From jaybee@... Sun Jun 09 08:45:50 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 9 Jun 2002 15:45:50 -0000
Received: (qmail 29284 invoked from network); 9 Jun 2002 15:45:49 -0000
Received: from unknown (66.218.66.218) by m4.grp.scd.yahoo.com with QMQP; 9 Jun 2002 15:45:49 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 9 Jun 2002 15:45:49 -0000
Received: from user (sp-103-31.tm.net.my [210.186.103.31]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXG00GGP3SA43@...> for agathiyar@yahoogroups.com; Sun, 09 Jun 2002 23:45:48 +0800 (SGT)
Date: Sun, 09 Jun 2002 23:46:02 +0800
Subject: RasaVaadham #3
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020609234602.017d7634@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18513
ரசவாதம்#3
இம்மாதிரியான ஞான ரசவாத நூல்கள் தமிழில் மட்டுமின்றி
சீனத்திலும் அரபு மொழியிலும் கிரேக்க லத்தீன் மொழிகளிலும்
இருந்திருக்கின்றன.
'கீமியா எ ச'ஆதத்' என்னும் நூலொன்று பேரின்பரசவாதத்தைப்
பற்றியது. இந்நூல் தமிழ்ப்படுத்தப்பட்டுள்ளது.
ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஜெர்மனியில்
பாராஸெல்ஸஸ் - 'Paracelsus' என்னும் ஞானி ஒருவர் இருந்தார்.
இவர் ஒரு பெரிய மருத்துவர்; அறுவை சிகிச்சையாளர்; ரசவாதி;
ரசாயன மேதை; உலோகநூல் வித்தகர்; சித்தரும்கூட. இவருடய
நூல்களில் பல அத்வைதக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். பல
நோய்களின் உண்மையான தன்மைகளையும் அறிந்து முதன்முதலில்
கூறியவர் இவர். பல நவீன சிகிச்சை முறைகளுக்கும், மருத்துவ
ரசாயனம் எனப்படும் ஃபார்மக்காலஜிக்கும், சில மனோதத்துவ
முறைகளுக்கும் இவரே முன்னோடியாகத் திகழ்கிறார். இவரை
அக்காலத்தில் உள்ளவர்கள் பெரிய மந்திரவாதியாகவும் கருதினர்.
புலன்களுக்கு அப்பாற்பட்ட அறிவாற்றலாகிய
'Extra-sensory Perception - E.S.P.' என்னும் சக்தியை பெற்றவர்.
"தன்னையும் உணர்ந்து, தன்னுடைய அறிவின்ஆற்றலால்
இந்த பிரபஞ்சத்தின் தன்மையையும் உணர்ந்துகொண்டுவிட்டால்
இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து விதிகளையுமே நம்
இஷ்டத்திற்கு இயக்கமுடியும்", என்று கூறியிருக்கிறார்.
"சுத்தமான மந்திரவாதம் என்பது ஓர் அறிவியல் கொள்கை",
என்றும் சாதித்திருக்கிறார்.
1541-ஆம் ஆண்டில் இவருடைய உயிரற்ற உடல்
காணப்பட்டது. ஆனால் இவர் இறந்துவிட்டதாக யாரும்
நம்பவில்லை. கூடு விட்டுக் கூடு பாயும் வித்தையின்மூலம்
வெவ்வேறு உடல்களில் அவ்வப்போது புகுந்து புகுந்து சென்று
இந்த நானூற்றைம்பது ஆண்டுகளாக இன்னும் இவர் உயிரோடு
இருப்பதாகவே பலரால் நம்பப்படுகிறது.
நம்முடைய பண்டைக்காலச் சித்தர்கள் ரிஷிகள்
ஆகியோரில் பலர், தற்காலக் கணிப்பின்படி விஞ்ஞானிகளாக
இருந்திருப்பார்களோ? அல்லது இப்படியும்சொல்லலாமோ?
தற்கால விஞ்ஞானிகளில் பலர் பழங்காலக்கணிப்பின்படி
'ரிஷிகள்', 'சித்தர்கள்' என்றும் சொல்லலாமோ?
பத்தொன்பதாம் நூற்றண்டின் இறுதிப்பகுதியில்,
சென்னையில் ஒரு பெரும் பணக்காரர் செம்பைத் தங்கமாக்கும்
வித்தையைக் கற்க முற்பட்டு, அம்முயற்சியில் தமது பெருஞ்செல்வம்
அனைத்தையுமே இழந்தார்.
ஒருநாள் அவருடைய வீட்டைக் கடந்து ராமலிங்க வள்ளலார்
சென்றார். .
அவரைக் கண்ட அந்த நபர் ஓடோடிச்சென்று, அவர்தம்
கால்களில் விழுந்து, தாம் ஏழையான கதையையெல்லாம் சொல்லிச்
சொல்லி அழுதார்.
தமக்கு எப்படியாவது ரசவாத வித்தையைக் கற்றுக்
கொடுக்குமாறும் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.
வள்ளலார் ஒரு கண்ணாடி தம்ளரில் நிறையத் தண்ணீர்
கொண்டுவருமாறு கேட்டார். தம்ளரில் தண்ணீர் வந்ததும், அந்தத்
தண்ணீரில் கொஞ்சம் தெரு மணலை எடுத்துப்போட்டார். அந்த மணல்
தண்ணீருக்குள் விழுந்து, தம்ளரின் அடியில் சேரும்போது பொன்னாக
மாறியிருந்தது. அந்த வித்தை இவ்வளவு எளிதாக இருப்பதைக் கண்ட
மாஜி செல்வந்தர், அந்த வித்தையை அப்போதே கற்றுத்தருமாறு
கேட்டுக்கொண்டார்.
வள்ளலார் சொன்னார்:
"இந்த ரசவாத வித்தை மிக மிகச் சுலபம்தான்.
ஆனால் ஒன்றே ஒன்று. பொன்னாசை அறவே அற்றவர்களுக்கு மட்டுமே
இந்த வித்தை பலிக்கும்.".
'ஞானத்தாலும் விஞ்ஞானத்தாலும் மனம் திருப்தியடையப்
பெற்றவனும், அசையாதவனும், புலன்களை வென்றவனும், மண்ணையும்
பொன்னையும் ஒரே விதமாக மதிப்பவனுமான யோகி,
"யோகம் நிறையப்பெற்றவன்", எனக் கூறப்படுகிறான்.