From netranger@... Sat Jun 01 04:27:56 2002
Return-Path:
X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 1 Jun 2002 11:27:56 -0000
Received: (qmail 21807 invoked from network); 1 Jun 2002 11:27:56 -0000
Received: from unknown (66.218.66.216) by m8.grp.scd.yahoo.com with QMQP; 1 Jun 2002 11:27:56 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.174.30) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 1 Jun 2002 11:27:55 -0000
Received: from smtp1 ([202.9.178.22]) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Sat, 1 Jun 2002 17:03:55 +0530
Received: from 202.9.169.188 by smtp1 (InterScan E-Mail VirusWall NT); Sat, 01 Jun 2002 17:06:19 +0530
Message-ID: <3CF8ADF7.A7D91FAD@...>
Date: Sat, 01 Jun 2002 16:50:23 +0530
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: tamil,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: awwaikkuRaL 921-30)
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
Return-Path: netranger@...
X-OriginalArrivalTime: 01 Jun 2002 11:33:55.0437 (UTC) FILETIME=[366C41D0:01C20960]
From: ஞானவெட்டியான்
X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18382

ஒளவைக் குறள் (21 - 30)

3. உள்ளுடம்பின் (சூக்கும சரீரம்)
நிலைமை

21. கற்கலாங் கேட்கலாங் கண்ணாரக் காணலா
முற்றுடம்பா லாய வுணர்வு.

ஊன்றிப்பார்ப்பதனால்(perception)
உண்டாகும் சூக்கும உடலில்
உண்டாகும் அறிவாலுருவாகும் உணர்வினால் எல்லாவற்றையும்
கற்கலாம்,
கேட்கலாம், அறிவுக்கண்ணால் பார்க்கலாம்.
இவ்வத்தியாயத்தில்,
உடலென்பது சூக்கும உடலேயாகும்.
இத்தகுதியை அடைந்தவர்கள் மறைகளில் இருக்கும் சாத்திரப்
பூட்டுக்களை
உடைத்துப் பொருள் காணமுடியும், மர்மங்களையும்
அறியமுடியும்.

22. வெள்ளிபொன் மேனிய தொக்கும் வினையுடைய
வுள்ளுடம்பி நாய வொளி.

தூல உடல் எப்படி உள்ளதோ, அதைப் போல சூக்கும
உடலைக் கண்டால்
எப்படியிருக்குமென்றால், வெள்ளியாகிய சுக்கிலத்தின்
நிறத்தையும் நாதத்தின்
பொன் நிறத்தையும் பொருந்தி இருக்கும்.

23. சென்றுண்டு வந்து திரிதரு முள்ளுடம்பு
என்றுங் கெடாத திது.

சூக்கும உடலானது, சங்கல்பித்துள்ள இடங்களுக்குச்
சென்று,
அவ்விடங்களில் உள்ளவற்றைக் கிரகித்துக் கொண்டு
தூலத்திற்க்குத் திரும்பி
வந்து திரிந்து கொண்டிருக்கும். இப்படிப் பட்ட சூக்கும உடல்
தூல
உடலைப்போல் அழிவதில்லை.

24. வருபய னுண்டு மகிழ்ந்துடனா நிற்கு
மொருபயனைக் காட்டு முடம்பு.

சூக்கும உடலானது வேண்டிய பலனை அடைந்து,
ஆநந்தித்து மகிழ்வதோடு,
சுவாலையுடன் கூடிய ஒப்புயர்வற்ற பிரணவத்தில் நிலைத்து
நிற்கும் படியான
பலனைக் காட்டும் (வெளிப்படுத்தும்). ஓங்காரத்தின்
பயனாவது எல்லாத்
தத்துவங்களையும்(உண்மை, (உள்+மெய்)) காட்டி
இராப்பகலற்ற
சிதாகாயத்தில் அணைந்து நிலைத்து நிற்பதே.

25. அல்லற் பிறப்பை யகற்றுவிக்கு மாந்தாய
தொல்லை யுடம்பின் றொடர்பு.

