From sadayan50@... Tue Jun 11 04:29:19 2002
Return-Path: X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 11 Jun 2002 11:29:19 -0000
Received: (qmail 34186 invoked from network); 11 Jun 2002 11:29:19 -0000
Received: from unknown (66.218.66.217) by m7.grp.scd.yahoo.com with QMQP; 11 Jun 2002 11:29:19 -0000
Received: from unknown (HELO web13803.mail.yahoo.com) (216.136.175.13) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 11 Jun 2002 11:29:19 -0000
Message-ID: <20020611112919.24618.qmail@...>
Received: from [195.229.240.246] by web13803.mail.yahoo.com via HTTP; Tue, 11 Jun 2002 04:29:19 PDT
Date: Tue, 11 Jun 2002 04:29:19 -0700 (PDT)
Subject: Abdul Kalam & Sujata
To: tamil-ulagam@yahoogroups.com, agathiyar@yahoogroups.com, tamil@...
Cc: uaetamilnetters@yahoogroups.com, rayarkappiklub@yahoogroups.com
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 18541
ஏ.பி.ஜே அப்துல் கலாம் பற்றி பலர் எழுதி விட்டார்கள். அண்மையில்
போக்ரன் அணுஆயுத சோதனைக்குப்பின் அவர்மேல் கவன வெளிச்சம் மிக
அதிகமாயிருக்கிறது. அவர் என்னுடன் படித்தவர் (அல்லது அவருடன் நான்
படித்தேன்) என்பது பலருக்குத் தெரியாது. திருச்சி சென்ஜோசப் கல்லுரியில்
பி.எஸ்ஸி வகுப்பிலும் பின்னர் குரோம்பேட்டை எம்.ஐ.டி பொறியியல்
கல்லுரியிலும் சேர்ந்து படித்தோம். அன்றைய தினங்களை ஏறத்தாழ நாற்பது
வருடம் கழித்து நினைவு கொள்வதில் கலாம் அவர்களின் தற்போதைய
பிரபலத்துக்குரிய ஆரம்ப அடையாளங்கள் இருந்தனவா என்று நினைத்துப் பார்ப்பது
சற்று கடினம்தான்.
கலாம் படிப்பில் தீவிர மாணவர் என்பது அப்போதே தெரிந்தது. ஒழுங்காகப்
படிப்பார் மற்ற மாணவர்களின் ஆரவார உற்சாகத்தில் அதிகம் கலந்து கொள்ள
மாட்டார். எங்களைப் போல ஊர் சுற்ற மாட்டார். தமிழில் அப்போதே
அவருக்கு ஆர்வம் அதிகமிருந்தது.எனக்கும் அந்த ஆர்வம் இருந்ததால்
ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டோம். இப்போதும் எப்போதாவது அவரை
சந்திக்கும் போது பாரதி பாடல்கள் பற்றி உடனே பேச்சு எழும் நான் எழுதும்
கதைகளை விரும்பிப் படிக்கிறார் என்பதும் தெரிந்தது. கல்லுரியில்
அறிவியல் கட்டுரைகள் தமிழில் எழுதுவதற்காக ஒரு போட்டி
வைத்தார்கள்.இயற்பியல் விரிவுரையாளர் திரு. ராகாவாச்சாரி அவர்கள்
இதில் மிகவும் ஆர்வமாக இருந்தார்கள். அப்போது அனந்தம் என்று இன்ஃபினிட்டி
கணிதம் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். கலாம் ஆகாயவிமானம் கட்டுவோம்
என்று கட்டுரை எழுதியது நினைவு வருகிறது. இதற்காக அவர் பரிசும்
பெற்றார். எளியநடையில் ஏரோஃபாயில் பற்றி விளக்கியிருந்தார்.
அப்போதே நடைமுறையில் எதையும் செயல் படுத்தும், கட்டும் ஆர்வம் அவருக்கு
இருந்திருக்கிறது. அவர் படித்தது ஏரோநாட்டிக்ஸ்- விமான இயல் நான்
எலக்டராணிக்ஸ் - நுண்ணணுவியல்.
