From jaybee@... Fri May 31 04:01:28 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 31 May 2002 11:01:28 -0000
Received: (qmail 57282 invoked from network); 31 May 2002 11:01:27 -0000
Received: from unknown (66.218.66.218) by m7.grp.scd.yahoo.com with QMQP; 31 May 2002 11:01:27 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 31 May 2002 11:01:27 -0000
Received: from user (sp-103-13.tm.net.my [210.186.103.13]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GWZ008A82MC44@...> for agathiyar@yahoogroups.com; Fri, 31 May 2002 19:01:26 +0800 (SGT)
Date: Fri, 31 May 2002 19:01:58 +0800
Subject: Thuvanggaadha avathaaram
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020531190158.01e60170@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18352
முடியாத போராட்டம் - துவங்காத அவதாரம்
ஒரு நந்தியாவட்டைச் செடி.
அதன் கிளைகளிலும் கொப்புகளிலும் ஊர்ந்துகொண்டு ஒரு
முசுக்கட்டைப் பூச்சி திரிந்தது. அதற்கென்ன வேலை? அதுபாட்டுக்கு
இலைகளைக் கத்தரித்துத் தின்றுகொண்டேயிருந்தது. துக்காணிப்
பூச்சியாக இருந்தது நாளடைவில் பெரியதாக மாறியது.
ஒருநாள்.
அவசரமாகத் தன்வாயின் அடியில் இருந்த பீச்சாங்குழலிலிருந்து
ஒருவகையான பசையைப் பீய்ச்சிவிட்டது. அந்தப் பசை ஒரு மெல்லிழையாக
அதன் உடலின்மீது படர்ந்தது. அதன்பின்னர் தன்னுடைய தலையை ஒரே
சீராகச் சுழற்றியது. அதே சமயம் முன்னும் பின்னுமாகவும் தலையை
அசைத்துவந்தது. ஒரு துருக்கிய டெர்விஷ் பக்கிரி மாதிரி அது தலையைச்
சுற்றியவண்ணம் இருந்தது. அவ்வாறு செய்யச் செய்ய, அதன் உடலை அந்த
மெல்லிய இழைப் பசை சுற்றிக்கொண்டது. சில மணிநேரத்தில் அந்த
முசுக்கட்டையின் உடல் முழுதும் அந்த மெல்லிழையால் மூடப்பட்டு விட்டது.
அது ஒரு கூடாகிவிட்டது. அந்தக் கூட்டிற்குள் அந்த முசுக்கட்டை.
அந்த முசுக்கட்டையின் அந்தர்தியானம் தொடங்கியது.
சிலநாட்கள் கழிந்தன.
அந்த முசுக்கட்டையின் உருவம் மாறிக்கொண்டே வந்தது.
அந்த முசுக்கட்டை ஒரு பட்டாம்பூச்சியாக மாறிக்கொண்டே வந்தது.
அந்தக் கூட்டையும் பிளந்துகொண்டு வர ஆரம்பித்தது.
கூடு அரைவாசி பிளந்திருக்கும். இன்னும் மிச்சம் இருந்தது. மாஜி
முசுக்கட்டை - இன்றைய பட்டாம்பூச்சி - அந்தக்கூட்டிலிருந்து வெளியே
வருவதற்கு ஒரு போராட்டத்தை நிகழ்த்திக்கொண்டிருந்தது.
அப்போது அங்கே ஒரு மனிதன் வந்தான்.
அந்தக் கூட்டிற்குள் அந்த பட்டாம்பூச்சி நடத்திக்கொண்டிருக்கும்
போராட்டத்தைக் கண்டான்.
அந்தப் பட்டாம்பூச்சியின் மேல் அவனுக்கு இரக்கம் ஏற்பட்டது.
அதன் போரட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு விரும்பினான்.
பட்டாம்பூச்சிக்கு சுதந்திரம் கொடுக்கவிரும்பினான். அது கூட்டிலிருந்து
விடுதலையாகிப் பறப்பதைப் பார்க்கவிரும்பினான்.
ஆகவே ஒரு சிறிய கத்திரிக்கோலை எடுத்துக்கொண்டுவந்து
அந்தக் கூட்டை வெட்டி, அந்த பட்டாம்பூச்சியை வெளிப்படச்செய்தான்.
பட்டாம்பூச்சி சுலபமாக வெளியில் வந்துவிட்டது.
ஆனால் அதன் உடல் பருத்திருந்தது. இறக்கைகள்
சுருங்கியிருந்தன. கால்கள் கட்டையாக இருந்தன.
மனிதன் அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருந்தான். இறக்கைகளை
விரித்துப் பறக்கும் என்று எதிர்பார்த்தவாறு ஆவலோடு காத்திருந்தான்.
ஆனால் அது நிகழவேயில்லை.
மீதமுள்ள metamorphosis பரிணாமவளர்ச்சி பூர்த்தியாகவில்லை.
அதற்குள் அந்தக்கூடு வெட்டப்பட்டுவிட்டதே. அதன் முசுக்கட்டை
அவதாரம் முடியவுமில்லை. பட்டாம்பூச்சிஅவதாரம் தொடங்கவுமில்லை.
ஆகவே அந்தப் பட்டாம்பூச்சி கடைசிவரைக்கும் கிளைகளில்
ஊர்ந்து நகர்ந்துகொண்டு வாழ்க்கையை நடத்தலாயிற்று.