From harikris@... Thu May 30 05:06:15 2002
Return-Path:
X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 30 May 2002 12:06:14 -0000
Received: (qmail 8362 invoked from network); 30 May 2002 12:06:13 -0000
Received: from unknown (66.218.66.218) by m9.grp.scd.yahoo.com with QMQP; 30 May 2002 12:06:13 -0000
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 30 May 2002 12:06:10 -0000
Received: (qmail 21011 invoked by uid 7002); 30 May 2002 17:36:22 +0530
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by webmail5.maa.sify.net with SMTP; 30 May 2002 17:36:22 +0530
Received: (qmail 18490 invoked by uid 7002); 30 May 2002 17:35:24 +0530
Received: from unknown (HELO mipl) (61.11.82.223) by webmail5.maa.sify.net with SMTP; 30 May 2002 17:35:24 +0530
Message-ID: <003d01c207d2$aa17ac80$190001dc@...>
To:
References: <3.0.3.32.20020529222142.006e8158@...>
Subject: Re: [agathiyar] Asthra PrayOgam
Date: Thu, 30 May 2002 17:34:44 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 6.00.2600.0000
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V6.00.2600.0000
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 18335

தலைவரே,

ஈடுபாடுடையவர்கள் எத்தனைப் பேராக இருந்தாலும் அவர்களின் எண்ணிக்கை என்னால் இன்னும் ஒன்று அதிகரிக்கும். :-)

ராமாயணத்தில் இந்திரனுடைய தேர் வருணனையை ஊன்றிப் படித்தால் பல கேள்விகள் எழுகின்றன. (தெரியுமே. நிகும்பிலை எங்கே என்று வேப்பிலை அடிக்க ஆரம்பித்து விடுவீர்களே!) தேர் அமைப்புகளில் பல விதங்கள் இருந்திருக்கின்றன போலும். இரண்டு குதிரை, நான்கு குதிரை, ஐந்து குதிரை என்று இழுக்கக்கூடிய குதிரைகளின் எண்ணிக்கையை வைத்துச் சொல்லலாம். (இங்கே ஆயிரம் சிங்கங்களால் இழுக்கப் பட்டு அதி கம்பீரமாக வந்த இந்திரஜித்தின் தேரைப் பற்றிப் பேசவில்லை.) கண்ணனுடைய தேர் - சாரதி தாருகன் - ஐந்து குதிரைகள் பூட்டப்பட்டது. அர்ஜுனன் தேருக்கு நான்கு? ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கு ஒரு மாதிரியான தேர் இருந்திருக்குமோ? பொன்னவிர் மேனிச்சுபத்திரை மாது அர்ஜுனனைப் புறங்கொண்டுபோன தேரும், அவன் யுத்தத்திற்குப் பயன்படுத்திய தேரும் வேறு வேறு மாதிரியான அமைப்புகள் உடையவை என்று தோன்றுகிறது.

இந்திரனின் தேரில் ஒலி எழுப்பும் பூத அமைப்புகள் இருந்தன என்று கம்பன் சொல்கிறான். தேரில் பூத உருவங்களைச் செதுக்கி, திறந்த வாய்ப்பகுதி வழியாகக் காற்று போவதால் ஏற்படும் ஒலியாகவும்இருந்திருக்கலாம். அல்லது, நம்ம பசங்கள் சைக்கிள் சக்கரத்தில் பலூனைக் கட்டி ஓசை எழுப்புகிறார்களே அப்படி ஏதேனும்இருந்திருக்கலாம்.

தேரைத் தனித்தனியாகக் கழற்றி (ஏழு தனித்தனி உறுப்புகள்) மறுபடியும் பூட்டுவதைக் கம்பன் காட்டுகிறான்.

சொல்லுங்கள் தலைவரே. கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.

அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
----- Original Message -----
From: JayBee
To: agathiyar@yahoogroups.com
Cc: balar@...
Sent: Wednesday, May 29, 2002 7:51 PM
Subject: Re: [agathiyar] Asthra PrayOgam




குலோத்துங்க சோழரின் கலிங்கத்துப்போரில் தேர்ப்படை
இருந்தது. கலிங்கத்துப் பரணியில் ஜெயங்கொண்டார் விவரித்திருக்கிறார்.
ஆனால் பாண்டியர் காலத்தில் தேர்ப்படை இருந்ததாகத்
தெரியவில்லை. மாலிக் காஃபூர், குஸ்ராவ் கான், முகம்மது பின் துக்ளக்
ஆகியோர் நடத்திய போர்களில் தமிழ் மன்னர்களின் தேர்ப்படையைப்
பற்றிக் குறிப்பிடக்காணோம்.
இதைப் பற்றி இன்னும் நிறைய எழுதிக்கொண்டே
போகலாம். ஆனால் இந்த விஷயத்தில் ஈடுபாடு உடையவர்கள்
மிக அரிதாகத்தான் இருப்பார்கள்.

இருந்திருக்கின்றன. சீனாவின் ட்ஸுன் ட்ஸூவிலிருந்து
கிரேக்கர், ரோமர் போன்ற அனைவரும்வியூகங்களையும் அணி
வகுப்புக்களையும் பற்றி நிறைய எழுதியிருக்கின்றனர்.
Gladiator படத்தில் பார்த்திருப்பீர்களே? மாக்ஸிமஸுடன்
இன்னும் சில கிலேடியேட்டர்களை அரினாவின் நடுவில் விட்டு,
அவர்களைத் தேர்களில் அமர்ந்த வில்லாளிகளைத் தாக்கச்செய்யும்
காட்சி. அதில் அரினாவின் நடுவே மாக்ஸிமஸ் அமைப்பதும்கூட
ஒரு வியூகம்தான்.

அன்புடன்

ஜெயபாரதி



[Non-text portions of this message have been removed]