கலாம் வகுப்பில் பத்து மாணவர்கள் இருந்தார்கள் அவர்கள் எல்லோரும் சேர்ந்து
ஒரு க்ளைடர் செய்து அதைப் பறக்க விட்டது நினைவிருக்கிறது. அதை
மீனம்பாக்கத்திற்கு பகுதி பகுதியாக பிரித்து எடுத்துச் சென்று கூட்டி இழுத்துப்
பறக்க வைத்த போது நாங்கள் மிகவும் சந்தோஷப்பட்டோம். கலாம்
பிற்காலத்தில் ராக்கெட் பல செய்து காட்டிய திறமைக்கு வித்தாக அந்த
சம்பவம் இருந்திருக்கும் என எண்ணுகிறேன். படிப்பு முடிந்ததும் கலாம்
விண்வெளியியல் நிறுவனத்தில் சேரந்தார். தும்பா, ஹரிக்கோட்டா போன்ற
ராக்கெட் தளங்களிலிருந்து நம் ஆரம்பகால ராக்கெட்களான எஸ்எல்வி
போன்றவைகளை வெற்றிகரமாக ஏவியதில் கலாமின் பங்கு பின்புதான்
செய்திகள் வழியாகத் தெரிந்து கொண்டேன். மீண்டும் அவருடன் பழகும் வாய்ப்பு
அவர் டிஆர்டிஓ நிறுவனத்தின் தலைவராக இருந்தபோது ஏற்பட்டது. அவர்களுடைய
ப்ருத்வி ஆகாஷ் அக்னி போன்ற ஏவுகணை திட்டங்களுக்கு எங்கள் நிறுவனம்
பலவிதமான பாகங்களை செய்து தர வேண்டியிருந்தது. அந்த வகையில் அலுவலக
ரீதியாக கலாம் அவர்களுடன் பணிபுரிய வாய்ப்பு ஏற்பட்டது. அந்த நாட்களில்
அவர் பணியில் கவனமும் கடமை உணர்ச்சியும் மிக்க ஒரு உன்னதமான தலைவராக
வேலை வேலை வேலை என்று காலையும் மாலையும் ஆர்வலரகாத்தான்
அறிமகுமானார். எந்தக் காரியத்தையும் நேற்றே செய்து முடிக்க வேண்டும் என்னும்
அவசரத்தில் அவர் இருந்தார்.அவர் நடத்தும் கூட்டங்கள் மிகச் சுருக்கமானவை
தன்கீழ் பணிபுரிபவர்கள் மேல் மிகுந்த நம்பிக்கை வைப்பார். அவருடைய
வெற்றியின் ரகசியம் இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை
அவன்கண் விடல் என்னும் திருக்குறளின் சாரம்சமாக இருந்தது.
இருசம்பவங்கள் என் நினைவில் நிற்கின்றன. சில ரஷ்ய விஞ்ஞானிகள்
ஹைதராபாத்திற்கு தொழில் பேச வந்திருந்தார்கள். அவர்கள் புறப்படுவதற்குமுன்
ஒரு நட்சத்திர ஒட்டலில் விருந்து வைத்திருந்தார்கள். கலாமுடன் நானும்
சென்றிருந்தேன். ஒரு முக்கியமான பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துவிட்டதை
கொண்டாடும் சந்தோஷத்தில் ஒரு ரஷ்ய விஞ்ஞானி கலாம் கையில் ஒரு
கோப்பை ஓட்காவை திணித்துவிட்டு அதை அருந்துமாறு வற்புறுத்தினார். கலாம்
சுத்த சைவம் மட்டுமல்ல எந்தவித மதுபானங்களையும் தொடாதவர். ரஷ்யருக்கு
விளக்கிச் சொல்ல ஆங்கிலம் புரியாது. அதை சாப்பிட்டே ஆக வேண்டும் என்ற
கட்டாயம் ஏற்பட்டது. கலாம் தர்மசங்கட நிலையில் என்னருகே வந்து, "இந்த
பானம் தண்ணி மாதிரிதான் இருக்கு நீ நேரா போய் இதே மாதிரி
கிளாஸ்ல கொஞ்சம் வெறும் தண்ணி எடுத்துட்டு வந்துரு.எங்கிட்ட யாருக்கும்
தெரியாம கொடுத்து கிளாஸை மாத்திரு" என்றார். நான் அவ்வாறே
செய்துவிட கலாம் ஒரு கோப்பை தண்ணீரை ரஷ்யர்களை நோக்கி உயர்த்தி
சியர்ஸ் என்றார்.
கலாமும் நானும் சேரந்து இந்திய ராக்கெட் இயலைப் பற்றி
திப்புசுல்தானிலிருந்து ஆரம்பித்து ஒரு புத்தகம் எழுதவதாக திட்டம்
போட்டோம்.அவரை எப்போதும் விமானத்திலோ, விமான நிலையத்திலோ
பார்த்தாலும், "கலாம் என்னாச்சு புத்தகம் என்பேன், இதோ அடுத்த மாசம்
லீவு எடுத்துக்கிட்டு பத்துநாள் வரேன்யா - ரெண்டு பேரும் முதல்ல மைசூர்
போவோம் அங்க எழுத ஆரம்பிக்கலாம்" என்பார்.
அந்த புத்தகத்தை ஒருநாள் எழுதி விடுவோம் என எண்ணுகிறேன். கலாம் வர
காத்திருக்கிறேன்.
அப்துல் கலாம் சில குறிப்புகள் - சுஜாதா
=====
அன்புடன்
சாபு
துபாய்
__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! - Official partner of 2002 FIFA World Cup
http://fifaworldcup.yahoo.com