From jaybee@... Mon Jun 10 03:16:39 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 10 Jun 2002 10:16:39 -0000
Received: (qmail 60708 invoked from network); 10 Jun 2002 10:16:39 -0000
Received: from unknown (66.218.66.218) by m3.grp.scd.yahoo.com with QMQP; 10 Jun 2002 10:16:39 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 10 Jun 2002 10:16:38 -0000
Received: from user (sp-103-65.tm.net.my [210.186.103.65]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXH00KBQJ7OW8@...> for agathiyar@yahoogroups.com; Mon, 10 Jun 2002 18:16:38 +0800 (SGT)
Date: Mon, 10 Jun 2002 18:13:36 +0800
Subject: A Lost Work - 'Thagaduur Yaaththirai'#1
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020610181336.0071b03c@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18520
அன்பர்களே,
பல தமிழ்நூல்கள் மறைந்துபோய்விட்டன. அவற்றுள் ஒன்று
'தகடூர் யாத்திரை' என்னும் நூல். அந்நூலைப் பற்றி தமிழ்த்தாத்தா
உ.வே.சாமிநாதய்யர், தம்முடைய 'என் சரித்திர'த்தில் குறிப்பிட்டுள்ளார்:
பிறகு தெற்குப் புதுத்தெருவில் இருந்த கிருஷ்ண வாத்தியாரென்பவர்
வீட்டிற்குப் போனோம். அங்கே தொல்காப்பிய உரைச்சுவடி ஒன்றில்,
'நாங்குநேரியில் இருக்கும் ஒருவருக்கு என்னிடமிருந்த 'தகடூர் யாத்திரை'ப்
பிரதி ஒன்றைக் கொடுத்துவிட்டு இப்பிரதியை இரவலாக வாங்கிக்
கொண்டேன்', என்று எழுதியிருந்தது. யாரிடமிருந்து வாங்கியது என்று
குறிப்பிடவில்லை.
தொல்காப்பிய உரையில் 'தகடூர் யாத்திரை' என்ற பெயர் வருகிறது.
ஆதலால் அது பழைய நூல் என்று உணர்ந்திருந்தேன்.
அது நாங்குநேரியில் உள்ளதென்ற செய்தியைக் கண்டதும் அதனை
எப்படியாவது கண்டுபிடிக்கலாமென்று எண்ணி, "நாங்குநேரியில் கவிராயர்கள்
வீடுகள் இருக்கின்றனவா?" என்று உடனிருந்த அன்பர்களைக் கேட்டேன்.
"இருக்கின்றன. வைஷ்ணவர்களே அதிகமாகையால் வைஷ்ணவ
நூல்கள் கிடைக்கும்" என்று அவர்கள் சொன்னார்கள்.
"இந்தப் பிரதியில் தகடூர் யாத்திரைச் சுவடியை அவ்வூரிலிருக்கும்
ஒருவரிடம் கொடுத்திருப்பதாக எழுதியிருக்கிறது. அங்கே சென்று தேடிப்
பார்த்தால் கிடைக்குமோ?" என்று வினவினேன்.
"கிடைக்கலாம். ஆனால் நிச்சயமாகச் சொல்லமுடியாது. இந்த
மாதிரியான புத்தகங்களை யார் இப்போது படிக்கிறார்கள்? நீங்கள் தேடும்
பத்துப்பாட்டே முழுவதும் இன்னும் கிடைக்கவில்லையே? இதுபோல
அந்த நூலும் கிடைக்காமல் போனாலும் போகலாம். இந்தத்
தொல்காப்பியப்பிரதி இங்கே இருப்பதுபோல இதற்குப் பரிவர்த்தனையாக
அனுப்பிய தகடூர் யாத்திரை அங்கே இருக்கவும் நியாயம் உண்டு."
"கிடைத்தால் நல்லது", என்றேன் நான். ஆனால் பிற்காலத்தில்
நாங்குநேரியில் நான்கு முறை ஏடு தேடியபோது 'தகடூர் யாத்திரை'
கிடைக்கவேயில்லை. பழைய நூல்கள் பல இந்த உலகத்தைவிட்டு
யாத்திரை செய்துவிட்டதைப்போல அந்த அருமையான நூலும்
போய்விட்டதென்றுதான் நினைக்கிறேன்.
இதிலிருந்து பெறப்படுவது என்னவென்றால், அக்காலத்தில்
ஒரு நூலைக்கொடுத்து, அதற்கு பதிலாக தம்மிடமில்லாத இன்னொரு
நூலைப் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். கொடுப்படும் நூல் ஒரு பிடிமானம்
போலவும் விளங்கியிருக்கிறது.
'தகடூர் யாத்திரை' என்னவாயிற்று?.......