From jaybee@... Tue Jun 11 03:09:58 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 11 Jun 2002 10:09:58 -0000
Received: (qmail 58377 invoked from network); 11 Jun 2002 10:09:58 -0000
Received: from unknown (66.218.66.218) by m7.grp.scd.yahoo.com with QMQP; 11 Jun 2002 10:09:58 -0000
Received: from unknown (HELO ipop5) (202.188.0.249) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 11 Jun 2002 10:09:57 -0000
Received: from user (sp-103-104.tm.net.my [210.186.103.104]) by ipop5.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXJ00D8GDEV90@...> for agathiyar@yahoogroups.com; Tue, 11 Jun 2002 18:06:33 +0800 (SGT)
Date: Tue, 11 Jun 2002 18:05:26 +0800
Subject: Traditions#2-Saththiyam
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020611180526.0078a9a0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18540


அன்பர்களே,

பழங்காலத்தில் சத்தியம் செய்வதில் தமிழர்களிடையே
பல முறைகள் இருந்தன. அவற்றில் சிலவற்றை இன்றும்
காணலாம்.
உப்புச்சத்தியம், பால் சத்தியம் என்பனவற்றில் உப்பையோ
பாலையோ தொட்டுக்கொண்டு சத்தியம் செய்வார்கள்.
இது 1971-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த தேர்தலில்
மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
தேர்தலில் பல அங்கங்கள் உண்டு. வீடு வீடாகப் போவது,
குழந்தைகளைத் தூக்கிக்கொஞ்சுவது, தெருத் தெருவாகப் போவது,
ஊர்வலம் போவது, பொதுக்கூட்டம் போடுவது என்று பல அங்கங்கள்
உண்டு.
அவற்றுள் தனித்தனியாக வீடுகளுக்குப்போகும் முறையும்
இருந்தது. அப்போது ஓர் ஆசாமி பெட்டி நிறையப் பணம் எடுத்துச்
செல்வான். இன்னொரு ஆசாமி ஒரு செம்பில் பால் எடுத்துச்செல்வான்.
ஒரு வீட்டாருக்குக் குறிப்பிட்ட தொகையோ அல்லது பொருளோ
கொடுக்கப்பட்டபின்னர், அந்த வீட்டினர்பால் செம்புக்குள்
விரலைவிட்டு அந்த வேட்பாளருக்கே வாக்களிப்பதாக சத்தியம்
செய்யவேண்டும்.
இப்போது அந்த முறை இருக்கிறதா என்பது தெரியவில்லை.
அப்போதே அந்த முறை படுதோல்வியடைந்தது. பாலுக்குள் விரலை
விட்டுவிட்டு, பணத்தையும் வாங்கிக்கொண்டு, அவரவர் இஷ்டப்பட்ட
ஆளுக்கே வோட்டுப்போட்டார்கள்.
அப்போது பகுத்தறிவு வாதத்தின் புதுக்கருக்கு மாறாமல்
இருந்த தி.மு.க. அந்த வழியைப் பின்பற்றியதுதான் பலருக்கு
அதிர்ச்சியாக இருந்தது.

அன்புடன்

ஜெயபாரதி

============================