From jaybee@... Sun Jun 02 05:05:45 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 2 Jun 2002 12:05:45 -0000
Received: (qmail 14379 invoked from network); 2 Jun 2002 12:05:45 -0000
Received: from unknown (66.218.66.217) by m5.grp.scd.yahoo.com with QMQP; 2 Jun 2002 12:05:45 -0000
Received: from unknown (HELO ipop1) (202.188.0.245) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 2 Jun 2002 12:05:44 -0000
Received: from user (sp-103-63.tm.net.my [210.186.103.63]) by ipop1.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GX2004FBUXI8Q@...> for agathiyar@yahoogroups.com; Sun, 02 Jun 2002 20:05:44 +0800 (SGT)
Date: Sun, 02 Jun 2002 20:06:13 +0800
Subject: Guru Parambarai#3
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020602200613.021c7bf0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18395



குருபரம்பரை#3


அதன்பின்னர் நான் ஊர் ஊராகச் சுற்றும்போது உடல்நலிவு
ஏற்பட்டுவிட்டது. ஒருநாள் மயங்கிப்போய் ஒரு மரத்தடியில் நான்
கிடந்தேன். அப்போது அங்கே வந்த ஓர் ஆள் என்னைக் கைத்தாங்கலாகத்
தாங்கிச்சென்று தன் வீட்டிற்கு அழைத்துச்சென்றான்.

வீட்டுக்குள் நுழையப்போகும்போது அவன்சொன்னான்.
"ஐயா சாமியாரே! நான் ஒரு திருடன். என் வீடு இது. உள்ளே வருவதற்கு
உங்களுக்கு மனச்சமாதானம்தானே?"

நான் சற்றுத் தயங்கினேன்.

அவன் தொடர்ந்தான்.
"நான் ஒரு திருடன் என்பது யாருக்கும் தெரியாது. என்னுடைய
குலத்தொழிலே திருடுவதுதான். அந்தத் தொழிலைத் தவிர வேறெதுவும்
தெரியாது. ஆனால் அக்கிரமமான முறையில் நான் திருடுவதேயில்லை.
எனக்கென்று ஒரு தர்மம் வைத்திருக்கிறேன். நிறைய தானமும்
செய்வேன். இது என்னுடைய வாழ்க்கை முறை".

அப்போதும் தயங்கினேன்.

"நீங்கள் ஒரு துறவி. உங்களைப் பொறுத்தவரைக்கும் எல்லாரும்
ஒரே மாதிரிதான். திருடனோ, வேந்தனோ, துறவியோ அனவரும் உங்கள்
கண்ணுக்கு ஒன்றாகத்தான் தெரியவேண்டும்.யாரையும் நீங்கள்
ஒதுக்கமுடியாது. அது உங்கள் தர்மம்.
நான் திருடன். உங்களைப் பாரமாக நினைக்கவில்லை.
என் வீட்டுக்கு உங்களை மனப்பூர்வமாக அழைக்கிறேன். நீங்கள் துறவி.
என்னைப் புறம்பாக நினையாது நீங்கள் வரவேண்டும்".

நான் உள்ளே நுழைந்தேன்.

எனக்குச் செய்யவேண்டியவற்றை அவன் செவ்வனே செய்தான்.
பின்னர் அன்றிரவு அவன் வெளியில் புறப்பட்டான்.
"தொழிலைப் பார்க்க நான் செல்கிறேன். பத்திரமாக இருங்கள்"
என்று சொல்லிவிட்டுச் சென்றான்.

காலையில் திரும்பினான்.

"இன்று ஒன்றுமே கிடைக்கவில்லை. பரவாயில்லை. இரவு ஏதாவது
கிடைக்கும்", என்று சிரித்தமுகத்தோடு சொன்னான்.

அன்றிரவும் சென்றான்.

காலையில் வெறுங்கையோடு திரும்பினான். ஆனால் சிரித்த
முகத்தோடு, "அடுத்தமுறை நிச்சயம் கிட்டும்" என்று சொல்லிவிட்டு
நிம்மதியாகத் தூங்கச்சென்றான்.

நான் அவனுடன் ஒரு மாதம் இருந்தேன்.

அத்தனை நாட்களிலும் அவன் எனக்கு வைத்தியமும் செய்து,
உணவும் கொடுத்து, கவனமாக என்னைப் பார்த்துக்கொண்டான்.
அத்தனை நாட்களிலும் அவன் திருடச் சென்றுவிட்டு வெறுங்கையுடனேயே
திரும்பினான்.
ஆனாலும் அவனுடைய சிரித்தமுகம் மட்டும் மாறியதே இல்லை.
"அடுத்தமுறை நிச்சயம் கிட்டும்", என்பதைஅவன் தாரக மந்திரமாகக்
கொண்டிருந்தான்.

பிறகு நான் தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கினேன். தியான
யோகத்தில் மிக ஆழமாக ஈடுபட்டேன். ஆனால் ரொம்பநாட்களுக்கு
மனம் ஒடுங்கவேயில்லை. பல எண்ணங்கள் தோன்றி அலைக்கழித்தன.
சித்திரவதையாக இருந்தது. பலசமயங்களில் எல்லாவற்றையும்
விட்டுவிடுவோம் என்று தோன்றும்.
'எப்போது மனது ஒடுங்கும். எப்போது சமாதிநிலை கைகூடும்?
எப்போது நம் ஆன்மீகப்பயணத்தில் ஒரு நிறைவெய்துவோம்?' இந்த
வேட்கைச் சுட்டெரித்தது. பேசாமல் எல்லாவற்றையும் தூக்கியெறிந்துவிட்டு
உலக வாழ்க்கைக்கே திரும்பிவிடுவோமா என்றும் தோன்றும்.
அப்போதெல்லாம் அந்தத் திருடனின் மலர்ந்த முகமே தோன்றும்.
"அடுத்தமுறை கிட்டும்" என்னும் அவனுடைய சொற்கள் என் காதுகளில்
ஒலிக்கும். ஆகவே விடாப்பிடியாக ஆத்மசாதனையில் ஈடுபட்டேன்.
ஒருநாள் சமாதிநிலையை எய்தினேன். அதனுடன் சேர்ந்து கிட்டும்
ஆற்றல்களும் தலைப்பட்டன".
"அந்தத் திருடன், 'துறவி' என்னும் என்னுடைய சுயதர்மத்தை
எனக்கு போதித்தான். விடாமுயற்சியுடன் ஆத்மசாதனையைப் புரிய
தூண்டலாக விளங்கினான். என்னுடைய வழியைக் காட்டினான்.

அந்தத் திருடன்தான் என்னுடைய இரண்டாவது குரு".

அன்புடன்

ஜெயபாரதி

===========================