From netranger@... Tue Jun 11 04:38:52 2002
Return-Path: X-Sender: netranger@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 11 Jun 2002 11:38:51 -0000
Received: (qmail 10903 invoked from network); 11 Jun 2002 11:38:51 -0000
Received: from unknown (66.218.66.218) by m8.grp.scd.yahoo.com with QMQP; 11 Jun 2002 11:38:51 -0000
Received: from unknown (HELO mailvs.eth.net) (202.9.145.21) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 11 Jun 2002 11:38:51 -0000
Received: from smtp3 ([202.9.178.19]) by mailvs.eth.net with Microsoft SMTPSVC(5.0.2195.4453); Tue, 11 Jun 2002 17:14:53 +0530
Received: from 202.9.169.227 by smtp3 (InterScan E-Mail VirusWall NT); Wed, 12 Jun 2002 17:15:13 +0530
Message-ID: <3D05DD09.C451AD0D@...>
Date: Tue, 11 Jun 2002 16:50:41 +0530
X-Mailer: Mozilla 4.78 [en] (Win98; U)
X-Accept-Language: tamil,en
MIME-Version: 1.0
To: agathiyar@yahoogroups.com
Subject: awwaikkuRaL(131-140)- vinaa?
Content-Type: text/plain; charset=iso-8859-1
Content-Transfer-Encoding: 8bit
Return-Path: netranger@...
X-OriginalArrivalTime: 11 Jun 2002 11:44:53.0656 (UTC) FILETIME=[66E20180:01C2113D]
From: ஞானவெட்டியான் X-Yahoo-Group-Post: member; u=95039220
X-Yahoo-Profile: gnanavettiyaan
X-Yahoo-Message-Num: 18542
அன்புடையீர்,
வணக்கம்.
நண்பரொருவர் எழுப்பிய வினாக்களுக்கு எனக்குத் தெரிந்த
விளக்கங்களீந்தோம்.
நம் குழுவிற்கும் அது பயன்படட்டுமெனத் தந்துள்ளேன்.
முதலில் தாங்கள் கேட்ட நூற்பாவுக்கு விளக்கம்:
> >திருமூலர்:
> >"அண்டங்க ளேழு மகண்டமு மாவியுங்
> > கொண்ட சராசர முற்றுங் குணங்களும்
> > பண்டை மறையும் படைப்பளிப் பாதியுங்
> > கண்ட சிவனுமென் கண்ணன்றி யில்லையே."
இஃது, ஏழாம் தந்திரம், அடியார் பெருமை என்னும்
அதிகாரத்தின் நாலாம் பாடல்.
இதைப் பிரித்து எழுத:
"அண்டங்கள் ஏழும் அகண்டமும் ஆவியுங்
கொண்ட சராசர முற்றுங் குணங்களும்
பண்டை மறையும் படைப்பளிப் பாதியுங்
கண்ட சிவனுமென் கண்ணன்றி யில்லையே."
சூரியனைச் சுற்றிச் சுழன்று வரும் ஏழுவகைக்
கோள்களும்(சூக்குமத்தில் - மூலாதரம் முதல் சகஸ்ரதளம்
ஈறாக ஏழு வகைத் தளங்கள்) வேறு விரிந்த நிலைகளும்
அந்தந்த நிலைகளிலுள்ள ஆவிகளும், அங்குள்ள இயங்குதிணை
நிலைத்திணை உயிர்களும்(சரம்=அசைவது,
அசரம்=அசையாதது; சராசரம்=உலகம்), அவ்வவற்றின்
பண்புகளும், பண்டைத் தமிழ்
நான்மறையும்(கண்,செவி,நாசி,வாய் என்னும் அறிகருவி
நான்கும் ஒன்றுகூடும் நாற்சந்தி),படைத்தல்,
காத்தல்,மறைத்தல்,அருளல், அழித்தல் ஆகிய திருவருட்
தொழில்களும் சிவன் என்னுடன் விளங்கி நின்று என்
அறிவில் காட்டுதலால் அவை அனைத்தின் உண்மைகளும் என்
அறிவின்கண் (அறிவினுள் இருக்கும்
ஞானக்கண்ணுக்கு)புலனாகவில்லை.
