(உன்னியது - வெளிப்படுதல்)
ஞானேந்திரிய, கர்மேந்திரியங்களின் மூலமாக ஏற்படும்
செயல்களினாலேயே உடலில் ஓங்காரமானது(அறிவு)
ஏற்படும். உடலில்லையேல் உணர்வில்லை.
16. மாசற்ற கொள்கை மனத்தி லடைந்தக்கால்
ஈசனைக் காட்டு முடம்பு.
(கொள்கை - கட்டுப்பாடு)
மூல மலங்களாகிய(அல்லன-விலக்கப்பட்டவை) அழுக்குகள்
நீக்கும் கட்டுப்பாடு மனத்தில் அடைந்து
ஆநந்தமடைந்துவிட்டால், எல்லாம் வல்ல ஈசனை உடம்பே
சுட்டிக் காட்டிவிடும்.
(நேசத்தாலாய - ஞானேந்திரிய,கர்மேந்திரிய
ஒற்றுமைகளினால் உண்டாகிய; உணர்வுகள் - அறிவும்
அறிவின் தொடர்புடையவைகளும்;)
ஞானேந்திரிய,கர்மேந்திரிய ஒற்றுமைகளினால்
உண்டாகிய உடல், சப்தத்தினால்(ஜபதபங்கலால் உண்டாக்கும்
ஒலி அலைகளினால்) அறிவு முதலிய அரூபங்களப்
பார்த்துணரும் நிலைக்குக் கொண்டு வந்துவிடும்.
18. உயிற்க்குறுதி யெல்லா முடம்பின் பயனே
அயிர்ப்பின்றி யாதியை நாடு.
ஆதி - ஆதீ - ஆ+தீ - ஆன்மாவாகிய தீ - ஆன்ம
அக்கினி
சந்தேகதிற்கிடமின்றி ஆதியை நாட உயிருக்குறுதி -
இதுவே உடலின் பயன்.
19. உடம்பினாற் பெற்ற பயனாவ வெல்லாம்
திடம்பட வீசனைத் தேடு.
ஈசனை உறுதிபடத் தேடுவதற்காகவே உடல்
கொடுக்கப்பட்டுள்ளது.
20. அன்னத்தா லாய உடம்பின் பயனெல்லா
முன்னோனைக் காட்டி விடும்.
ஆண்களுக்கு அன்னத்தினால் விந்தும், பெண்களுக்குச்
சுரோணிதமும் உண்டாகிறது. இவையிரண்டுங்கூடித்தான்
இன்னுமொரு உடல் எடுக்கிறது. ஒரு சவத்திலிருந்து
இன்னுமொரு சவம் வெளிவருதலால் அதற்குப் பெயர்
"பிர+சவம்". இவகளையுண்டாக்கியது (நாதகலைகள்)
அன்னமே.இப்படிப்பட்ட உடல் செம்மை (செம்+மெய்) ஆனால்,
அவைகள் நம் முன்னோனாகிய இறைவனக் காட்டிவிடும்.