From sarabeswar@... Fri May 31 11:24:20 2002
Return-Path: X-Sender: sarabeswar@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 31 May 2002 18:24:20 -0000
Received: (qmail 94108 invoked from network); 31 May 2002 18:24:20 -0000
Received: from unknown (66.218.66.217) by m7.grp.scd.yahoo.com with QMQP; 31 May 2002 18:24:20 -0000
Received: from unknown (HELO n20.grp.scd.yahoo.com) (66.218.66.76) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 31 May 2002 18:24:19 -0000
Received: from [66.218.67.150] by n20.grp.scd.yahoo.com with NNFMP; 31 May 2002 18:24:19 -0000
Date: Fri, 31 May 2002 18:24:16 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: AnbuLLa Appa
Message-ID: In-Reply-To: <20020530164824.70426.qmail@...>
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 3369
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "sarabeswar" X-Originating-IP: 202.158.28.162
X-Yahoo-Group-Post: member; u=81026296
X-Yahoo-Profile: sarabeswar
X-Yahoo-Message-Num: 18358
அருமையாய் எழுதியிருக்கிறீர்கள் ராம்.
நம் குழந்தைகள் என்ன கவி பாடும் என்றும்
யோசித்ததுண்டா?
அன்புடன்,
குமார்
--- In agathiyar@y..., Los Angeles Ram wrote:
> அன்புள்ள அப்பா
> -------------------
>
> அப்பாவே நீ எனக்கு
> அறிமுகம் ஆகவே இல்லையே
>
> "உன் அப்பா உத்தமன்
> எத்தன் அல்ல வித்தகன்
> புத்தியில் குரு
> சக்தியில் வாலி - தெய்வ
> பக்தியிலோ பெரும் சிரேஷ்டன்
> முக்தி பற்றி முழுதும் தெரிந்த ஞானி"
> என்று
> ஊரிலே பேசிக் கொள்கிறார்கள்
>
> நேரிலே
> அப்பாவே நீ எனக்கு
> அறிமுகம் ஆகவே இல்லையே
>
> கீதையை நீ படிப்பாய்
> காதை காதையாய்ப் பொருளுரைப்பாய்
> சஹஸ்ரனாமங்கள் சரிவரத் தெரிந்தாலும்
> வரி பார்த்துப் படித்திடுவாய்
> பாசுரங்கள் ஆலயங்கள் பற்றி
> நேசமுடன் பேசிடுவாய்
> கண்ணில் நீர் மல்க
> என்னென்னமோ சொல்லிடுவாய்
> எனக்கு ஏதும் புரிந்ததில்லை
>
> அப்பாவே நீ எனக்கு
> அறிமுகம் ஆகவே இல்லையே
>
> சாளிக்கிராம மகிமை பற்றி
> ஒளிச்சுடராம் ராமலிங்கர் பற்றி
> ஓதுவார்கள் கீர்த்தனைகள்
> ஒன்றுவிடாமல் நீ பாடி
> அபிஷேக மகிமை பற்றி
> ஆனந்த நடனம் பற்றி
> பூஜை மணி தினம் அடித்ததெல்லாம்
> செவிடன் என் காது வழி
> சிறிதேனும் ஏறியதில்லை
>
> அப்பாவே நீ எனக்கு
> அறிமுகம் ஆகவே இல்லையே
>
> 'மூன்றாம் பிறை இதற்கு
> மோட்சம் பற்றி என்ன சொல்ல?
> சிறகே முளைக்காத சின்னப் பறவைக்கு
> இறகே இல்லாத இந்தக் குருவிக்கு
> பறப்பது பற்றிப்
> பரந்து விரிந்து கிடக்கும் இவ்வுலகில்
> பறந்து பறந்து விரைந்து
> புண்ணியம் சேர்ப்பது பற்றிக்
> கரைந்து கரைந்து நாம் என்ன
> சொல்லித் தர?
> புரிந்து கொள்ளட்டுமே
> தானே எல்லாம்' என்று தான்
>
> அப்பாவே நீ எனக்கு
> அறிமுகம் ஆகவே இல்லையோ?
>
> மணிக்கணக்கில் உன்னோடு நான்
> நண்பனாய்க் கொண்டாடி
> இருந்திருக்க வேண்டாமா?
> நல்லாசிரியனாய் ஞானகுருவாய் நீ எனக்கு
> போதனைகள் புகட்டியிருக்க வேண்டாமா?
> இலக்கியங்கள் தத்துவங்கள்
> இதிகாச புராணங்கள்
> எல்லாவற்றையும் நாம் சேர்ந்து
> அலசியிருக்க வேண்டாமா?
> சின்னப்பயல் இவனுக்குச்
> சொன்னால் எங்கே புரியுமென்றுதான்
>
> அப்பாவே நீ எனக்கு
> அறிமுகம் ஆகவே இல்லையோ?
>
> வினை முடிந்து
> மடி மீது படுத்திருந்தாய்
> வலது காதில் ராமநாமம்
> கேட்டிருந்தாய்
> அலைச்சலெல்லாம் முடிந்து
> அலுப்பெல்லாம் கரைந்து
> வலை தாண்டி நீ செல்ல
> கவலையில் நான் அழுதேன்
>
> "கர்மமடா இது
> புரியாமல் கதறுகிறாயே" என்று
> தர்மம் புரியவைத்துத்
> தலைசாய்ந்து என் மடியில்
> ஏன் எனக்குச் சொல்லவில்லை?
> நான் உன் செல்லப்பிள்ளை ...
>
> தப்பான பிள்ளை இவன்
> எப்பாடு பட்டும் போதித்து
> என்ன பயன்?
> கூப்பாடு மட்டுமே போட்டு
> கூவித் திரிவான்- பணப்
> பேயாய் அலைந்திடுவான்
> கோபம் பறக்க
> கூட்டம் கூட்டி மிகச் சோம்பல் கண்டு
> ஆட்டம் ஆடிப் பல
> வஞ்சகம் புரிந்திடுவான்
> பிஞ்சிலே பழுத்திடுவான்
> சஞ்சலம் அடைந்தழிவான்
> என்றெல்லாம் தெரிந்துதான்
>
> அப்பாவே நீ எனக்கு
> அறிமுகம் ஆகவே இல்லையோ
>
> "அக்கரையும் தெரியாமல்
> இக்கரையும் இல்லாமல்
> நடுவிலே தவிக்கின்றேன்
> நானெங்கே படகோட்டுகின்றேன்
> அக்கறையோடு உன்னை நான்
> அணைத்தெடுத்துத் தோளில் ஏற்ற
> ஆசைதான் ஆனாலும்
> என் சுமையை எங்கே வைக்க?
>
> சுயமாய்ச் சிந்தித்து
> பயம் தெளிந்து
> பலம் புரிந்து
> குன்றாமல் குறையாமல்
> நன்றாக ஒருமித்துக்
> கூண்டிலிருந்து வெளிவந்து
> கூடவே பாடிவா
> என் ஆன்மாவைத் தேடி வா"
> என்று தான்
>
> அப்பாவே நீ எனக்கு
> அறிமுகம் ஆகவே இல்லையோ!
>
> ------------லாஸ் ஏஞ்சல்ஸ் ராம் ('93 'ப்ரிய ஸகி' கவிதைத்
> தொகுப்பிலிருந்து)