From netranger@... Sun Jun 09 10:38:17 2002
Return-Path:
X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 9 Jun 2002 17:38:17 -0000
Received: (qmail 63146 invoked from network); 9 Jun 2002 17:38:17 -0000
Received: from unknown (66.218.66.217) by m8.grp.scd.yahoo.com with QMQP; 9 Jun 2002 17:38:17 -0000
Received: from unknown (HELO ip.eth.net) (202.9.128.19) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 9 Jun 2002 17:38:15 -0000
Received: (apparently) from punweb01 ([10.1.1.14]) by ip.eth.net with Microsoft SMTPSVC(5.5.1877.467.46); Sun, 9 Jun 2002 23:08:09 +0530
Sender: netranger@punweb01
To: agathiyar@yahoogroups.com
X-CC-Sender: netranger@...
Date: Sun, 9 Jun 2002 22:58:20 +0550
Subject: awwaikkuRaL(61-70)
X-Mailer: DMailWeb Web to Mail Gateway 2.7q, http://netwinsite.com/top mail.htm
Message-id: <3d039034.c3.0@punweb01>
X-User-Info: 210.214.178.20
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: netranger@...
From: netranger@...
Reply-To: netranger@...
X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18517
ஒளவைக் குறள் - (61 - 70)
7.அமுததாரணை
(இவ் வத்தியாயத்தைக் கூடியமட்டும் எளிய தமிழில்
முடிந்தவறை சுருக்கி
அனுப்பியிருக்கிறது)
61. அண்ணாக்குத் தன்னையடைத் தங்கமிர் துண்ணில்
விண்ணோர்க்கு வேந்தனு மாம்.
இப்பத்துக் குறளிலும் நம் உடலில் அமிர்தம் சுரக்கும்
இடத்தைக் குறித்தே எழுதி வைத்துள்ளார்கள்.
ஐந்து இடங்களில் அமுதம் சுரக்கும் :
1. அமுதம் - நாவின் நுனி - பக்குவ ஞானத்தால்,
சிருட்டி வல்லப நினைவால் - இனிப்புள்ள ஊற்று நீர்
2. புவனாமுதம் - நாவின் நடுவில் - பக்குவ
கிரியையாலும் ஞானநிலை நினைவின் உணர்வாலும் -
இளகின் இனிப்பான சக்கரைப் பாகு
3. மண்டலாமுதம் - நாவின் அடியில் - பக்குவ இச்சை,
சம்மர உணர்வின் தன்மையாலும் - குழம்பிய சக்கரைப் பாகு
4. ரகசியாமுதம் - உள்நாவினடியில் - முதிர்ந்த
சக்கரைப் பாகு
5. மெளனாமுதம் - உண்ணாக்குக்கு மேல் - பக்குவ
அனுக்கிரகம். சுபாவத்தின் அனுபவம் - துரியநிலை.-
மகா இனிப்புள்ள குளிர்ந்த மணிக்கட்டியாக இருக்கும்.
அண்ட அமுதம் : அக அமுதம்,அகப்புற அமுதம்,புற அமுதம்,
புறப்புற அமுதம்(மழை)
பிண்ட அமுதம் : அக அமுதம்,அகப்புற அமுதம்,புற அமுதம்,
புறப்புற அமுதம்(வியர்வை)
மனத்தையும்,நோக்கையும்(பார்வை) ஒருமுகப்படுத்தி
ஓங்காரத்தினுச்சியில் உள்ள நாக்கின்(உண்ணாக்கு)
மத்தியிலே நிலைத்து நிற்க அமுதம் சுரக்கும். அதை
உண்டுவிட்டால் விண்ணோர்களுக்கு வேந்தனாகலாம்.
மணிவாசகப் பெருமான் :
"மாயவாழ்க்கையை மெய்யென் றெண்ணி மதித்திடாவகை
நல்கின்
வேயதோளுமை பங்கனெங்க டிருப்பெருந் துறைமே வினான்
காயத்துள்ள முதூறவூரநீ கண்டுகொள் ளென்று காட்டிய
சேயமாமலர் சேவடிக் கணஞ் சென்னிமன்னித் திகழுமே."
தாயுமானவர் :
"மர்மர்ச் சோலைநெறி நன்னீழன் மலையாதி
மன்னுமுனிவர்க் கேவலாய்
மந்திரமாலிகை சொல்லுமியம நியமாதியா
மார்க்கத்தி நின்றுகொண்டு
கருவுருகாயத்தை நிர்மலமதாகவே
கமலாச னாதி சேர்த்துக்
காலைப்பிடித்தனலை யும்மைகுண்டலியடிக்
கலைமதி னூடுதாக்கி
உருகிவருமமுர் தத்தை யுண்டுறங்காமல்
உணர்வான விழியைநாடி
ஒன்றோடி ரண்டெனாச் சமரசசொரூபசுக
முற்றிடவென் மனதின் வண்ணம்
திருவருள்முடிகவித் தேகமொடு காண்பனோ
தேடரிய சத்தாகியென்
சித்தமிசைக் குடிகொண்ட வறிவான தெய்வமே
தேசோ மயாநந்தமே."
