From netranger@... Mon Jun 10 08:58:10 2002
Return-Path: X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 10 Jun 2002 15:58:09 -0000
Received: (qmail 72958 invoked from network); 10 Jun 2002 15:58:07 -0000
Received: from unknown (66.218.66.216) by m9.grp.scd.yahoo.com with QMQP; 10 Jun 2002 15:58:07 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.145.21) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 10 Jun 2002 15:58:08 -0000
Received: from smtp3 ([202.9.178.19]) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Mon, 10 Jun 2002 21:34:10 +0530
Received: from 202.9.169.115 by smtp3 (InterScan E-Mail VirusWall NT); Tue, 11 Jun 2002 21:34:33 +0530
Message-ID: <3D04CAD5.B4A880E7@...>
Date: Mon, 10 Jun 2002 21:20:45 +0530
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: tamil,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: awwaikkuRaL(71-80)
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
Return-Path: netranger@...
X-OriginalArrivalTime: 10 Jun 2002 16:04:10.0625 (UTC) FILETIME=[75255710:01C21098]
From: ஞானவெட்டியான் X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18527
ஒளவைக் குறள் (71 - 80)
8.அர்ச்சனை
(அர்ச்சனை = பூசிக்கும் முறை. = கலைகளைப் பிரகாசம்
பெற வைப்பதே.இதை அருட்சுனை என்றும் ஞானியர் கூறுவர்.)
71. மண்டலங்கள் மூன்று மருவவுட நிறுத்தி
அண்டரனை யர்ச்சிக்கு மாறு.
அண்டரனை = கண்ணுக்குள் இருக்கும் சிவனாகிய சீவனை
சூரிய,சந்திர,அக்கினி மண்டலங்களை ஒருங்கிணைத்துத்
(முக்கலையையும் ஒன்று சேர்த்து) தான் கண்ணுக்குள் இருக்கும்
சிவனாகிய சீவனை அர்ச்சிக்கமுடியும்.
கண்களுக்குள்ளே(பிண்டதினுள்ளே) யுள்ள கபாலகுகையில்
சீவனைக் கண்டு அசையவிடாது கட்டி அதனுள் நிலைத்துப்
பூசிப்பதே சிறந்த வழி.
சிவமாகிய சீவன் தோன்றி மறையும் குணமுள்ளவன்
என்பதால், அசையவிடாது கட்ட வேண்டுமென்பதை
"பேராதிறைவனை" என்றார்.
ஓளவை கூறிய பிண்டமும், நெறிப்பட வுள்ளே எனத்
திருமூலர் கூறியதும் பிரிவைக் காட்டும் இரு கண்களே.
இதைவிடத் தெளிவாகப் பிரும்ம இரகசியத்தை
வெளிப்படுத்த இயலாது.
அசைவற்ற நினைவினால்,
கருத்தையொருமித்து(கண்பொருந்தி) பிண்டத்தில் உள்ளே
நினைவைச் செலுத்தி ஆராதனை செய்ய சீவமாகிய
பிரகாசச்சுடர் கிளர்த்தெழும். அவ்விடத்தே
ஞானவினையால் அருச்சனை செய்தலே ஆன்மவழியாம்.
கீழ்க்கண்ட பாடல்களையும் கருத்தில் கொண்டால் இரகசிய
இடமும்,தன்+திறமும் தெரியவரும் :
திருமூலர் :
"அகார வுகார சிகார நடுவாய்
வகார மோடாறும் வளியுடன் கூடிச்
சிகார முடனே சிவன் சிந்தை செய்ய
ஒகார முதல்வ னுவந்து நின்றானே.