From suganjb@... Wed May 29 17:00:09 2002
Return-Path: X-Sender: suganjb@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 30 May 2002 00:00:09 -0000
Received: (qmail 39135 invoked from network); 30 May 2002 00:00:08 -0000
Received: from unknown (66.218.66.218) by m6.grp.scd.yahoo.com with QMQP; 30 May 2002 00:00:08 -0000
Received: from unknown (HELO smtp3.jaring.my) (61.6.32.53) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 30 May 2002 00:00:08 -0000
Received: from user (j50.spt.jaring.my [161.142.105.244]) by smtp3.jaring.my (8.11.4/8.11.4) with SMTP id g4U000p00373 for ; Thu, 30 May 2002 08:00:03 +0800 (MYT)
Message-Id: <3.0.3.32.20020530080035.006f5260@...>
X-Sender: suganjb@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Date: Thu, 30 May 2002 08:00:35 +0800
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: [agathiyar] mayil rAvaNan
In-Reply-To: <20020529155949.90695.qmail@...>
References: <1022686485.4186.18015.m12@yahoogroups.com>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=68538591
X-Yahoo-Message-Num: 18328
At 08:59 AM 5/29/02 -0700, you wrote:
>மயில் இராவணன் கதை எப்போதோ படித்தது. மறந்து விட்டது.
>உ.வே.சா அவர்கள் இது பற்றிக் குறிப்பிடுகிறார்...
>
>
>இது போன்ற நல்ல பாடல்களும், லிங்கப்பய்யர் போன்றவர்கள் இயற்றிய தமிழ்
>பாடல்களும் எங்கே ?
காணாமற்போய்விட்டன.
ஓர் ஊர்வலத்திற்குச் செலவிடும் பெட்ரோல் எண்ணெய்ச்செலவை
மட்டும் வைத்தே கடலுக்கடியில் இருக்கும் காவிரிப்பூம்பட்டினத்தை 'அலேக்'
என்று தூக்கிக் கரையில் வைக்கலாம்.
நம்பமுடியவில்லையா?
அப்பச் சரி.
கூட்டிக்கழிச்சுப் பாருங்க.
வந்துரும்:-)
>கோபாலகிருஷ்ண பாரதியார் பாடல்களுக்கே இந்த கதியென்றால் இவர்கள்
>பாடல்கள் எங்கே பாடப் பெறும்....
>
>இந்தப் பாடல்களும் செய்யுளும் எவரிடமாவது இருப்பின் வெளியிட
>வேண்டுகிறேன்..
>
>வித்யா
நூறாண்டுகளுக்கு முன்னர் பெரிய எழுத்து சீரிஸ் ஒன்றை
வெளியிட்டார்கள்.
அதென்ன பெரிய எழுத்து.
நாற்பதுக்குமேல் ஏற்படும் குணமாறுதல்களுடன் கண்ணிலும்
மாறுதல்கள் ஏற்படும்.
வெள்ளெழுத்து என்று சொல்லப்படும் Hypermetropia எனும்
Long-sight ஏற்படும். Long sight என்றால் தூர நோக்கு என்று
எடுத்துக்கொள்ளக்கூடாது. அது far-sight.
வெள்ளெழுத்து வந்தால், எழுத்துக்களைப் படிக்கவேண்டுமானால்
புத்தகத்தை எட்டப் பிடிக்கவேண்டும்.
சாதாரணமாக 40 செண்ட்டிமீட்டர் தூரம்தான் optimum
visual distance for reading என்று கொள்ளப்படுகிறது.('என்னடாயிது,
மயில்ராவணன் கதைக்குப் பதிலா பார்வையைப் பற்றிச் சொல்லிக்கிட்டு
இருக்குதே? வயசானாலேயே இப்படித்தான்cantankerous, loquacious,
voluble, vociferous, talkative என்றெல்லாம் சொல்வார்களே அப்படி
ஆயிருங்களோ?' என்று நினைப்பீர்கள். என்ன செய்வது? நான்
அடிப்படையில் ஒரு மருத்துவன் அல்லவா? அதான் கொஞ்சம்
கொஞ்சம் திணவெடுக்கும் போதெல்லாம் மருத்துவத்தையும்
கொஞ்சம் தொட்டுக்கொள்வது).
ஆனால் வெள்ளெழுத்தில் அந்த தூரம் அதிகரித்திருக்கும்.
படிக்கக்கூடிய தூரத்தில் எழுத்தை பிடித்துக்கொண்டால், படிக்கலாம்.
அல்லது பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்தால்படித்துவிடமுடியும்.
இன்னொரு முறை,எழுத்துக்களைப் பெரிசாக ஆக்கிக்
கொள்வதுதான்.
அந்தக் காலங்களில் சராசரி இந்தியனின் ஆயுள் முப்பத்தைந்து
வயதாகத்தான் இருந்தது.
வயசாளியாக ஆகவோ 'பெரிசு' என்னும்அந்தஸ்தைப் பெறவோ
வேண்டுமானால், பல கண்டங்கள்(ஆஸ்திரேலியா, அமேரிக்கா,
காயவைக்கப்பட்ட மாமிசத்துண்டுகள் போன்றவை அல்ல), நோய்கள்
போன்றவற்றை எல்லாம் கடந்து வந்திருக்கவேண்டும். அப்படி வந்தவர்களின்
வசதிக்காக லோகோபகாரமாகப்(ரெண்டு மூணு தடவை சொல்லிப்பார்க்க
வேண்டும். அப்பத்தான் வரும்) பெரிய எழுத்து அச்சுக்களைப் பயன்படுத்தி
கனமான புத்தகங்களாகப் போட்டார்கள்.தரையில் அமர்ந்துகொண்டு,
புத்தகத்தை விரித்துவைக்கும் folder-இல் வைத்துக்கொண்டு,
படிக்கும்வண்ணம் அந்தப் புத்தகங்கள் அமைந்திருக்கும். Reading
distance 60 செண்டிமீட்டருக்கு மேல் இருக்கும்.
இதானய்யா 'பெரிய எழுத்துப் புத்தகத்தின் modus operandi.
இந்த மாதிரி வெளியிடப்பட்ட பெரிய எழுத்து சீரிஸில்
விக்கிரமாதித்தன் கதை, அல்லை அரசாணி மாலை, அர்ச்சுனன் தபஸ்,
நல்லதங்காள் கதை, அரிச்சந்திரன் கதை, விராட பருவம், பவளக்கொடி,
மயில்ராவணன் கதை போன்றவை இருந்தன. இன்னும் இருந்தன.
நினைவில்லை.(வயசு...வயசு...வயசூஉஉஉ).
வித்யா ஜெயராம் கேட்டதற்காகத் தொடர்கிறேன்.
அகத்தியத்தில் பொம்பளையே இல்லை என்று சிங்கப்பூர்
கீதா எழுதிருந்தார்கள். Tut tu tut....Short sightedness....
short sightedness.