From kishorekca@... Thu May 30 21:22:33 2002
Return-Path:
X-Sender: kishorekca@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 31 May 2002 04:22:33 -0000
Received: (qmail 18455 invoked from network); 31 May 2002 04:22:33 -0000
Received: from unknown (66.218.66.217) by m10.grp.scd.yahoo.com with QMQP; 31 May 2002 04:22:33 -0000
Received: from unknown (HELO n30.grp.scd.yahoo.com) (66.218.66.87) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 31 May 2002 04:22:33 -0000
Received: from [66.218.67.165] by n30.grp.scd.yahoo.com with NNFMP; 31 May 2002 04:22:33 -0000
Date: Fri, 31 May 2002 04:22:32 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Mayil RaavaNan
Message-ID:
In-Reply-To: <20020530063737.8919.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 5262
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "kishorekca"
X-Originating-IP: 207.0.105.168
X-Yahoo-Group-Post: member; u=44815288
X-Yahoo-Profile: kishorekca
X-Yahoo-Message-Num: 18343

மயில் ராவணன் கதை வாய்மொழியாக வழங்கிவரும் கதை. தமிழில் ஒருவிதமாகவும் வங்காள மொழியில் ஒரு
விதமாகவும் இருப்பதாக நினைவு (வங்காள மொழியில் எழுத்துவடிவிலும் கிடைக்கிறது - எழுதியவர் பெயர் க்ரி
த்திவாசர் என்று ஞாபகம்; சிறுவயதில் அமர் சித்ர படக்கதையாக படித்தது. தமிழ் வாய்மொழிக்கதையை
பேராசிரியர் காமில் ஜ்வெலெபில் பதிப்பித்திருக்கிறார் - நான் படித்ததில்லை + பிரதிகளும் இப்போது க்
டைப்பதில்லை).

கதைச்சுருக்கம் - இல்ங்கைப்போர் துவங்கி சில நாட்கள் கடந்து விட்டன. மேகநாதன் இற்ந்தபின்ன்ர் என நி
னைக்கிறேன். வங்காள ராமாயணப்படி தசகண்டன் மயில் ராவணனை நினைக்கிறான். அவன் பாதாள உலகின்
மன்னன் (பாதாளத்தை மகாபலி ச்க்கரவர்த்தி ளுவார் - அவர் மகள் மண்டோதரியை தசகண்டன் மணந்து கொள்கி
றான். இது தனிக்கதை. மயில் ராவணனின் தாய் மண்டோதரியா என்று நினைவில்லை. மகாபலி அரசை வி
ட்டுக்கொடுத்தாரா அல்லது பேரனுக்காக குட்டி ராஜ்ஜியம் அமைத்தாரா தெரியாது). நினைத்தமாத்திரமே
முன்னால் தோன்றுகிறான். அவனிடம் நடந்ததைக்கூறி மாயத்தால் ராம லக்ஷ்மணர்களை மாய்த்துவிட பணிக்கி
றான்.

இவனை அடுத்துஅனுப்பலாம் என்று ஊகித்து வீடணன் ஒரு தந்திரத்தை உபயோகிக்கிறான். வானர சைன்னியத்தை
ஒரு வட்டமாக அமரவைத்து அவர்களுக்கு நடுவில் ராம லக்ஷ்மணர்களை இருத்துகிறான். அனைவரையும்
சுற்றி அனுமனின் வால் நீண்டு கூம்பு வடிவான அரணாக அமைகிறது (cone shaped). வெளியில் மூவர்
மட்டும் உள்ளனர் - அனுமன், சுக்ரீவன், மற்றும் வீடணன். அனுமன் ஓரிடத்தில் நிற்க மற்ற இருவரும் அரணை
சுற்றி சுற்றி வருகிறார்கள். ஏற்பாடுகளை கவனித்துவிட்டு மயில் ராவணன் தந்திரம் செய்கிறான் - தன்
உருவத்தை வீடணன்போல் மாற்றிக்கொண்டு சுக்ரீவனை ஏமாற்றி உள்ளே நுழைந்துவிடுகிறான்.

மந்திரத்தால் அனைவரையும் மயக்கத்தில் ழ்த்தி ராம லக்ஷ்மணர்களை தூக்கிக்கொண்டு பூமியை பிளந்து
குடைந்துகொண்டே தன் ஊர் சேர்கிறான்.
வீடணன் அர்ணச்சுற்றிவரும்போது அவனைக்கண்டு அதிர்ந்து சுக்ரீவன் "வெளியே வந்தது எப்ப்டி எப்போது?"
என்று வினவ எல்லாம் புரிகிறது. சன்ஞீவி மலையை பெயர்த்துவந்த அனுமனே இருவரையும்
மீட்டுவர அனுப்பப்படுகிறான்.

பீலத்துவாரத்தின் வழியே மயில் ராவணன் ஊர் சேர்கிறான் அனுமன். தன் உருவத்தை குறுக்கிக்கொண்டு அந்நகர
மக்களின் பேச்சை ஒட்டுக்கேட்கிறான். மானிடர்கள் நுழையும் காலத்தில் தங்கள் ஊர் அழிவைநோக்கும் என்றும்
இரு மானிடர் காளி கோவிலில் அடைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் பேசிக்கொள்கிறார்கள். அந்கே - மயி
ல் ராவணன் பூஜைகளில் ஈடுபட்டு ராம லக்ஷ்மணர்களை நரபலிகொடுக்க யத்தனிக்கிறான்.