சூரிய,சந்திரன் = புறக்கண்கள்
இஃது, மூன்றாம் தந்திரம், 18ம் அத்தியாயமான கேசரி
யோகத்தில் இரண்டாம் பாடல்:
உயிர் வெளிச் செல்லும் வாயில்களான,
கண்,செவி,நாசி,வாய் என்னும் அறிகருவி நான்கும்
ஒன்றுகூடும் அண்ணாக்கிடத்து அதன் மேலிருக்கும்
அமிழ்தொழுகும் தாரையிலிருந்து அமிழ்து ஒழுகும். அதை
வீணாக்காது உச்சித்துளைக் குகையில் நிரப்பி அத்துளையை
நாநுனியாலடைத்து அதை நடுநாடி வழியே செலுத்தி
அக்குளத்தை நிரப்பினால் மேல்ந்நோக்கு எண்ணம் தோன்றும்.
வண்ணான் - பிராணன்
சதுரப் பலகை - நாற்சந்தி
மோழை - வீணாக்காது
குளம் - கபாலக்குகை, மனம்
தியானத்திற்கு வாருங்கள்:
தியான முறைகள் பலதரப்பட்டவை.ஒவ்வொருவரும் தன்
முறையே உயர்வு என போற்றிக்கொள்வர்.
தியானத்தால் சாதிக்க வேண்டியது என்ன?
மனமடங்கி ஒருநிலைப் படுதல்.ஆணவம்,கன்மம்,மாயை
(ஒழிதல் மிகக் கடினம்) வெறுத்துக் குறைத்தல்.சகல
சீவர்களிடத்தும் கருணை,அன்பு காட்டல். இன்சொலல்.காலம்
வீணாக்காமை. சர்வ சதா காலமும் இறைச் சிந்தனையோடு
செயல்படல்.சும்மா இருத்தல்(சோம்பி அல்ல).அகம்பாவமற்ற
பணிவுடைமை.
இதற்கு என்ன செய்ய வேண்டும்?
முதலில் ஞானாசிரியன்(குரு) இல்லதவர்கள்
செய்யவேண்டியது இரு முறைகள்:
1.எண்ணும் எழுத்தும் - தங்களுக்குப் பிடித்த ஒரு
இறைநாமத்தை(சிவா,நாராயணா,அம்மா
தாயே...)உச்சரித்தல். அப்படி உச்சரிக்கும்போது,
கையில் ஒரு மணிமாலை(ஏதாகவிருப்பினும்
சரி.ஸ்படிகம்தான் நல்லது. இல்லை!இல்லை!
உருத்திராக்கம்தான் நல்லது என்று யார் சொன்னாலும்
செவிகொடாதீர்)வைத்துக்கொண்டு எத்தனை முறையென
எண்ணிவருதல் அவசியம். இதால், உச்சரிக்கும் மந்திரமும்
எண்ணிக்கையும் மட்டும்தான் மனதில் நிற்கும்.மனமடங்கி ஒரு
சுகம் கிட்டும்.
2.ஒன்றையும் நினையாது மூச்சுக்கற்றின் பாதையை மட்டும்
நினைவினில் நிறுத்திப் போகும் வழி, வரும் வழியைக்
கூர்ந்து நோக்குதல்.
இவைகளில் ஏதாவது ஒன்றைக் கடைப்பிடித்தால்
முக்கலையொன்றித்தல்(சூரிய,சந்திர,அக்கினி)
தானாகவே கைவரும்.
இவற்றையல்லாது, ஞானாசிரியனின் துணையில்லாது எதையும்
செய்தல் வேண்டாம்.
சாத்திரம் எல்லாம் என்ன?என்ன? எனத்
தெரிந்துகொள்வதற்கே.அவையெல்லாம் வெறும் குப்பை.
