From jaybee@... Thu May 30 07:35:58 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 30 May 2002 14:35:58 -0000
Received: (qmail 99178 invoked from network); 30 May 2002 14:35:58 -0000
Received: from unknown (66.218.66.216) by m7.grp.scd.yahoo.com with QMQP; 30 May 2002 14:35:58 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 30 May 2002 14:35:53 -0000
Received: from user (sp-103-52.tm.net.my [210.186.103.52]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GWX00G7OHVQ1O@...> for agathiyar@yahoogroups.com; Thu, 30 May 2002 22:35:52 +0800 (SGT)
Date: Thu, 30 May 2002 22:36:24 +0800
Subject: Puhaiyilai Maahaanmiyam
X-Sender: jaybee@... (Unverified)
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020530223624.007821d8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18336
அன்பர்களே,
இன்று புகை பிடி மறுப்பு தினம்.
ஆச்சரியமாகத்தன் இருக்கிறது! சில விஷயங்கள் குறுகிய
காலகட்டதிலேயே உலகெங்கும் பரவி விடுகின்றன.
அவற்றில் புகையிலையும் ஒன்று.
எஸ்பானியர் மூலமாகவே அமெரிக்காவிலிருந்து அது
ஐரோப்பாவுக்கு வந்திருக்கிறது. இங்கிலாந்தில் அது அறிமுகமானது,
ணி எலிசபெத் காலத்தில்தான். வர்ஜீனியாப் பிரதேசத்தை
இங்கிலாந்துக்காக பிடித்துக்கொண்ட ஸர் வால்ட்டர் ராலிதான்
அதனை இங்கிலாந்தில் பிரபலப்படுத்தினார்.
முதன்முதலாக அவர், ராணி எலிசபெத் நடத்திய அரசவைப்
பார்ட்டிக்கு ஒரு பைப்பில் புகையிலையைவைத்துப் புகை பிடித்த
வண்ணம் சென்றார். அதைக் கண்ட பிரபு ஒருவர்,
"By Gad! Sir Walter is on fire!" என்று கூவியவண்ணம் அருகிலிருந்த
போத்தல் பீரை எடுத்து அவர் முகத்தில் 'சளக்'கென்று ஊற்றினார்.
இப்படித்தான் புகையிலை ஓஹோவென்று அறிமுகமாயிற்று.
அதன்பின்னர் புகைலை, உயர்குடிமக்களின் பிரத்தியேக போகப்
பொருளாக மாறியது.
அமெரிந்தியர்கள் இதனை எப்போது புகைக்கத்
துவங்கினார்கள் என்பது தெரியவில்லை.ஆனால் அது அவர்களின்
வழிபாடாகிய மாந்திரீகக்கோட்பாட்டில்(Shamanism) அடங்கியிருந்தது.
புகையிலை ஒரு மூலிகையாகவும் சாந்தி, அமைதி ஆகியவற்றைக்
குறிப்பதாகவும் கருதப்பட்டது. இரவு நேரத்தில் அமெரிந்தியர்கள்
தத்தமது விக்வாம் கூடாரங்களின் வெளியில் இருக்கும் இடத்தில்
நெருப்புமூட்டிக் கனப்பு ஏற்படுத்திக்கொண்டு, அமைதியாகப் புகை
பிடிப்பதுண்டு.
எதிரிகளாக விளங்கிய இரண்டு தரப்பினர், சந்து செய்து
கொள்ளும்போது, சமாதானத்தைக் குறிக்கும் சடங்காக புகைப்பார்கள்.
இதனை 'Smoking the Peace Pipe' என்று சொல்வார்கள்.
பின்னர் புகையிலையை இடித்துப் பொடி செய்துப் பயன்படுத்தினர்.
அடுத்து எழுதப்போகும் விஷயம் ஏற்கனவே அகத்தியத்தில்
எழுதப்பட்டுவிட்டது. ஆனால் அதனைத் தேடிக்கண்டுபிடிப்பதற்காக
அலக்குடுத்து உலக்கை சாத்துவதற்குள் மீண்டும் எழுதிவிடலாம்.
அதையே செய்கிறேன்.
புறங்கையைப் பாருங்கள்.பெருவிரலை நன்றாகப் பின்புறமாக
வில்லாக வளைத்துக்கொள்ளுங்கள். இப்போது மணிக்கட்டின் பக்கவாட்டில்
இரண்டு நாண்நரம்புகள் விடைத்துக்கொண்டு தெரியும். Abductor Policis Major,
Extensor Policis Major ஆகிய இரண்டு தசைகளின் நாண்கள் அவை.
அவையாகத்தான் இருக்கவேண்டும். நாற்பதாண்டுகளுக்கு முன்னர்
அனாட்டமி படித்தது. கைவசமிருந்த இரண்டு அனாட்டமி அட்லாஸ்களை
மாப்பிள்ளை மேற்படிப்புக்காக இரவல் வாங்கிச் சென்றிருக்கிறார்.
அவை இரண்டுக்கும் நடுவே ஒரு குழி விழும்.
அதன் பெயர் 'Anatomical Snuff Box'.
காரணமாகத்தான் அப்பெயர் ஏற்பட்டது.
அந்தக் குழியில் புகையிலைப் பொடியை வைத்துக்கொண்டு,
நாசித்துவாரத்தில் வைத்து 'இழும்ம்'மென்று இழுப்பார்கள். சங்க
இலக்கியத்தில் அருவிதான் இழும்ம்'மென்று விழும். அப்போது
மூக்குப்பொடி இல்லையல்லவா? ஆகவேதான்மூக்குப்பொடியை
இழுப்பதற்கு அதனைச் சங்ககாலப் புலவர்கள் பயன்படுத்தவில்லை.
ஆரம்பத்தில் மூக்குப்பொடியை இழுப்பது பெரிய இடத்து
சமாசாரமாக இருந்தது.
அப்படியே ஒரு வழியாகப் புகையிலை இந்தியாவுக்கு வந்து
சேர்ந்தது.