விஷயத்தில் ஈடுபாடு உடையவர்கள்
மிக அரிதாகத்தான் இருப்பார்கள்.
>
>யிதை வைத்துப் பார்க்கும் பொழுது சதுரங்கம் யிந்தியாவில் தோன்றியது
>என்ற கருத்துக்கு வலிமை யிருப்பதாகத்தான் தோன்றுகிறது ஏனென்றால்
>மற்ற நாட்டுப் போர்த் தந்திரங்களில் யிப்படியான வியூக அமைப்புக்கள்
>யிருப்பதாகத் தெரியவில்லை. தங்கள் கருத்து என்ன?
இருந்திருக்கின்றன. சீனாவின் ட்ஸுன் ட்ஸூவிலிருந்து
கிரேக்கர், ரோமர் போன்ற அனைவரும் வியூகங்களையும் அணி
வகுப்புக்களையும் பற்றி நிறைய எழுதியிருக்கின்றனர்.
Gladiator படத்தில் பார்த்திருப்பீர்களே? மாக்ஸிமஸுடன்
இன்னும் சில கிலேடியேட்டர்களை அரினாவின் நடுவில் விட்டு,
அவர்களைத் தேர்களில் அமர்ந்த வில்லாளிகளைத் தாக்கச்செய்யும்
காட்சி. அதில் அரினாவின் நடுவே மாக்ஸிமஸ் அமைப்பதும்கூட
ஒரு வியூகம்தான்.