From ramnrom@... Thu May 30 09:49:40 2002
Return-Path:
X-Sender: ramnrom@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 30 May 2002 16:49:39 -0000
Received: (qmail 41593 invoked from network); 30 May 2002 16:49:38 -0000
Received: from unknown (66.218.66.217) by m9.grp.scd.yahoo.com with QMQP; 30 May 2002 16:49:38 -0000
Received: from unknown (HELO web14201.mail.yahoo.com) (216.136.172.143) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 30 May 2002 16:49:39 -0000
Message-ID: <20020530164824.70426.qmail@...>
Received: from [4.35.187.102] by web14201.mail.yahoo.com via HTTP; Thu, 30 May 2002 09:48:24 PDT
Date: Thu, 30 May 2002 09:48:24 -0700 (PDT)
Subject: AnbuLLa Appa
To: Rayarkaapiklub@yahoogroups.com
Cc: agathiyar@yahoogroups.com
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Los Angeles Ram
X-Yahoo-Group-Post: member; u=24104095
X-Yahoo-Profile: ramnrom
X-Yahoo-Message-Num: 18338

அன்புள்ள அப்பா
-------------------

அப்பாவே நீ எனக்கு
அறிமுகம் ஆகவே இல்லையே

"உன் அப்பா உத்தமன்
எத்தன் அல்ல வித்தகன்
புத்தியில் குரு
சக்தியில் வாலி - தெய்வ
பக்தியிலோ பெரும் சிரேஷ்டன்
முக்தி பற்றி முழுதும் தெரிந்த ஞானி"
என்று
ஊரிலே பேசிக் கொள்கிறார்கள்

நேரிலே
அப்பாவே நீ எனக்கு
அறிமுகம் ஆகவே இல்லையே

கீதையை நீ படிப்பாய்
காதை காதையாய்ப் பொருளுரைப்பாய்
சஹஸ்ரனாமங்கள் சரிவரத் தெரிந்தாலும்
வரி பார்த்துப் படித்திடுவாய்
பாசுரங்கள் ஆலயங்கள் பற்றி
நேசமுடன் பேசிடுவாய்
கண்ணில் நீர் மல்க
என்னென்னமோ சொல்லிடுவாய்
எனக்கு ஏதும் புரிந்ததில்லை

அப்பாவே நீ எனக்கு
அறிமுகம் ஆகவே இல்லையே

சாளிக்கிராம மகிமை பற்றி
ஒளிச்சுடராம் ராமலிங்கர் பற்றி
ஓதுவார்கள் கீர்த்தனைகள்
ஒன்றுவிடாமல் நீ பாடி
அபிஷேக மகிமை பற்றி
ஆனந்த நடனம் பற்றி
பூஜை மணி தினம் அடித்ததெல்லாம்
செவிடன் என் காது வழி
சிறிதேனும் ஏறியதில்லை

அப்பாவே நீ எனக்கு
அறிமுகம் ஆகவே இல்லையே

'மூன்றாம் பிறை இதற்கு
மோட்சம் பற்றி என்ன சொல்ல?
சிறகே முளைக்காத சின்னப் பறவைக்கு
இறகே இல்லாத இந்தக் குருவிக்கு
பறப்பது பற்றிப்
பரந்து விரிந்து கிடக்கும் இவ்வுலகில்
பறந்து பறந்து விரைந்து
புண்ணியம் சேர்ப்பது பற்றிக்
கரைந்து கரைந்து நாம் என்ன
சொல்லித் தர?
புரிந்து கொள்ளட்டுமே
தானே எல்லாம்' என்று தான்

அப்பாவே நீ எனக்கு
அறிமுகம் ஆகவே இல்லையோ?

மணிக்கணக்கில் உன்னோடு நான்
நண்பனாய்க் கொண்டாடி
இருந்திருக்க வேண்டாமா?
நல்லாசிரியனாய் ஞானகுருவாய் நீ எனக்கு
போதனைகள் புகட்டியிருக்க வேண்டாமா?
இலக்கியங்கள் தத்துவங்கள்
இதிகாச புராணங்கள்
எல்லாவற்றையும் நாம் சேர்ந்து
அலசியிருக்க வேண்டாமா?
சின்னப்பயல் இவனுக்குச்
சொன்னால் எங்கே புரியுமென்றுதான்

அப்பாவே நீ எனக்கு
அறிமுகம் ஆகவே இல்லையோ?

வினை முடிந்து
மடி மீது படுத்திருந்தாய்
வலது காதில் ராமநாமம்
கேட்டிருந்தாய்
அலைச்சலெல்லாம் முடிந்து
அலுப்பெல்லாம் கரைந்து
வலை தாண்டி நீ செல்ல
கவலையில் நான் அழுதேன்

"கர்மமடா இது
புரியாமல் கதறுகிறாயே" என்று
தர்மம் புரியவைத்துத்
தலைசாய்ந்து என் மடியில்
ஏன் எனக்குச் சொல்லவில்லை?
நான் உன் செல்லப்பிள்ளை ...

தப்பான பிள்ளை இவன்
எப்பாடு பட்டும் போதித்து
என்ன பயன்?
கூப்பாடு மட்டுமே போட்டு
கூவித் திரிவான்- பணப்
பேயாய் அலைந்திடுவான்
கோபம் பறக்க
கூட்டம் கூட்டி மிகச் சோம்பல் கண்டு
ஆட்டம் ஆடிப் பல
வஞ்சகம் புரிந்திடுவான்
பிஞ்சிலே பழுத்திடுவான்
சஞ்சலம் அடைந்தழிவான்
என்றெல்லாம் தெரிந்துதான்

அப்பாவே நீ எனக்கு
அறிமுகம் ஆகவே இல்லையோ

"அக்கரையும் தெரியாமல்
இக்கரையும் இல்லாமல்
நடுவிலே தவிக்கின்றேன்
நானெங்கே படகோட்டுகின்றேன்
அக்கறையோடு உன்னை நான்
அணைத்தெடுத்துத் தோளில் ஏற்ற
ஆசைதான் ஆனாலும்
என் சுமையை எங்கே வைக்க?

சுயமாய்ச் சிந்தித்து
பயம் தெளிந்து
பலம் புரிந்து
குன்றாமல் குறையாமல்
நன்றாக ஒருமித்துக்
கூண்டிலிருந்து வெளிவந்து
கூடவே பாடிவா
என் ஆன்மாவைத் தேடி வா"
என்று தான்

அப்பாவே நீ எனக்கு
அறிமுகம் ஆகவே இல்லையோ!

------------லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் ('93 'ப்ரிய ஸகி' கவிதைத்
தொகுப்பிலிருந்து)





__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! - Official partner of 2002 FIFA World Cup
http://fifaworldcup.yahoo.com