From jaybee@... Sat Jun 01 03:48:41 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 1 Jun 2002 10:48:41 -0000
Received: (qmail 16014 invoked from network); 1 Jun 2002 10:48:40 -0000
Received: from unknown (66.218.66.217) by m10.grp.scd.yahoo.com with QMQP; 1 Jun 2002 10:48:40 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 1 Jun 2002 10:48:40 -0000
Received: from user (sp-103-59.tm.net.my [210.186.103.59]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GX00072DWP0XW@...> for agathiyar@yahoogroups.com; Sat, 01 Jun 2002 18:48:39 +0800 (SGT)
Date: Sat, 01 Jun 2002 18:49:07 +0800
Subject: Re: [agathiyar] Puhaiyilai Maahaanmiyam#3
In-reply-to: <20020601085939.6747.qmail@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: Shaboo
Message-id: <3.0.3.32.20020601184907.00784df8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020531120738.0078ee5c@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18381


புகையிலை மாகான்மியம்#3

புகையிலையைப் புகைப்பதை விட, அதை வாயில் போட்டு
ஊறவைத்துக்கொள்வதையும், பொடியாக நாசித்துவாரங்களில் உரிஞ்சிக்
கொள்வதையுமே தமிழர்கள் விரும்பினார்கள்.
வாயில் போடப்படும் புகையிலை, அங்குள்ள உமிழ்நீரில் ஊறும்.
அவ்வாறு ஊறும்போது, அதில் உள்ள தாதுப்பொருள்கள் உமிழ்நீரில்
கரையும்.
அந்தத் தாதுப்பொருட்களில் nicotine, tannin போன்றவை
இருக்கும். புகையிலையை ஐரோப்பாவில்பயிர்செய்யும் வழக்கத்தைத்
தோற்றுவைத்டவர், ழ்ஷான் நிக்கோட் என்னும் பிரெஞ்சுத் தூதுவர்.
அவருடைய பெயரையே புகையிலையில் உள்ள முக்கியமான
ரசாயனப்பொருளுக்குப் பெயர் வைத்துவிட்டார்கள். புகையிலைப்
புகையில் 4000 ரசாயன்ப்பொருட்கள் இருக்கின்றன. அவற்றில்
பெரும்பான்மையானவை விஷத்தன்மை கொண்டவை.
வாயில் உள்ள mucous membrane மூலம் புகையிலைச் சாற்றில்
உள்ள ரசாயனப்பொருள் உட்செல்கிறது. அது ஒருவகையான போதையைத்
தரும். புகையிலைச் சாற்றை விழுங்கிவிடக்கூடாது. மயக்கம் வரும்.
அதுகாறும் 'வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு' என்ற காம்பினேஷன்
மட்டுமே தமிழர்களிடையே இருந்தது. இந்த வரிசையில்தான்
அவற்றைக் குறிப்பிடுவார்கள். ஆனால், 'சுண்ணாம்பு' என்ற சொல்லை
உச்சரிப்பதைத் தவிர்த்தார்கள். ஏனெனில் சுண்ணாம்பில் உள்ள முதல்
இரண்டு எழுத்துக்களும், பெயர் சொல்லப்படக்கூடாததொரு மூன்றெழுத்து
அவயவத்தைக் குறிக்கும் என்று கருதினார்கள். ரொம்பவும் puritanistic-காக
இருந்திருப்பார்கள் போலிருக்கிறது. ஆகவே சுண்ணாம்பை அந்தக்
காலத்தில் இருந்த மரியாதைப்பட்ட பெரியமனிதர்கள், 'மூன்றாவது'
என்றுதான் சொல்வார்கள். 'இடக்கர் அடக்கல்' என்னும் அணியைச்
சேர்ந்தது இந்த வழக்கு.
புகையிலை அந்த வரிசையில் இடம் பிடித்துக்கொண்டுவிட்டது.
'வெற்றிலை பாக்குச் சுண்ணாம்பு' என்ற அடுக்குத்தொடர் மாறி
'வெற்றிலை பாக்குப் போயிலை' என்று ஆகியது. (சாபுவுக்காக -
'வெத்திலை பாக்கு சுண்ணாம்பு, பத்திரி ஏலம் கிராம்பு' என்றொரு பாட்டு
இருக்கிறதே, தெரியுமா?)
ஆயுர்வேத மருத்துவமுறையில் 'ஔஷதப் பிரயோகம்' என்ற
பதத்தைக் காணலாம். ஒன்றுமில்லை, மருந்துகளை எப்படி எப்படிக்
கொடுக்கலாம் என்ற துறை இது. Drug administrationஎன்று இப்போது
சொல்கிறோம் அல்லவா. வாய் மூலமாகச் செலுத்துவது, தைலமாகத்
தடவுவது, ஊசிமூலம் குத்துவது போன்ற சிலமுறைகள் இருந்தன.
அவற்றில் ஒன்று மருந்துப்பொடியை மூக்குத்துவாரத்தின் மூலம் உள்
உரிஞ்சி இழுத்தல். மூக்கினுள் இருக்கும் mucous membrane மூலம்
அந்த மருந்து உடலில் கலந்துவிடும்.
இதனை 'நாசிகா சூர்ணம்' என்று ஆயுர்வேதம் கூறும்.
பயப்படவேண்டாம் - 'மூக்குப்பொடி' அல்லது'மூக்குத்தூள்'.
பக்குவமான புகையிலையைப் பக்குவமானமுறையில் காயவைத்து,
உரலில் போட்டு இடித்துப் பொடியாக்கி, தகுந்த சல்லடைகளால் சலித்து
எடுப்பார்கள். வாழைப்பட்டையைக் காயவைத்து pouch எனப்படும் சிறு
பைகளாகச் செய்து, அவற்றில் பொடியை வைத்து, வாழை நாறால்
கட்டிவிடுவார்கள். இதுதான் 'பொடிமட்டை' எனப்படும்.
சமீபத்தில் பெப்ஸிக்கோலாவுக்கும் கொக்காக்கோலாவுக்கும்
இடையே பெரிய போட்டாபோட்டியே நடந்தது. அதனை 'Cola Wars'
என்று சொல்வார்கள். (அது சரி, இந்த பெப்ஸி உமாவுக்கு ஏதோ டாக்டர்
பட்டம் அப்படி இப்படியென்று ஏதோ ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு
பேச்சு அடிபட்டதே?)
அந்தப் போட்டியையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிடும் அளவுக்குத்
தமிழ்நாட்டில் பொடிப் போட்டி நடந்திருக்கிறது.
யாருடைய பொடி, காரம் மணம் குணம் ஆகிய முக்குணங்களும்
கொண்டவை என்பதைக் குறித்தே ஏற்பட்டபோட்டி.
புகையிலை தமிழகத்தில் சிறப்பிடத்தைப் பிடித்துக்கொண்டது.
திருப்பதி வேங்கடாசலபதி தன்னுடையவலது கரத்தால்(அபயக் கரம்)
இவ்வளவு அகலமும் நீளமும் உள்ள புகையிலையைப் போடுமாறு
உபதேசிப்பதாகவும், தட்சிணாமூர்த்தி தம்முடைய வலக்கரத்தால்
(சின்முத்திரை) காரம் மணம் குணம் நிறைந்த குறிப்பிட்ட பொடியைப்
போடுமாறு உபதேசிப்பதாகவும் சொன்னார்கள்.
இன்னும் ஒரு படி மேலே போய்விட்டார்கள்.

அன்புடன்

ஜெயபாரதி

====================================