From netranger@... Fri May 31 21:46:32 2002
Return-Path:
X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 1 Jun 2002 04:46:32 -0000
Received: (qmail 24686 invoked from network); 1 Jun 2002 04:46:32 -0000
Received: from unknown (66.218.66.217) by m7.grp.scd.yahoo.com with QMQP; 1 Jun 2002 04:46:32 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.174.30) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 1 Jun 2002 04:46:31 -0000
Received: from smtp1 ([202.9.178.22]) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Sat, 1 Jun 2002 10:22:31 +0530
Received: from 202.9.169.1 by smtp1 (InterScan E-Mail VirusWall NT); Sat, 01 Jun 2002 10:24:42 +0530
Message-ID: <3CF84FB4.2EBBCF01@...>
Date: Sat, 01 Jun 2002 10:08:12 +0530
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: tamil,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: ஞானத்துக்கடா - 4 - எண்ணும் எழுத்தும்( தொடர்ச்சி)
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
Return-Path: netranger@...
X-OriginalArrivalTime: 01 Jun 2002 04:52:31.0531 (UTC) FILETIME=[234BD7B0:01C20928]
From: ஞானவெட்டியான்
X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18369
ஞானத் துக்கடா - 1 (தொடர்ச்சி)
ஆறு :
வேதாங்கம் :
சிட்சை,கற்பம்,வியாகரணம்,நிருத்தம்,சந்தோவிசிதம்,சோதிடம்.
உட்பகைகள் :
காமம்,குரோதம்,உலோபம்,மோகம்,மதம்,மாற்சரியம்.
புறச்சமயங்கள்
உலோகாதயம்,பெளத்தம்,ஆருகதம்,மீமாஞ்சம்,மாயாவாதம்,பாஞ்சராத்திரம்.
அகச்சமயங்கள் :
சைவம்,பாசுபதம்,மாவிரதம்,காளாமுகம்,வாமம்,வைரவம்.
ஏழு :
நாட்டுக்கு வரும் குற்றங்கள் :
விட்டில்,தொட்டியர்,பன்றி,கள்வர்,அவமழை,யானை,கிளி.
முனிவர் :
அகத்தியன்,புலத்தியன்,அங்கிரா,கெளதமன்,வசிட்டன்,காசிபன்,
மார்க்கண்டன்.
நரகம் :
கூடசாலம்,இரெளரவம்,கும்பிபாகம்,பூதி,அள்ளல்,செந்து,மகாபூதி.
கீழுலகம் :
அதலம்,விதலம்,சுதலம்,தராதலம்,இரசாதலம்,மகாதலம்,பாதால(ள)ம்.
மேலுலகம் :
பூலோகம்,புவர்லோகம்,சுவர்லோகம்,மகாலோகம்,சனலோகம்,தவலோகம்,
சத்தியலோகம்.
கடல் : உப்புக்கடல்,கறுப்பஞ்சாற்றுக் கடல், மதுக் கடல்,
நெய்க்கடல்,தயிற்க் கடல்,பாற்க் கடல், சுத்த நீர்க்
கடல்.
திரைகள் :
கருப்பு - மாயா சக்தி
நீலத்திரை - கிரியா சக்தி
பச்சை - பரா சக்தி
சிவப்பு இச்சா சக்தி
பொன்வண்ணம் - ஞான சக்தி
வெண்மை - ஆதி சக்தி
கலப்பு - சிற்சக்தி
பிறப்பு :
ஐந்து மாதம் வரை குழவிப் பருவம்.
அவயவங்கள் உற்பத்திக் காலம்.
பிண்டம் வெளிப்பட்ட காலம்.
குழந்தைப் பருவம்.
பாலப் பருவம்.
குமரப் பருவம்.
முதுமைப் பருவம்.
இதில் சூட்சமப் பிறப்பு 7 :
சாக்கிரம்,சொப்பனம்,சுழுத்தி,சாக்கிரத்தில்
சொப்பனம்,சாக்கிரத்தில் சுழுத்தி,சொப்பனத்தில்
சொப்பனம்,சொப்பனத்தில் சுழுத்தி.
காரணப் பிறப்பு - மனதில் தோன்றும் எண்ணங்களெல்லாம்
தாதுக்கள் :
இரதம்,உதிரம்,எலும்பு,தோல்,இறைச்சி,மூளை,சுக்கிலமாகிய
விந்து.
எட்டு :
சித்திகள் :
அணிமா,மகிமா,கரிமா,இலகிமா,பிராத்தி,பிராகாமியம்,ஈசத்துவம்,வசித்துவம்.
யோகாங்கம் :
இயமம்,நியமம்,ஆசனம்,பிராணாயாமம்,பிரத்தியாகாரம்,தியானம்,தாரணை,
சமாதி.
தருமாங்கம் :
அறமையப் படாமை,
விர்ப்பமின்மை,வெறுப்பின்மை,மயக்கமின்மை,பழியை
நீக்கல்,அழிந்தோரை நிலை நிறுத்தல்,அறுசமயத்தோர்க்கு
அன்பு,அறம் விளக்கல்.
மெய்ப்பரிசம் :
தட்டல்,பற்றல்,தடவல்,தீண்டல்,குத்தல்,வெட்டல்,கட்டல்,ஊன்றல்.
உடற்குறை :
குறள்,செவிடு,மூங்கை,கூன்,மருள்(அலி),குருடு,மா(விலங்கு
உறுப்புடையது),உறுப்பில்லாப் பிண்டம் (ஊனமுற்றது).
ஒன்பது :
தாரணை : நாம தாரணை,மாயா தாரணை,வச்சிர
தாரணை,சித்திர தாரணை,சத்த தாரணை,வத்து
தாரணை,சதுரங்க தாரணை,செய்யுள் தாரணை,எண்பொருட்
டாரணை(நினைவு,குறைவு ஆகிய).
பெரியோருக்குச் செய்யும் புண்ணியம் :
எதிர்கொளல்,பணிதல்,ஆசனத்திருத்தல்,கால்
கழுவல்,அருச்சித்தல்,தூபங்காட்டல்,தீபங்காட்டல்,துதித்தல்,அமுதூட்டல்.
மேற்க்கண்டவற்றிற்கு நூலாதாரம் என் அப்பன் அபுதுல் காதிரு
(காதில்+இரு) பாச்சா, என் பெரியப்பன் சிதம்பரம்
இராமலிங்கம், என் பாட்டன் தணிகை பிரான் முகமது
சாலிகு அவர்களின் கூற்றுக்கள்.
தொடரும்
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழ்நாடு)