From jaybee@... Sun Jun 02 05:00:41 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 2 Jun 2002 12:00:41 -0000
Received: (qmail 26636 invoked from network); 2 Jun 2002 12:00:40 -0000
Received: from unknown (66.218.66.217) by m11.grp.scd.yahoo.com with QMQP; 2 Jun 2002 12:00:40 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 2 Jun 2002 12:00:40 -0000
Received: from user (sp-103-63.tm.net.my [210.186.103.63]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GX200G3IUP2TF@...> for agathiyar@yahoogroups.com; Sun, 02 Jun 2002 20:00:39 +0800 (SGT)
Date: Sun, 02 Jun 2002 20:01:10 +0800
Subject: Guru Parambarai#2
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020602200110.02202de0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18394


குருபரம்பரை#2

ஒருநாள் ஒரு குளக்கரையில் நின்றுகொண்டு கையில் இருந்த
குவளையால் தண்ணீரைச் சேந்திக்கொண்டிருந்தேன். அப்போது ஒருநாய்
வந்தது. கடும் தாகம் அதற்கு. வேகமாக வந்த நாய் அந்தக் குளத்தில்
குதித்தது. பின்னர் தண்ணீரை ஆசைதீருமட்டும் ஆனந்தமாகக் குடித்தது.
அந்த நாயைப் பார்த்ததும் எனக்குப் பொறிதட்டியது.
உடனே கையில் இருந்த குவளையைத் தூர எரிந்தேன். கரையில்
இருந்த என் உடமைகளை எடுத்தேன் அவற்றையும் குளத்தில் வீசி எரிந்தேன்.
எந்த உடமையுமே இல்லாமல் அந்த நாய் இந்த உலகில்
வாழவில்லையா?
என்னைப் படைத்த இறைவன் இருக்கிறான்.
பற்றற்றதன்மையையும் சரணாகதித் தத்துவத்தையும் நான் அப்போது
உணர்ந்துகொண்டேன்.
அதை உணர்த்தியது அந்த நாய்.
அந்த நாய்தான் என்னுடைய முதல் குரு.

அன்புடன்

ஜெயபாரதி

============================