அனுமன் தன் உருவத்தை வண்டாக மாற்றிக்கொண்டு (ப்ரமரா:-)அம்பிகையின் அருகே சென்று அவள் புகழ்பாடி
இதுபோன்ற பலி அவளுக்கு அவசியமா என்று கேட்டு ராம லக்ஷ்மணர்களின் பூர்வ கதையைக்கூறுகிறான். அவள் இதி
ல் தனக்கு விருப்பமில்லை என்றும் ராம லக்ஷ்மணர்கள் மீள்வதற்க்கு உபாயமும் சொல்கிறாள்.

உடன் அனுமன் மார்க்கத்தை இராமனிடம் தெரிவிக்கிறான். மயில் ராவணன் இராமனை முன்வரச்சொல்லி அவன்
தலையை பலி பீடத்தில் வைக்குமாறு கூறி வாளைக்கையில் எடுக்கிறான். தனக்கு குனிந்து பழக்கமில்லை என
இராமன் சொல்ல வெறித்தனமாக வாளை கீழே எறிந்துவிட்டு மயில் ராவணன் தன் தலையை பீடத்தில் வைத்து
இப்படி வைக்கவேண்டும் என்று காட்டுகிறான். ஒரு நொடியில் அனுமன் சுய உருப்பெற்று, பாய்ந்து,
வாளைக்கைப்பற்றி இராமனின் கட்டுக்களை வெட்டி எறிந்து, வாளையும் இராமனினிடம் கொடுக்கிறான். அடுத்த
நொடியில் மயில் ராவணன் தலை மண்ணில். அனுமன் அதற்குள் இலக்குவனை விடுதலை செய்கிறான். அவர்கள்
யுதங்களை மீட்டு, எதிர்த்த மயில் ராவணன் படைகளை அழித்து, பொழுது விடியுமுன் பூமியின் மேல்தளத்திர்க்கு
வந்து வானர சைந்நியத்தை சந்திக்கிறார்கள்.

தமிழ் கதையில் அயில் மயில் ராவணர்கள் என இரட்டையராக சித்தரிக்கப்படுகிறார்கள் - அனுமனின்
மகனுக்கும் கதையில் பங்குண்டு (அனுமனின் நெற்றியிலிருந்து வழிந்த வேர்வைத்துளியை உட்கொண்ட அரக்கி
ஒருத்திக்கு பிறந்த மகன். தென்கிழக்கு சிய நாடுகளில் வழங்கும் ராமாயணங்களில் அனுமனுக்கு மகன்
இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன்). தமிழ் கதை உபயம் கோகுலத்தில் 70க்ளில் வந்த `ஜெய ஹனுமான்'
படத்தொடர்கதை - வெகு நாட்கள் வந்தது. இன்றும் வினு அவர்கள் வரைந்த ப்டங்கள் கண் முன்னே அப்படியே நி
ற்க்கின்றன.

இலங்கை வானொலிக்காரரின் பெயர் ம்யில்வாஹனம் சர்வானந்தா என்று ஞாபகம் - அதே 70களில் அவர்,
A.S. ராஜா (அல்லது K.S. ராஜா?), ஷாஹுல் ஹமீத் போன்றவர்களும் அவர்கள் பேசிய அந்த தீந்தமி
ழும் (வேறு எப்படி வர்ணிப்பதென்று தெரியவில்லை, கேட்டிருந்தால் தான் அதன் சுகம் புரியும்) கூட அப்படியே
நினைவில் நிற்க்கிறது - ஒரு வேளை அகத்தியப்பெரியவர்களைப்போலன்றி இன்னும் 35 வயதுகூட காததாலோ
என்னவோ:-)

அன்புடன்,
கிஷோர்

--- In agathiyar@y..., Shaboo wrote:
>
> ஹி.ஹி.. இலங்கை வானொலி தமிழ் அறிவிப்பாளர் மயில் வாகனத்தைத்
> தெரியும். ( எப்படி உருதுவிற்கு அமீன் சயானியோ அது மாதிரி )
>
> சிவாஜியின் தாக்கம் தற்போதைய நடிகர்களுக்கு எப்படியோ ?
> சுஜாதாவின் தாக்கம் தற்போதைய இளைய எழுத்தாளர்களுக்கு எப்படியோ ?
> விசுவநாதன் இராமமூர்த்தி யின் தாக்கம் தற்போதைய இசையமைப்பாளர்களுக்கு
> எப்படியோ ?
> அதேபோல் தற்போதைய வானொலி அறிவிப்பாளர்களுக்கு மயில் வாகனத்தின்
> தாக்கம் நிறையவே உண்டு.
>
> அன்புடன்
> சாபு
>
> பி.கு ஹி..ஹி..பெரியவர் ஜே.பியின் தாக்கம் இருப்பதால்தான் இப்படி
> எழுதிக்கொண்டிருக்கிறேன்.
>
> __________________________________________________
> Do You Yahoo!?
> Yahoo! - Official partner of 2002 FIFA World Cup
> http://fifaworldcup.yahoo.com