From jaybee@... Thu May 30 21:37:27 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 31 May 2002 04:37:26 -0000
Received: (qmail 36933 invoked from network); 31 May 2002 04:37:25 -0000
Received: from unknown (66.218.66.217) by m9.grp.scd.yahoo.com with QMQP; 31 May 2002 04:37:25 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 31 May 2002 04:37:26 -0000
Received: from user (sp-103-25.tm.net.my [210.186.103.25]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GWY008IXJFSDV@...> for agathiyar@yahoogroups.com; Fri, 31 May 2002 12:07:06 +0800 (SGT)
Date: Fri, 31 May 2002 12:07:38 +0800
Subject: [agathiyar] Puhaiyilai Maahaanmiyam#2
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020531120738.0078ee5c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18345
புகையிலை மாகான்மியம்
பைப்பில் வைத்துப் புகைக்காமல் நேரடியாகப் புகைக்கும்
வகையில் கைக்கு அடக்கமாகச் செய்துகொண்டார்கள். 'சீகார்'
என்னும் பெயரில் விளங்கிய இதுவும்கூட பெரிய இடத்து
சமாசாரமாகத்தான் விளங்கியது.
துருக்கியர்களின் ஆட்டோமானியப் பேரரசைச் சேர்ந்த
படையினர், காகிதத்தில் புகையிலைத்தூளைச் சுருட்டி புகைப்பதைக்
கண்டுபிடித்ததாகச் சொல்லப்படுகிறது. அவ்வாறு தோன்றியதுதான்
சிகரெட் என்பார்கள்.
ஐரோப்பாவில் முதன்முதலில் சிகரெட்பிரெஞ்சுப் பெண்களால்
புகைக்கப்பட்டது. அவர்களைப் பார்த்து அமெரிக்கப்பெண்களும்
சிகரெட்டைப் பிடிக்க ஆரம்பித்தனர். சீகார் ஆண்களுக்கும் சிகரெட்
பெண்களுக்கும் உரியதாகியது. உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்பட்ட
புகையிலை ஆங்காங்கு ஒவ்வொரு விதமாகப் புகைக்கப்பட்டது.
இந்தியாவில் இலையில் வைத்துச் சுருட்டப்பட்டு 'பீடி' என்ற பெயரில்
புகைக்கப்பட்டது.
தென்கிழக்காசியாவில் ஒருவகைச் செடியின் தண்டில்
இருக்கும் தாளை உரித்தெடுத்து அதில் புகையிலையை அவ்வப்போது
வைத்துச் சுருட்டிப் புகைப்பார்கள். இதனை 'Rokok' என்று அழைப்பார்கள்.
மலேசியத் தமிழர்கள் 'ரோக்கு' என்று சொல்வார்கள். இப்போது
மலாய்மொழியில் சிகரெட், சுருட்டு போன்ற அனைத்துமே 'Rokok என்ற
பெயரில்தான் அழைக்கப்படுகின்றன. 'புகைப்பது' என்னும் வினைச்
சொல்கூட 'merokok' என்றே வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் புகைப்பது ஒரு சிறந்த செயலாகக் கருதப்
படவில்லை. ஆங்கிலேயர்கள் காலத்தில்உறையூரில் சுருட்டு செய்யும்
தொழிலை மையப்பட்டது.
உறையூர் சுருட்டுகள் புகழ்பெற்றவை.
உலகப்புகழ்பெற்ற உறையூர் சுருட்டுக்கூட தமிழர்களிடம்
பரவவில்லை. சிறிய எண்ணிக்கை கொண்ட வயசாளிகள் மட்டுமே
சுருட்டுப் பிடித்தனர். சுருட்டுக்கு ஒரு stigma ஏற்பட்டுவிட்டது.
'கிராமத்துப் பெரிசு'களின் அடையாளமாகிப் போனது.
தமிழர்களிடம் புகையிலையைப் பற்றிசில bias, prejudice,
and preference என்று அடுக்குவார்களே அது ஏறபட்டது.