From sadayan50@... Sun Jun 02 03:38:12 2002
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 2 Jun 2002 10:38:11 -0000
Received: (qmail 99892 invoked from network); 2 Jun 2002 10:38:11 -0000
Received: from unknown (66.218.66.217) by m14.grp.scd.yahoo.com with QMQP; 2 Jun 2002 10:38:11 -0000
Received: from unknown (HELO web13806.mail.yahoo.com) (216.136.175.16) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 2 Jun 2002 10:38:11 -0000
Message-ID: <20020602103811.63357.qmail@...>
Received: from [213.42.0.245] by web13806.mail.yahoo.com via HTTP; Sun, 02 Jun 2002 03:38:10 PDT
Date: Sun, 2 Jun 2002 03:38:10 -0700 (PDT)
Subject: Re: Kottaippaakkum kaLippaakkum - Re: [agathiyar] Puhaiyilai Maahaanmiyam#3
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20020602175335.0220cea4@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 18392


--- jaybee wrote:
> At 11:27 PM 6/1/02 -0700, you wrote:
> >
> >--- jaybee wrote:
> >
> >>
> >> "எங்கே அந்தப் பாட்டைத் திருப்பிச் சொல்லும்?"
> >>
> >> "கொட்டை பாக்கும்
> >> கொழுந்து வெத்தலையும்
> >> போட்டா வாய் செவக்கும்......"
> >
> >
> >அகத்தியக் குடிலிலிருக்கும் நக்கீரரே.....
> >
> >திரைப்பட பாடலாசிரியரின் மின்னஞ்சல் முகவரியைத் தேடிக்
> கொண்டிள்ளேன்.
> >உங்கள் மடலை எத்திவைக்க;-)))
> >
> >=====
> >அன்புடன்
> >
> >சாபு
> >துபாய்
>
>
> தேடுங்கள். அதற்குள் அந்தக் 'கொட்டைப் பாக்கை'ப்
> பற்றிய இன்னொரு பாடலைப் பார்த்துவிடுவோம்.
>
> இந்தப்பாடலைப் பாடியவர் காளமேகப்புலவர். திருமலைராயன்
> அரசவையில் திருமலைராயன்பட்டினத்தின் அறுபத்துநான்கு தண்டிகைப்
> புலவர்களுடன் ஏற்பட்ட போட்டியில் யமகண்டம் பாடினார் அல்லவா,
> அவர்?
> அப்போது ஒரு புலவர்,
> "கொட்டைப் பாக்கு என்று ஆரம்பித்துக் களிப்பாக்கு என்று
> முடி", என்று சமிசை விடுத்தார்.
>
> கொட்டைப்பாக்கு + களிப்பாக்கு?
>
> பாக்கு மரத்திலிருந்து பறிக்கப்பட்ட பாக்கை ஊறவைத்து
> அதன்மேலுள்ள பட்டைகளை உரித்து எடுத்துவிடுவார்கள். உள்ளே
> இருப்பது கிட்டத்தட்ட உருண்டைவடிவில் இருக்கும். அதனை
> இன்னும் நன்றாகக் காயவைப்பார்கள். (இது எப்படித் தெரியும்?
> நான் வளர்ந்த ஊரே பாக்குத்தீவுதானே - Pulau Pinang. அதைத்தான்
> ஆங்கிலத்தில் Penang என்றும் தமிழில் பினாங்கு என்றும் சொல்கிறோம்.
>
> பினாங்கு ஒரு காலத்தில் ஒரு பெரிய பாக்குச்சந்தை. இரண்டாம்
> உலகயுத்தத்தில் குண்டு விழுந்து நாசமாகிய கட்டடங்கள் இருந்த
> இடத்தில் வழுவழுப்பான சிமிண்டுத்தரை எஞ்சியிருக்கும். எங்கள்
> வீட்டுக்கு எதிர்வரிசையில் இருந்த அந்த மாதிரி இடங்களில்
> பாக்கைக் காயவைப்பார்கள்).
> அந்தப் பாக்கைக் கொட்டைப் பாக்கு என்று சொல்வார்கள்.
> பாக்கு பச்சையாக இருக்கும்போது அதனை குறுக்கு
> வெட்டாக வெட்டுவார்கள். Slice slice-ஆக விழும். அந்தத்
> துண்டுகளைக் காயவைப்பார்கள்.
> அது உலர்ந்த பின்னர் அது 'களிப்பாக்கு' ஆகும்.
> சாதரணமாக வெற்றிலையுடன் பயன்படுவது களிப்பாக்குதான்.
>

அதென்னமோத் தெரியவில்லை. இந்த பினாங்குப் பாக்கை வெண்கலத்தால்
செய்யப்பட்ட பாக்கு வெட்டியால் வெட்டுவார்கள். சொல்லி வைத்த மாதிரி
சரி சமமாக சரி பாதியாக பாக்கு வெட்டுப்படும்.

சரி எதற்காக பாக்குவெட்டும் படலம் தெரியுமா ? இஸ்லாமியத்
திருமணங்களில், திருமணம்( நிக்காஹ்) முடிந்து வலிமா விருந்து
கொடுக்கப்படும். அப்போது சாப்பிட்டவர்களுக்கு தாம்பூலம் தரப்படும் இதற்கு
'சுருள்' எனப்பெயர்.இந்தச் 'சுருள்' என்பது.

நல்ல காம்பு நீக்கப்பட்ட கும்பகோணம் வெற்றிலை இரண்டை வைத்து, இரண்டுக்கும்
நடுவிலே சரியான அளவு அதாவது வாய் வெந்து விடாமல் சுண்ணாம்பையும் வைத்து
நடுவிலே இந்த வெட்டிய பாக்கை வைத்து அழகாக முக்கோண வடிவில் மடித்து,
மடிப்பு பிரிந்து விடாமலிருக்க ஒரு 'கிராம்பையும்' குத்தி வைப்பார்கள்.
இதுதான் 'சுருள்'. பெரிய மரவையில் ( தாம்பாளம்) அழகாக அடுக்கி முன்
வாசலில் ஒரு மேசை போட்டு அதில் வைத்திருப்பார்கள், சாப்பிட்டு விட்டு
இதில் இன்றையும் எடுத்துக் கொண்டு போய்க்கொண்டே இருப்பார்கள். இதிலும் ஒரு
சூட்சுமம் உள்ளது. திருமண அழைப்பு ஆயிரம் ரெண்டாயிரம் என்று
கொடுப்பார்கள். ஆனால் எத்தனை பேர் வந்து சாப்பிட்டார்கள் என்று கணக்கு
வேண்டுமல்லவா . சுருள் மடிக்கும் பெண்கள் மரவையில் சுருளை அடுக்கும்போதே
இத்தனை என்று எண்ணி வைப்பார்கள். அதில் சாப்பிட வந்தவர்களின் கணக்கு
தெரிந்து விடும்.

இப்போதெல்லாம் 'சுருள்' கிடையாது. விலைவாசி காரணத்தாலோ அல்லது
சிக்கனம் கருதியோ மரவையில் ரோஜா பாக்கை வைத்து கொடுத்து
விடுகிறார்கள்.

=====
அன்புடன்

சாபு
துபாய்

__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! - Official partner of 2002 FIFA World Cup
http://fifaworldcup.yahoo.com