செயலில்லையேல் ஞானமில்லை.
இறைக்கருணையிருப்பின், நாம் பக்குவமடைந்துவிட்டால்
இறையருளால் ஞானாசிரியனை இறை நம்மிடம்
அனுப்பிவைக்கும். கலங்கவேண்டாம்.
நன்றி
-ஞானவெட்டியான்
-திண்டுக்கல்(தமிழகம்)
> > மதிப்புக்குறிய திரு ஞானவெட்டியான் அவர்களுக்கு
> >
> >
> > சில ஐயங்கள்...
> >
> > கீழே முக்திக்கு பல வழிகளை கொடுத்துள்ளீர்கள். என்னைபோன்ற சாதாரண மனிதர்களுக்கு முக்தி அடைய
> > அவா இருப்பினும் அடையும் வழி தெரியாது தவிக்கிறோம்
> >
> > எ.கா - "..ஆக சத்தியே சந்திரன்(திங்கள்). அந்தச் சத்தியாம் சந்திரனுடைய கலையைச் சங்கரனின்
> > கலையாம் சூரிய கலையொடு ஊடுருவினால் அவ்வினையே முத்திக்கு வழி .." என்று கூறியுள்ளீர்கள்.
> >
> > இந்தக் குறளை கடைபிடிக்க வேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும் ? ஈசுவரி - திங்கள் என்று உணர்தல் வேண்டுமா
> > ? இன்னும் மேலே செல்ல வேண்டுமல்லவா .. இன்னும் ஏதோ உணர வேண்டும் என்று தோன்றுகிறது. நாளை முதல்
> > திங்களை காணும் பொழுது இது ஈசுவரியின் ஒரு அம்சம் என்று உணருகிறேன் என்று வைத்துக்கொள்வோம். அதுவே
> > போதுமா ? அல்லது இன்னும் வேறு மேம்பட்ட ஏதாவது நிலை எட்ட வேண்டுமல்லவா? எப்படி செய்வது ? தியானம்
> > போன்ற முறைகளை கடைபிடிக்கவேண்டுமல்லவா ?
> >
> > தாங்கள் கூறியுள்ள பல பாக்கள் இங்கனமே கேள்விகளை எழுப்புகின்றன. என்ன செய்ய ஒரு வாழ்க்கை முறையை,
> > வழியை மடல்கள் மூலம் விளக்க முடியுமோ முடியாதோ ? கொடுப்பினை இருப்பின் தானாக வந்து சேருமோ
> > என்னவோ ?
> >
> > பல வேலைகள் உள்ள தங்களை மேலும் கேள்வி கேட்பது சரியோ ? .. நானறியேன்... ஆயினும்
> > >திருமூலர்:
> > >"அண்டங்க ளேழு மகண்டமு மாவியுங்
> > > கொண்ட சராசர முற்றுங் குணங்களும்
> > > பண்டை மறையும் படைப்பளிப் பாதியுங்
> > > கண்ட சிவனுமென் கண்ணன்றி யில்லையே."
> > >
> > என்ற திருமந்திரத்துக்கும்
> >
> > >திருமந்திரம்:
> > >"வண்ணா னொலிக்குஞ் சதுரப் பலகைமேற்
> > > கண்ணாறு மோழை படாமற் கரைகட்டி
> > > விண்ணாற் பாய்ச்சிக் குளத்தை நிறப்பினா
> > > லண்ணாந்து பார்க்க வழுக்கற்ற வாறே."
> > >
> >
> > என்ற திருமந்திரத்துக்கும் இன்னும் சற்று விளக்கம் கொடுக்க முடியுமா ?
> >
> > அன்புடன்
> >
> > On 6 Jun 2002 at 13:51, ஞானவெட்டியான் wrote:
> >
> > >ஒளவைக் குறள் (131 - 140)
> > >
> > > 4. கலை ஞானம்