From jaybee@... Sun Jun 09 17:11:24 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 10 Jun 2002 00:11:23 -0000
Received: (qmail 80335 invoked from network); 10 Jun 2002 00:11:23 -0000
Received: from unknown (66.218.66.216) by m9.grp.scd.yahoo.com with QMQP; 10 Jun 2002 00:11:23 -0000
Received: from unknown (HELO ipop6) (202.188.0.250) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 10 Jun 2002 00:11:19 -0000
Received: from user (sp-103-42.tm.net.my [210.186.103.42]) by ipop6.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXG00DMCR6SKO@...> for agathiyar@yahoogroups.com; Mon, 10 Jun 2002 08:11:18 +0800 (SGT)
Date: Mon, 10 Jun 2002 08:11:32 +0800
Subject: SaraNaagathi ThEvaaram#1
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020610081132.00763644@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18518
அன்பர்களே,
தேவாரத்தில் 'வேண்டுகோள் தேவாரங்கள்' என்ற தொகுப்பு
ஒன்று உண்டு. 'உமாபதிசிவத் தேவாரத்திரட்டு', 'அகத்தியர் தேவாரத்திரட்டு'
என்ற தொகுப்புகள் அக்காலத்தில் சைவர்கள் பலரால் வழிபாட்டுக்கு
பயன்படுத்தப்பட்டன. இல்ல வழிபாடு, மானச வழிபாடு ஆகியவற்றுக்கு இவை
அருந்துணையாக இருந்தன.
இவை தவிர வேறு சில அடிப்படைகளிலும் தேவாரப் பாடல்கள்
திரட்டப்பட்டுள்ளன.
அவ்வகையில் ஒன்று, இந்த 'சரணாகதி தேவார'ப் பாடல்கள்.
இவற்றின் பொருளை எளிமைப்படுத்தி எழுதுகிறேன்.
ஆங்கிலத்திலும் அவற்றின் பொழிப்புரையைத் தருகிறேன்
அவற்றை நேரடி வழிபாட்டுக்குரிய 'Prayer' போன்றதொரு சாதனமாகப்
பயன்படுத்தலாம்.
இப்பாடல்களில் காணப்படும் punctuation marks, படிப்பதற்கும்
புரிந்துகொள்வதற்கும் ஏற்றதொரு வசதிக்காக நானாப்ச் செருகி
வைத்தது.
விடையான்விரும்பி, என் உள்ளத்து இருந்தான்; இனி நமக்கு
அடையா அவலம்! அருவினை சாரா! நமனை அஞ்சோம்!
புடையார் கமலத்தயன் போல்பவர் பாதிரிப்புலியூர்
உடையான் அடியார் அடியடியோங்கட்கு அரியதுண்டே?
'வைத்த பொருள் ஆம்'என்று சொல்லி மனத்தடைத்துச்
சித்தமொருக்கிச் 'சிவாயநம' என்றிருக்கின் அல்லால்
மொய்த்த கதிர்மதி போல்வார் அவர் பாதிரிப்புலியூர்
அத்தன் அருள் பெறலாமோ? அறியாப்பேதை நெஞ்சே!
மண்பாதலம் புக்கு, மால்கடல் மூடி, மற்று ஏழு உலகும்
விண்பால் திசை கெட்டு, இருசுடர் வீழினும் அஞ்சல் நெஞ்சே!
திண்பால் நமக்கு ஒன்று கண்டோம்; திருப்பாதிரிப்புலியூர்
கண்பாவு நெற்றிக் கடவுட் சுடரான் கழலிணையே!