(ஆய்ந்து - ஆராய்ச்சியினால்; ஆய - உண்டாகிய;)
ஆராய்ச்சியினால் உண்டாகிய தொல்லை
கொடுத்துக்கொண்டிருக்கும்

தூல உடலின் தொடர்பாகிய சூக்கும உடலானது,
தொல்லைகளுடன் கூடிய
இப்பிறவிப் பிணியை அகற்றும் (ஒழித்தலில்லை).

26. நல்வினையுந் தீவினையு முண்டு திரிதருஞ்
செய்வினைக்கும் வித்தா முடம்பு.

தூல உடல் நல்வினையையும் தீவினையையும் அடைந்து
திரிந்துகொண்டிருக்கும். சூக்கும உடலோ ஞான
காரியங்கள் செய்வதற்கு
விதையாக நிற்கும்.

27. உள்ளுடம்பின் வாழ்வன வொன்பது மேழைக்
கள்ள வுடம்பாகி விடும்.

தூல உடலிலுள்ள நவத்துவாரங்கள் அறிவின்
வசப்படாததாலும், சூக்கும
உடலின் சூட்சும நவத்துவாரங்கள் அறிவின் வழியே
செல்வதாலும், தூல உடல்
செயலற்ற நிழலுடம்பாகிவிடும். தூல உடலிலுள்ள
நவத்துவாரங்கள்
வேறு;சூக்கும உடலின் சூட்சும நவத்துவாரங்கள் வேறு.

28. பொய்க்கெல்லாம் பாசனமா யுள்ளதற்
கோர்வித்தாகு
மெய்க்குள்ளா மாய வுடம்பு.

எல்லாப் பொய்கட்கும் ஆதாரமாயுள்ள தூல உடலுக்குள்
இருக்கும் சூக்கும
உடல் மெய்க்கு ஒரு வித்தாக உள்ளது. ஞானகர்மத்திற்கு,
இந்திரியங்கள்
ஆசையற்று நின்று சூக்கும உடலையடையும். தூல உடலில் உள்ள
இந்திரியங்கள் ஞானவிரோதமாக கிளர்ச்சி செய்யும்
ஆகையால்
"பொய்க்கெல்லாம் பாசனம்" என்றார்.

29. வாயுவினா லாய வுடம்பின் பயனே
யாயுவி னெல்லை யது.

ஆயுவு - ஆயுள். உடலிலுள்ள பிராணனுடைய
இயக்கத்தினாலேற்பட்ட
பிராணவாயுவுவே ஆயுள் முடிவதற்கு ஆதாரமமாயுள்ளது.
பிராணவாயுவுக்கு
ஆயுளை முடிப்பதற்கு அதிகாரம் ஏற்ப்பட்டதுக்குக் காரணம்
அசைவே.

30. ஒன்பது வாசலுமொக்க வடைத்தக்கா
லன்பதி லொன்றா மரன்.

குருபிரான் சுட்டிக்காட்டும் (சூட்சும) நவத்துவாரங்கள்
ஒன்பதையும்
அடைத்தால் ஐம்பது பீஜங்களோடு ஐம்பத்தி ஒன்றாகச்
சிவனிறுப்பான்.
இவ்வைம்பத்தொன்றுமே, சிதம்பர இரகசியமாகும்.(ஞானத்
துக்கடா 3ல்
விளக்கம்)

"ஈறுசெய் மூலமதில் நாலதாகும்
எண்ணரிய லிங்கத்தே
ஆறதாகும்
கூறியதோர் ஆலடியில்
பத்ததாகும்
குறிப்புடைய முக்கோணத்தில்
பனிரெண்டதாகும்
பேரரிய காலதனில்
பதினாறதாகும்
பேசரிய வாயதனில்
ரெண்டதாகும்
மாரிலாக் குருபதத்தே
ஒன்றதாகும்
மன்னிய சீரட்சரங்க
ளன்பத்தொன்றே
குருபதத்தி லொன்றென்பதே
பரமசிவமாகும்."

(நூலாதாரம் தெரியவில்லை - மன்னிக்கவும்)


- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழ்நாடு)