From jaybee@... Tue Jun 11 09:03:04 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 11 Jun 2002 16:02:58 -0000
Received: (qmail 2085 invoked from network); 11 Jun 2002 16:02:58 -0000
Received: from unknown (66.218.66.217) by m7.grp.scd.yahoo.com with QMQP; 11 Jun 2002 16:02:58 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 11 Jun 2002 16:02:58 -0000
Received: from user (sp-103-202.tm.net.my [210.186.103.202]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXJ007N6TWST4@...> for agathiyar@yahoogroups.com; Wed, 12 Jun 2002 00:02:54 +0800 (SGT)
Date: Tue, 11 Jun 2002 23:58:13 +0800
Subject: Re: [agathiyar] Traditions#2-Saththiyam
In-reply-to: <3.0.6.32.20020611181053.007cf390@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: "Dr.P.Chandra Bose"
Message-id: <3.0.3.32.20020611235813.016d38a0@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.3.32.20020611180526.0078a9a0@...>
From: jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18550


அன்பர்களே,

பார்த்தீர்களா! 'இந்த போஸ் எங்கே கொஞ்சநாட்களாகக்
காணோமே? எங்கே போயிருப்பார்?' என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.
'சத்திய'த்தைப் பற்றி எழுதும்போது வேண்டுமென்றேதான் அந்த தேர்தல்
சமாசாரத்தை வலிந்து உட்புகுத்தினேன்.எனக்குத்தெரியும், எந்தக்
கடலைக்காட்டை எப்படிக் கலைத்தால் எந்தக் கவுதாரி எந்தப் பாதையில்
வெளியில் ஓடிவரும் என்று:-) வெற்றி நமதே.
சத்தியத்தின் அடுத்தடுத்த வகைகளை காலையில் பார்த்துக்
கொள்ளலாம். மணி 12-00க்கு மேலாகிறது. நேரத்துக்குப் படுப்பதில்லை
என்று வீட்டில் அனைவருமே புகார் செய்கிறார்கள்.

அன்புடன்

ஜெயபாரதி

At 06:10 PM 6/11/02 +0500, you wrote:
>
>அன்பர்களே,
>
>இன்னும் கிராமங்களில் இந்த சத்தியம் வாங்கும் பழக்கம் இருந்து வருகிறது. தேர்தலுக்கு முதல் நாள் இரவு
>பணத்தைக் கொடுத்து கடவுள் படம் அல்லது சொம்பில் பால் இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைத் தொட்டு சத்தியம்
>வாங்கி பணத்தைக் கொடுத்து அப்படியே வாக்காளர் அடையாள அட்டையையும் கொடுத்து விடுவார்கள். ஒரு
>கிராமத்தில் நான் என் நண்பர்களுடன் இதே போல என் கல்லூரி சக ஆசிரியருக்காக அவர் தேர்தலில்
>போட்டி போடுகையில் அலைந்தேன். நல்ல இரவு நேரத்தில் பாதுகாப்புக்காக கத்தி கம்பு வைத்திருக்கும்
>இருபது பேருடன் இருட்டில் சென்று வந்தது இன்னும் மனதில் உறைந்திருக்கிறது.
>
>இருட்டில் சில வேளைகளில் எதிரே இருக்கும் அந்த வாக்காளர்கள் அடையாளம் காண முடியாத கருப்பு நிறத்தில்
>இருப்பார்கள்.
>
>மின் விளக்கெல்லாம் அவ்வளவாக இல்லாத தொகுப்பு வீடுகள்.
>
>மற்றபடி நகரத்தின் தொகுப்பு வீடுகளில் சத்தியம் எல்லாம் இருக்காது. ஆனால் பணம் பட்டுவாடா இருக்கும்.
>
>அன்புடன்
>பெ.சந்திர போஸ்
>சென்னை.
>
>At 06:05 PM 6/11/02 +0800, you wrote:
>>
>>அன்பர்களே,
>>
>> பழங்காலத்தில் சத்தியம் செய்வதில் தமிழர்களிடையே
>>பல முறைகள் இருந்தன. அவற்றில் சிலவற்றை இன்றும்
>>காணலாம்.
>> உப்புச்சத்தியம், பால் சத்தியம் என்பனவற்றில் உப்பையோ
>>பாலையோ தொட்டுக்கொண்டு சத்தியம் செய்வார்கள்.
>> இது 1971-ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த தேர்தலில்
>>மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.
>> தேர்தலில் பல அங்கங்கள் உண்டு. வீடு வீடாகப் போவது,
>>குழந்தைகளைத் தூக்கிக்கொஞ்சுவது, தெருத் தெருவாகப் போவது,
>>ஊர்வலம் போவது, பொதுக்கூட்டம் போடுவது என்று பல அங்கங்கள்
>>உண்டு.
>> அவற்றுள் தனித்தனியாக வீடுகளுக்குப்போகும் முறையும்
>>இருந்தது. அப்போது ஓர் ஆசாமி பெட்டி நிறையப் பணம் எடுத்துச்
>>செல்வான். இன்னொரு ஆசாமி ஒரு செம்பில் பால் எடுத்துச்செல்வான்.
>>ஒரு வீட்டாருக்குக் குறிப்பிட்ட தொகையோ அல்லது பொருளோ
>>கொடுக்கப்பட்டபின்னர், அந்த வீட்டினர் பால் செம்புக்குள்
>>விரலைவிட்டு அந்த வேட்பாளருக்கே வாக்களிப்பதாக சத்தியம்
>>செய்யவேண்டும்.
>> இப்போது அந்த முறை இருக்கிறதா என்பது தெரியவில்லை.
>>அப்போதே அந்த முறை படுதோல்வியடைந்தது. பாலுக்குள் விரலை
>>விட்டுவிட்டு, பணத்தையும் வாங்கிக்கொண்டு, அவரவர் இஷ்டப்பட்ட
>>ஆளுக்கே வோட்டுப்போட்டார்கள்.
>> அப்போது பகுத்தறிவு வாதத்தின் புதுக்கருக்கு மாறாமல்
>>இருந்த தி.மு.க. அந்த வழியைப் பின்பற்றியதுதான் பலருக்கு
>>அதிர்ச்சியாக இருந்தது.
>>
>>அன்புடன்
>>
>>ஜெயபாரதி
>>
>>============================