From jaybee@... Sun Jun 02 04:56:27 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 2 Jun 2002 11:56:27 -0000
Received: (qmail 99406 invoked from network); 2 Jun 2002 11:56:26 -0000
Received: from unknown (66.218.66.218) by m8.grp.scd.yahoo.com with QMQP; 2 Jun 2002 11:56:26 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 2 Jun 2002 11:56:26 -0000
Received: from user (sp-103-63.tm.net.my [210.186.103.63]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GX20015EUHZSW@...> for agathiyar@yahoogroups.com; Sun, 02 Jun 2002 19:56:25 +0800 (SGT)
Date: Sun, 02 Jun 2002 19:54:45 +0800
Subject: Guru Parambarai#1
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020602195445.021c7bf0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18393
அன்பர்களே,
இது ஒரு கதை. ஆனால் இதில் யாருக்கோ ஏதோ சொல்லி
யிருக்கிறேன்.
இதனை சிறு சிறு பாகங்களாக அனுப்புகிறேன்.
அன்புடன்
ஜெயபாரதி
----------------------Please read on-------------
குருபரம்பரை
பெரிய துறவி ஒருவர் மகாசமாதி அடையும் நிலையில் இருந்தார்.
உண்மையிலேயே பற்றற்ற நிலையில் வாழ்ந்துவந்தவர்.
அவருக்கு யார் குரு, அவருடைய பூர்வாசிரமம் என்ன, துறவியான
பின்னர் எங்கெல்லாம் சென்றார், என்னவெல்லாம் படித்திருக்கிறார் என்ற
விபரமெல்லாம் யாருக்கும் தெரியாது. அவருக்கென்று எதுவுமே வைத்துக்
கொண்டதில்லை. ஒரு பிச்சைப்பாத்திரம், ஓடு போல் எதுவுமே கிடையாது.
ஒரு கோயில் மண்டபம். அதில் இருப்பார்.அல்லது அதன் அருகில் உள்ள
அரசமரத்தின் மேடை.
என்று பட்டினத்தார் சொன்னது போல் வாழ்ந்துவந்தார். இன்னும் சொல்லப்
போனால் அந்த வேட்டியையும்கூட அவர் மற்றவர்களுக்காகத்தான்
கட்டியிருந்தார். பசிக்கும்போது ஏதாவது ஒரு வீட்டின் முன்னால் நிற்பார்.
அந்த வீட்டுக்காரர் உணவு கொண்டுவந்து நீட்டும்போது இருகைகளையும்
ஒன்றாகச் சேர்த்து ஏந்துவார். அது கொள்ளுமளவுக்கு பிச்சையைப்
போடுவார்கள். அப்படியே அதனைக் கையில் வைத்துக்கொண்டே உண்பார்.
அதன் பின் நீரருந்துவார். பிறகு போய்விடுவார். 'அம்மா பிச்சை' என்றெல்லாம்
கேட்பதில்லை. அவர்களாகவே போட்டால்தான் உண்டு. சிலர் அவர்
இருப்பிடத்துக்கு வந்து உணவை வைத்துவிட்டுப்போவார்கள்.
பசித்தால் உண்பார்.
அவருடைய அறிவையும் ஆற்றலையும் பற்றி வியந்து பேசிக்
கொள்வார்கள்.
அவராகக் கூட்டமேதும் திரட்டாமலேயேஅவருக்குச் சீடர்
கூட்டமொன்று இருந்தது. அவர்கள்தாம் தம்மைத்தாமே அவருடைய
சீடர்களாகக் கூறிக்கொள்வார்கள். அவர் ஏதும் கண்டுகொள்வதில்லை.
ஓர் இளைஞன் அவரிடம் மிகுந்த பக்தியும் பிடிப்பும் வைத்திருந்தான்.
துறவி மகாசமாதி அடையும்தருவாயில்அந்த இளைஞன் அவரிடம் வந்தான்.
அவருடைய குரு பரம்பரையைப் பற்றி அறிந்துகொள்ள அவனுக்கு ஆசை.
ஆகவே உபநிஷத்தில் உத்தாலக ஆருணி முனிவரிடம் சுவேதகேது
கேள்வி கேட்டதுபோல் கேட்டான்.
"சுவாமி! இப்போதாவது சொல்லுங்கள். உங்களுடைய குரு யார்?
உங்கள் குரு பரம்பரை என்ன?
லேசாகக் கண்களைத் திறந்துபார்த்துவிட்டு, அவனை மிக அருகில்
வைத்துக்கொண்டு சொல்லலானார்:
"என்னுடைய வாழ்க்கையில் மூன்று பேர் என்னுடைய குருமார்களாக
விளங்கினார்கள்".
"நான் துறவியாகிய ஆரம்பகாலத்தில் நானும் ஏனைய பல
சாமியார்களைப்போலவே ஆசார நுஷ்டானங்களைக் கடைப்பிடித்து
வந்தேன்".
ஆனால் என்னுள் ஒரு வெட்கை - ஓர் ஆன்மதாபம் - இருந்து
கொண்டேயிருந்தது. ஒரு தேடல். அதனைத் தீர்ப்பது எப்படி என்பதுதான்
தெரியவில்லை. என்னுடைய உடமைகளை மூட்டையாகக் கட்டிக்கொண்டு
ஊரூராகத் திரிந்தேன்".