From jaybee@... Fri May 31 07:41:11 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 31 May 2002 14:41:11 -0000
Received: (qmail 60582 invoked from network); 31 May 2002 14:41:10 -0000
Received: from unknown (66.218.66.216) by m14.grp.scd.yahoo.com with QMQP; 31 May 2002 14:41:10 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 31 May 2002 14:41:10 -0000
Received: from user (sp-103-222.tm.net.my [210.186.103.222]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GWZ00C8NCOX4B@...> for agathiyar@yahoogroups.com; Fri, 31 May 2002 22:38:59 +0800 (SGT)
Date: Fri, 31 May 2002 22:39:29 +0800
Subject: Re: [agathiyar] Re: Mayil RaavaNan
In-reply-to: <3.0.3.32.20020531141054.0075ab18@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020531223929.007483bc@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <20020530063737.8919.qmail@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18356

At 02:10 PM 5/31/02 +0800, JayBee wrote:
>At 04:22 AM 5/31/02 -0000, Kishore wrote:
>>
> கதை கிட்டத்தட்ட சரிதான். சில இடங்களில் விடுபட்ட செய்திகள்
>இருக்கின்றன. இட்டு நிரப்புகிறேன்.
> மீண்டும் பாராட்டுக்கள்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>


மயில்ராவணன் கதையை வால்மீகி ராமாயணத்திலோ
கம்பராமாயணத்திலோ பார்க்கமுடியாது. செவிவழியாக வழங்கிவந்த
கதைகள் அவை. இந்தியா மட்டுமல்லாது இந்தியாவுக்கு வெளியிலும்
இந்தக்கதைகள் இருக்கின்றன.
மயில்ராவணன் கதை பற்றிய ஆர்வம் எனக்கு ஏற்பட்டதற்குக்
காரணம் உண்டு.
சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்னர் நான் மலேசியாவின்
ஒதுக்குப்புறமான மாநிலத்தில் இருக்கும் காட்டுப்பகுதியில் வேலை
பார்த்தேன். இந்த இடத்தைப் பற்றி ஏற்கனவே விவரித்திருக்கிறேன்.
ஊலூ திரெங்காணு என்னும் மாவட்டத்தில் குவலா ப்ராங் என்னும்
ஊரில்தான் மருத்துவ அமனி. மாவட்டத்தில் சுகாதார அதிகாரியும்
நான். மருத்துவனும் நான். திருவிளையாடல் சிவாஜி போல் எல்லாம்
நானே.
அந்த மாவட்டதில் ஒரு சுகாதார நிலயம் இருந்தது.
சுகாதர நிலையத்தின் நிர்வாகம் ஒரு மருத்துவ உதவியாளரிடம்
இருக்கும். அவர் மருத்துவ அதிகாரியின் கீழும் மாவட்ட சுகாதார
அதிகாரியின்கீழும் இயங்குவார். இங்குஇரண்ட்மே நானாக
இருந்தபடியால் நேரடித்தொடர்பு இருந்து வந்தது.
ச்செ ஆவாங் என்னும் அந்த மருத்துவ உதவியாளருக்கு
அப்போது ஐம்பது வயதுக்கு மேலாகியது. ஜப்பானியர் ஆட்சியில்
அவர்களிடமும் வேலை செய்தவர். நன்றாக ஜப்பானிய மொழி
பேசுவார். ஒரு முறை அவருக்கு லாட்டரியில் லட்சம் ரீங்கிட்
விழுந்தது. ஆகவே ஒரு பெரிய மெர்ஸிடெஸ் பென்ஸ் காரில்தான்
எங்கும் செல்வார். திரெங்காணு சுல்த்தானுக்கு ரொம்பவும்
வேண்டப்பட்டவர். அந்த வட்டாரத்தின் பெரிய மனிதர்களுக்கெல்லாம்
தினம் தினம் ஊசி போட்டுவிடுவார் அவர்கள் வீட்டுக்குச்சென்று.
கொஞ்சம் ஏடாகூடமாக நடந்துகொண்டால் ஊசி போடும்போதே
ஊசி ஏற்றிவிடுவார்.
அவருடைய முப்பந்தைந்து ஆண்டு சர்வீஸில் கண்ட
ஆட்களில் என்னைச் சற்று வித்தியாசமானவனாகக் கருதினார்.
ஆகவே அன்புடன் பழகிவந்தார். மேலும் ஸ்பெஷல் அஸைன்மெண்ட்டில்
வந்த ஆள் என்பதால் சற்றுச் சுதாரிப்பாக இருந்தார்.
அவரிடம் ஒரு கையெழுத்துப் பிரதிக்கட்டு. மலாய் மொழியில்
எழுதப்பட்டது. பிரதியின் பெயர் 'செரித்தெரா ஸெரி ராம'. அது
எழுதப்பட்டிருக்கும் மொழி மலாயாக இருந்தாலும் பழைய பாணியில்
"அஹோ வாரும் பிள்ளாய்" ஸ்டைலில் எழுதப்பட்டிருந்ததால் புரிவது
மிகவும் கஷ்டமாக இருந்தது. மலாயில் 'அஹோ வாரும் பிள்ளா'யை
"Wahai" என்று ஆரம்பிப்பார்கள்.
ஆகவே ச்செ ஆவாங் அதனை ஆங்கிலப்படுத்திச் சுருக்கிச்
சொன்னார். நான் குறிப்பெடுத்துக்கொண்டேன்.
அந்தக் கதையைக் கேட்கும்போது மயில் ராவணன் கதையின்
பல அம்சங்கள் இருந்ததைக் கண்டேன். ராவணனை 'மஹாராஜா வாணா'
என்று குறிப்பிட்டிருந்தது. அவனுடைய தம்பியாக இன்னொருவனையும்
குறிப்பிட்டிருந்தது. அவனுடைய பெயர் 'பெத்தால மஹாராய'. அதாவது
'பாதாள ராவணன்'. கேட்பதற்கு 'மத்தள ராயன்' போல் இருக்கிறதோ?
சில ஆண்டுகள் கழித்துத் தமிழகம் வந்தபோது மயில் ராவணன்
கதையை எழுதிக்கொண்டு வந்துவிட்டேன்.

அன்புடன்

ஜெயபாரதி

=========================