62. ஈரெண் கலையி னிறைந்தவமிர் துண்ணில்
பூரண மாகும் பொலிந்து.
பதினாறு கலைகளுடைய (தூலத்தில் திருமால்)
சந்திரனிடம் நிறைந்துள்ள அமிர்தத்தை உண்ட தேகம்
பிரும்மப் பிரகாசமடையும்.
63. ஓங்காரமான கலசத்தமிர் துண்ணில்
போங்காலமில்லை புரிந்து.
ஞானவினையினால்(முக்கலையொன்றித்தல்) பிரணவ
உருவாகிய அமிர்தமுண்ணில் மரணமில்லை. இதைச் சாகாக்
கலையென்பர். தற்பொழுது, சாகாக் கலையை அதன்
விரிவஞ்சி விடுத்துத் தனியே தருவோம்.
64. ஆனகலசத் தமிர்தை யறிந்துண்ணில்
போனகம் வேண்டாமற் போம்.
போனகம்=உணவு=போசனம்=ஆகாரம்
எட்டடுக்குக் கமலத்தினடுவில் உள்ள அமிர்தத்தைக்
கண்டுண்ணில் உணவின் தேட்டை இல்லை.
திருமூலர் :
"ஊரு மருவி உயர்வரை யுச்சிமேல்
ஆறினறிப் பாயும் அருங்குள் மொன்றுண்டு
சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரை
பூவின்றிச் சூடான் புரிசடையோனே."
"ஒருங்கிய பூவுமோ ரெட்டித ழாகும்
மருங்கிய மயாபுரிய தனுள்ளே
சுருங்கிய தண்டின் சுழினையினூடே
யொருங்கிய சோதியையோர்ந் தெழுமுய்ந்தே."
"ஆறெயருவி யகங்குள மொன்றுண்டு
நூறேசிவகதி னுண்ணிது வண்ணமுங்
கூறேகுவ்முலைக் கொம்பன யாளொடும்
வேறேயிருக்கும் விழுப்பொருள் தானே."
65. ஊறுமமிர்தத்தை யுண்டியுறப் பார்க்கில்
கூறும் பிறப்பறுக்க லாம்.
சிவக் கருவூலமாகிய பிரணவவுச்சியை ஞானவித்தையில்
கண்டபடி பார்க்க ஊறிவருமமிர்தத்தை உண்ண நூல்களில்
கூறப்பட்டுள்ள பிறப்பைத் தவிர்க்கலாம்(அறுக்கலாம்,
முக்தியடைந்தால்)
66. ஞான வொளிவிளக்கா னல்லவமிர் துண்ணில்
ஆன சிவ யோகி யாம்.
ஈங்கு, சிவராசயோகி யார்? என்பதிற்கு இலக்கணங்
கூறியுள்ளது.
ஆன்மப் பிரகாசத்திலுண்டாகும் அமிர்தமுண்ணில்
அங்ஙனமுண்டவனே சிவராசயோகியாவான்.
67. மேலையமிர்தை விளங்காமற்றா னுண்ணில்
காலனை வஞ்சிக்க லாம்.
துவாதசாந்தப் பெருவெளியிலிருந்து சூரியகலையிலிருந்து
கீழிறங்கும் அமிர்தத்தை பஞ்சபூதங்களின்
பரிசத்திற்கிடங்கொடாது(விளங்காமல்) உண்டால் எமனை
ஏமாற்றலாம், மரணத்தைத் தள்ளிப்போடலாம்.
"பிராம்மண கர்மாவில்
வேதசம்பந்தமானது,சூரியனிடத்தே இருந்து மூன்று உளுந்து
அளவு நீரை வரவழைத்து, ஸ்வீகரிக்கவேண்டும்" என
வேதாந்தம் கூறுகிறது. இங்கு விளங்காமல் என்பதற்கு
இன்னுமொரு விளக்கம் - சூரியகலையிலிருந்து வருவதால்
வந்தவுடன் ஆவியாகிவிடுமென்றும் அதை உடனே காலதாமதம்
செய்யாமலுண்ண வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
68. காலன லூக்கங் கலந்த வமிர்துண்ணில்
ஞான மதுவா நயந்து.
ஊக்கம் = பிரணவ உச்சி
பிரணவ உச்சியில் பிராணபான வாயுக்களோடு ஆன்ம
அக்கினியும் கலந்ததாலுண்டாகும் அமிர்தத்தை உண்டால் அதன்
பலத்தால் ஞானமுண்டாகும்.
69. எல்லையி லின்னமிர்த முண்டாங் கினிதிருக்கில்
தொல்லை முதலொளியே யாம்.
பிரணவ உச்சியில் அமிர்தத்தையுண்டு இனிதாகவிருப்பில்
பழமையாகிய(தொல்லை) எதார்த்த வடிவாகிய
ஆதிவொளியாம் ஆத்மவொளியேயாம்.
70. நிலாமண்டபத்தி நிறைந்த வமிர்துண்ணில்
உலாவலா மந்தரத்தின் மேல்.
சந்திர மண்டபத்திலிருக்கும் அமிர்துண்டால்
சிதாகாயத்தில் உலாவரலாம்(ஆகாயசஞ்சாரம் என்பது
வேறு)
- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)