From jaybee@... Sat Jun 08 16:23:15 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 8 Jun 2002 23:23:15 -0000
Received: (qmail 2632 invoked from network); 8 Jun 2002 23:23:15 -0000
Received: from unknown (66.218.66.218) by m12.grp.scd.yahoo.com with QMQP; 8 Jun 2002 23:23:15 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 8 Jun 2002 23:23:10 -0000
Received: from user (sp-103-45.tm.net.my [210.186.103.45]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXE002H1UAJE9@...> for agathiyar@yahoogroups.com; Sun, 09 Jun 2002 07:23:09 +0800 (SGT)
Date: Sun, 09 Jun 2002 07:23:25 +0800
Subject: RasaVaadham #2
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020609072325.01b0e018@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18500
ரசவாதம்#2
சிலர் செம்பைப் பொன்னாக்கினர் .சிலர் பாதரசத்தையும்,
வேறுசிலர் காரீயத்தையும் பொன்னாக்கினர். சிலர் மூலிகைச்
சாறுகளையும் பயன்படுத்தினர். வேறு சிலரோ மந்திரங்களைப்
பயன்படுத்தினர். இன்னும் சிலர், மனத்தில் நினைத்தமாத்திரத்திலேயே
சாதாப்பொருள்களைப் பொன்னாக்கி வியக்கவைத்தனர்.
நவீன ரசாயன விதிகளின்படியும் பௌதிக விதிகளின்படியும்
செயற்கையாகத் தங்கம் தயாரிக்கமுடியுமா?
முடியும். பாதரசம், காரீயம், பிலட்டினம், தங்கம் ஆகியவற்றின்
அணுத்தொகுப்பையும் அணுத்துகள்களின் தொகுப்பையும்
அணுச்சிதைவுமூலம் மாற்றியமைத்துத் தங்கமாக்கலாம் என்பது
தத்துவார்த்தரீதியில் சாத்தியமாகலாம். ஆனாலும்கூட அதனைச்
சாதிப்பதற்குரிய கருவிகள் இன்று நம்மிடையே கிடையாது. ஓர்
ஊசி முனையளவு தங்கம் செய்யப் பலகோடி டாலர்கள் செலவிட
வேண்டிவரும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ரசவாதத்தின்மூலம் கண்டுபிடிக்கப்பட்ட பல மருந்துகள்
நோய்களில் பலவற்றைக் குணப்படுத்தப் பயன்பட்டன. சில
மருந்துகள் காயகல்பத்துக்குப் பயன்படுத்தப்பட்டன. 'காயம்'
என்றால் உடல். உடலை இளமையுடன் கெடாமலும் நோயணுகாமலும்
நீண்டகாலத்திற்கு வைத்திருந்து உயிரோடிருத்தலையே 'காயகல்பம்'
என்று கூறுகிறோம். காயகல்பத்தில் மருந்துகளுடன் பல
யோகமுறைகளும் எடுத்தாளப்பட்டன.
சாவைத் தவிர்த்து சிரஞ்சீவித் தன்மையை நல்கும்
மருந்துகளையும்கூட காயகல்பவாதிகள், ரசவாதிகள் ஆகியோர்
பன்னெடுங்காலமாகக் கண்டுபிடிக்க முயன்றவாறு இருக்கின்றனர்.
'அமிர்த சஞ்சீவி' என்று இந்தவகை மருந்துகளை அழைத்தனர்.
இவ்வகையில் மந்திரங்கள்கூட இருந்தன. பலவகையான
யோகசமாதிமுறைகளையும் அவர்கள் கடைப்பிடித்தனர்.
'Elixir of Life' என்பதும் 'Philosopher's Stone' என்பதுவும்
இவ்வகை மருந்துகளைக் குறிப்பனவாகும்.
'பிரம்மராக்ஷஸ்' என்னும் அற்புதமான சிறுகதையைப்
புதுமைப்பித்தன் எழுதியிருக்கிறார். அதில் மேற்சொன்ன சில
விஷயங்கள் வரும்.
வேறு சில சித்தர்கள் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தி
இறைப்பொருளுடன் ஒன்றுவதையே ஒருவிதமான ரசவாதமாகப்
பயின்றனர். இதையே 'தெய்வீக ரசவாதம்' என்றும் 'பேரின்பரசவாதம்',
'இன்பரசவாதம்', என்றும் 'ஞானரசவாதம்' என்றும் சொல்வார்கள்.
சூஃபி ஞானிகள் இதனை 'கீமியா -ஏ-ச'ஆதத்' என்று குறிப்பிடுவார்கள்.
இயற்கையிலேயே பொன்னாக இருப்பது ஒருநிலை.
ரசவாதத்தின்மூலம் உருமாறித்தோன்றிய பொன் இன்னொரு நிலை.
இவ்வாறு இரண்டு நிலைகளில் பொன் இருக்கிறது.
அதுபோலவே, 'இறைப்பொருள்' என்பது ஒருநிலை.
பரிசுத்தமான ஆன்மா, கர்மங்களின் உபாதிகள் அற்று இறைத்தன்மையை
அடையும் நிலையாகிய 'கைவல்யம்' என்பது இன்னொரு நிலை.
செம்பு இயற்கையில் களிம்பு ஏறும் தன்மையைக் கொண்டது.
பொன்னுக்கு அந்தக்குற்றம் கிடையாது.
ரசவாதத்தின்மூலம் களிம்பே ஏறாத பக்குவநிலையடைந்த
செம்பு பொன்னாகும் தன்மையைப் பெற்றுக்கொண்டது. அதுபோன்று
மலங்கள் பற்றாத நிலையில் ஆன்மா பரிசுத்தமாகி பரமான்மாவாக
விளங்கும். இது ஒருவிதமான அத்துவித நிலை.
என்று திருமூலர் கூறியிருக்கிறார். பொன்னைச் சிவமாகவும்
செம்பைச் சீவனாகவும் களிம்பேறும் தனமையை மலங்கள் பற்றும்
நிலையாகவும் சிலர் உருவகப்படுத்துவர்.
சிக்கலான தத்துவந்தான். எளிமைப்படுத்திக் கூறியிருக்கிறேன்.
புரிபவர்களுக்குப் புரிந்துவிடும்.
அருணகிரிநாதர் இயற்றிய நூல்களில் 'திருவகுப்பு ' என்னும்
தொகுப்பு நூலும் உண்டு. இந்நூலில் 'சித்துவகுப்பு' என்னும் பாடல்
இருக்கிறது. அதில் ரசவாத வித்தையை விவரித்திருக்கின்றார்.
ஆனால் அப்பாடலில் மறைபொருளாக விளங்குவது, 'ஞானரசவாதம்'தான்.
இம்மாதிரியான ஞான ரசவாத நூல்கள் தமிழில் மட்டுமின்றி
சீனத்திலும் அரபு மொழியிலும் கிரேக்க லத்தீன் மொழிகளிலும்
இருந்திருக்கின்றன.
'கீமியா எ ச'ஆதத்' என்னும் நூலொன்று பேரின்பரசவாதத்தைப்
பற்றியது. இந்நூல் தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது.