From bala@... Tue Jun 11 18:52:43 2002
Return-Path:
Received: (qmail 79351 invoked from network); 12 Jun 2002 01:52:42 -0000
Received: from unknown (66.218.66.217) by m1.grp.scd.yahoo.com with QMQP; 12 Jun 2002 01:52:42 -0000
Received: from unknown (HELO n13.grp.scd.yahoo.com) (66.218.66.68) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 12 Jun 2002 01:52:42 -0000
X-eGroups-Return: bala@...
Received: from [66.218.67.135] by n13.grp.scd.yahoo.com with NNFMP; 12 Jun 2002 01:52:35 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 12 Jun 2002 01:52:35 -0000
X-Sender: bala@...
X-Apparently-To: agathiyar@egroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 12 Jun 2002 01:01:35 -0000
Received: (qmail 60699 invoked from network); 12 Jun 2002 01:01:35 -0000
Received: from unknown (66.218.66.218) by m9.grp.scd.yahoo.com with QMQP; 12 Jun 2002 01:01:35 -0000
Received: from unknown (HELO sydney.net) (203.22.101.2) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 12 Jun 2002 01:01:35 -0000
Received: from bala (nas1ppp41.sydneywerks.com.au [203.22.103.233]) by sydney.net (8.9.3/8.9.3/Debian 8.9.3-21) with SMTP id LAA31721; Wed, 12 Jun 2002 11:07:38 +1000
X-Authentication-Warning: churchill.sydneywerks.com.au: Host nas1ppp41.sydneywerks.com.au [203.22.103.233] claimed to be bala
Message-ID: <00bc01c211d2$2abc8f00$d8bafea9@bala>
To: , , , , , ,
Subject: Soolamaivu Sinthanaiyum Vaaipugalum
Date: Wed, 12 Jun 2002 10:59:22 +0530
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.00.2615.200
X-MIMEOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2615.200
From: "Bala Pillai"
X-Yahoo-Group-Post: member; u=1292804
X-Yahoo-Profile: bala2pillai
X-Yahoo-Message-Num: 18562

----- Original Message -----
From: Krishnan Ramasamy
To:
Sent: Tuesday, June 11, 2002 3:04 PM

அன்பிற்குரிய பாலா,

கீழே நீங்கள் கொடுத்ததைத் தமிழில் பெயர்த்திருக்கிறேன். நீங்கள் பேசும் பொருள் கொஞ்சம் சரவலானது.
தமிழில் அந்த அளவு சிந்தனையை எளிதாகக் கொடுப்பது நேரே தமிழில் எழுதினால் முடியும். மொழி
பெயர்க்கும் போது சிக்கலாக இருக்கிறது. கூடிய மட்டும் உங்கள் கருத்துக்களில் வரும் சொல்லாட்சியைக்
கையாண்டிருக்கிறேன். சில இடங்களில் தமிழுக்காக மாற்றியிருக்கிறேன். படிக்கும் போது தெரியும்.

இந்த மொழிபெயர்ப்பு எனக்கு ஒரு பாடம். கற்றது கைம்மண் அளவு.

அன்புடன்,
இராம.கி.

சூழமைவுச் சிந்தனையும் வாய்ப்புக்களும்

பாலாப் பிள்ளை, சூன் 6, 2002. சிட்னி, ஆத்திரேலியா

நம் ஒவ்வொருவரும் காரணம்-விளைவு என்ற மட்டத்தின் பெருங்காட்சியை ஓரளவு மட்டுமே பார்க்கிறோம். அந்தப்
பெருங் காட்சியைப் பார்க்க வேண்டுமானால், மனதிற்குள் ஆழ்ந்து சிந்தித்து மறுவொளித்துப் பார்க்கத் தெரிய
வேண்டும்; மேலும், இப்படிச் செயலாற்றுகிறவர்களைப் பார்த்துக் கவனத்தோடு கேள்வி கேட்கவும் தெரிய
வேண்டும். கூடவே, பெரிய காட்சிகள் இருப்பதைப் பொறியால் உணர்த்தும்படி, நம்மைப் போல் அல்லாத,
மாறுபட்ட நெஞ்சங்களோடு இடையாடவும் வேண்டும்.

இப்படிப் பெருங்காட்சிகளையும் காண வைக்கும் அளவில் சூழமைவுச் சிந்தனை நம்மை இட்டுச் செல்லுகிறது. சிறுங்
காட்சி பெருங் காட்சி என்ற தொடரின் கணுத்துவத்தை உணர வேண்டுமானால், குங்கூர்ந்த (ஒரே கூர்ந்தம் உள்ள)
கோளங்களின் தோற்றத்தை மனதில் கற்பித்துப் பார்க்கலாம்.

இன்னும் புரியும் வகையில் சொன்னால், குங்கூர்ந்த கோளங்களை மனதிற் கற்பிப்பதற்கு மாற்றாக, அவற்றின் இரு
பரிமானப் படிவங்களான குங்கூர்ந்த வட்டங்களை நினைவு கூரலாம். என்ன, நினைவுக்கு வருகிறதா? ஒரு குளத்தில்
கல்லை விட்டெறிந்தால் பார்க்க முடிகிற அந்தத் துடிக்கும் வட்டங்களை மனதில் எண்ணிப் பாருங்கள். மிகவும்
முயன்றால், 20 குங்கூர்ந்த வட்டங்கள் வரை நீங்கள் பார்க்கலாம்.

காட்சி என்பதை தன் கண்களால் மட்டுமே ஒரு நிரவல் மாந்தன் பார்க்கிறான்; இருப்பினும் அவன் கண்கள் அவனை
ஏமாற்றா என்று நம்பும்படி, ஒரு பழுதான பீடு அவனை ஆட் கொண்டிருக்கிறது. அந்த மாந்தன் தவறிப்
போகிறான். ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். பார்ப்பதற்குக் காட்சி எப்படி இருந்தாலும், நீங்கள் நேரே
பார்ப்பது மெய் "இல்லை". காட்டாக, ஒரு மரத்தைப் பார்த்து நீங்கள் அதைப் புரிந்து கொண்டீர்கள் என்றால்,
அதைத் தவறாகப் புரிந்து கொண்டீர்கள் என்றுதான் நான் சொல்ல முடியும். ஏனெனில், ஒளிச்சேர்க்கையின்
செயற்பாட்டை நீங்கள் பார்க்கமுடிகிறதோ? அதே போல மண்ணிற்குள் கிடக்கும் வேர்முடிச்சுக்களை நீங்கள்
பார்க்க முடிகிறதோ? அப்புறம் என்ன நீங்கள் புரிந்து கொண்ட அழகு? ஒரு மரத்தின் மிகப் பாரிய
பாகங்களே உங்கள் கண்ணிற்கு முன் மறைந்து அல்லவா கிடக்கின்றன?

உங்கள் கண்ணை முழுக்கவும் நீங்கள் நம்பியும், மிஞ்சிமிஞ்சி மிகச் சிறிய குங்கூர்ந்த கோளத்தை மட்டுமே
நீங்கள் பார்க்க முடிகிறது. (ஞாவகம் இருக்கிறதோ? "கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்;
தீர ஆய்வதே மெய்") அந்த குங்கூர்ந்த கோளத்தில் நீங்கள் பார்ப்பது அதற்கும் அடுத்த பெரிய கோளத்தால்
காரணித்திருக்கிறது என்று உங்களுக்குத் தோன்றவே தோன்றாது. அடுத்த கோளத்தில் நடப்பதும் அதற்கு மேற்பட்ட
பெருங் கோளத்தால் காரணிக்கிறது. இப்படி அது தொடர்ச்சியாகப் போய்க் கொண்டே இருக்கிறது.

இந்தக் காலத்தில் சூழமைவுச் சிந்தனை என்பது ஏன் இவ்வளவு கருக்கொண்டதாகத் தோன்றுகிறது?

இதற்கு விடை சொல்ல, நாம் இருக்கும் இணையத்தையே எடுத்துக் கொள்ளுவோமே! உண்மையில் மாந்த மனங்களைச்
சேர்த்து எழுந்துவரும் ஒரு சூழமைவல்லவா இந்த இணையம்? இந்தச் சூழமைவு எதிர்காலத்தில் முழுதும் பூரணமாகும்
போது, இன்றைக்கு இருப்பதைக் காட்டிலும் கூடவே திரண்டு நிற்கும்.

நீங்கள் ஒரு சில கேள்விகளைக் கேட்கலாம்.

அ) இணையத்தில் இன்றிருக்கும் மனச் சூழமைவு ஏன் பூரகையாக வேலை செய்யாது இருக்கிறது?

ஆ) எந்தப் புனைகள் இந்தச் சூழமைவில் இல்லாதிருக்கின்றன?

இ) எந்தச் செயற்பாடுகள் இந்தச் சூழமைவில் இல்லாதிருக்கின்றன?

ஈ) எந்தப் புனைகளும், செயற்பாடுகளும் ஏற்கனவே இருந்தும், நம்மால் சரியாக அறியப் பட்டது இருக்கின்றன?
அல்லது அவற்றிகுரிய பெரியுதியை நாம் கொடுக்காது இருக்கிறோம் ?

இந்த நான்கு கேள்விகளுக்கான விடைகளை நாம் பெற வேண்டுமானால், மனங்களின் சூழமைவை இயற்கையின்
சூழமைவோடு பொருத்தி பார்க்க வேண்டும். நீங்களே சொல்லுங்கள்; இப்பொழுது இருப்பதைக் காட்டிலும்,
எப்பொழுது மனங்களின் சூழமைவு முழுமையான இயற்கைச் சூழமைவோடு நெருங்கி வருகிறது?

காட்டாக, இயற்கையின் சூழமைவில் 300 புனைகளும், 200 செயற்பாடுகளும் உள்ளன என்று ஒரு வாதத்திற்காகச்
சொல்லுவோமே! அந்த இயற்கையின் செயற்பாடுகளில் மிக்குயர்ந்தவற்றில் ஒன்று ஒளிச்சேர்க்கை. (இதே போல
இன்னொரு மிக்குயர்ந்தது உடனுயிர்ப்பு.)

இந்த ஒளிச்சேர்க்கை ஏன் முகமையானது என்றால் அது உணவுக் கணையின் அடி மட்டத்தில் இருக்கிறது என்ற விடை
புலப்படும்.. அந்தச் செயற்பாட்டின் மூலம் தான் மரங்களும் திணைகளும் பல ஊற்றுக்களைப் பெற்று முழு உணவுக்
கணையையும் தொடங்குகின்றன.

இப்பொழுது உங்களையே கேட்டுப் பாருங்கள்: ஒளிச்சேர்க்கைக்கு ஒக்காக இணைய மனச்சூழமைவில் உள்ளது எது?
குறிப்பிடத்தக்க புது இணைய வணிக முயற்சிகளுக்கு வாய்ப்பாக அமைந்த மிகச் சரியான ஊற்றுக்கண் எது?
தமிழர்களின் மனவெளி எப்படி இருக்கிறது? முந்நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டைக் காட்டிலும் பின்
தங்கியிருந்த அமெரிக்க ஒன்றிய நாடுகள் இன்றைக்கு புதுப்புனைவுக்கு ஊற்றுக்கண்களைக் கொடுப்பதில் பல
ஒளியாண்டுகள் முன்னிருப்பது எப்படி?

தமிழ்மனச் சூழமைவில் மனங்கள் திரளுதற்குத் தேவையான மற்ற செயற்பாடுகளும், புணைகளும் எவை? நம்பகமான
பணக் கொடுப்பு அமைவு இதைச் செய்யுமா? அல்லது ஏமாற்றாளரும் திருடரும் எளிதில் தப்பிக்க முடியாத
இன்னொரு நம்பக அமைவு உருவாக முடியுமா? வேறு ஏதேனும் அமைவுகள் உண்டா? இவற்றுள், எந்த அமைவிற்கு
இன்னொன்றைக் காட்டிலும் உயர்ந்த பெரியுதி உண்டு? அது ஏன்?

இந்தத் தேவைகளை மனதில் வாங்கி வழி கண்டு பிடிப்பது தமிழர்களுக்கு வருமான வாய்ப்புகளாக அமையும்.
இன்னும் நிறையாத மனங்களின் வெள்ளைவெளியை வெளிக் கொணர்வது, மற்ற வாய்ப்புக்களையும் எடுத்துக் காட்டும்.

மேலே கூறியது எல்லாம் சூழமைவின் சிந்தனையைக் கைக்கொள்ளும் போது வெளிவரும். அப்படி வெளிவரும்
என்பதாலேயே சூழமைவுச் சிந்தனை இந்தக் காலத்தில் தமிழருக்கு மிகவும் முகமையாகிறது.

Ecosystems Thinking For The Minds Ecosystem
Draft 0.2
By Bala Pillai
June 9 2002, Sydney


Each of us can see only up to a certain big picture cause-effect level. To
see cause-effect beyond that big picture level, one has to think and reflect
deeply or be attentive and be able to ask questions of one who does. As
well, one has to interact with unlike minds, for the very existence of
greater pictures to be sparked.

Ecosystems thinking has us to look at some of the biggest pictures possible.
The small picture-big picture continuum is best imagined by its
representation, concentric spheres.

Concentric spheres in turn are best recalled by their two-dimensional
equivalents, concentric circles -- yes, those reverberating circles you see
when you throw a stone into a pond. You may see 20 concentric circles.

Average man only sees with his eyes and he tends to believe
that his eyes cannot belie him. He is wrong. What you see is *not* the
truth, though it may be. For example, if you understood a tree by what you
see, you will understand wrongly, because you cannot see the photosynthesis
process. Neither can you see the crown roots. The most important parts of
the tree, are hidden to the naked eye.

If you trust your eyes fully, you are seeing the smallest concentric sphere.
It will not occur to you that much of what happens in this concentric
sphere, is caused by a sphere one size larger. And much of what happens in
the one size larger sphere was caused by a sphere yet another size larger.
This goes on and on.

Why is ecosystems thinking crucial today?

Let us take the Internet. It is really an emerging ecosystem of human minds.
It is working best where minds share a similar ethos -- where minds have
common references to build trust and relationships off.

When the ecosystem is more complete, it will thrive lots more than it is
thriving today. Some questions you may ask are:-

(a) Why is the ecosystem of minds on the Internet not working perfectly?

(b) What components are missing?

(c) What processes are missing?

(d) What components or processes are already there, but are not understood
well or not accorded the priority they deserve?

The answers to these are best found in paralleling Nature's ecosystem to
that of what the ecosystem of minds should have viz (a) to (d) when it is
much
closer to the completeness of Nature's ecosystem, than it is now.

For example, let us for argument sake, say that there are (i) 300 components
and (ii) 200 processes in Nature's ecosystem. We know that one of the
topmost processes in Nature is photosynthesis. Yet another topmost one is
symbiosis.

Question: What are the equivalents of photosynthesis and symbiosis in the
minds ecosystem? What are the hurdles to them forming? What returns are
there if these hurdles are removed? What ingredients are needed to remove
these hurdles and to forge these processes?

Why is photosynthesis important? It is at the bottom of the food chain. It
is the process by which trees and plants obtain resources to start the whole
food chain.

Now ask, what is the equivalent of photosynthesis in the ecosystem of minds
on the Internet? What is the most significant source of resources for
significant new Internet ventures? In the West, it is passionbits including
Open Source and venture capital. How about your ethos' space?

What are the parallels to the other 300 components and 198 processes in
Nature's ecosystem, in your minds ecosystem?

Would trust between participants be one? Would more intensive networking
between minds be another? Would networking between complementary folks, as
in Nature, make it more worthwhile? How can complementariness be revealed
easier? Would a database of profiles that is shared by participants be a
way?

Would a rating on each of the 6Rs be one?

[6Rs = resourcefulness, responsibility, responsiveness, reliability,
rapport-building, risk-taking]

How do we rate the 6Rs? Can we experiment with some of the models currently
used in psychological testing, while we find better ways?

Is interaction a precusor to trust building? How do we increase interaction?
What are the key ingredients of interaction, that make it a precursor to
trust building? Would the sense of "presence" when we see each other
face-to-face, be one? How do we recreate this in the minds ecosystem? Can we
go some way through the sense of presence in Instant Messaging and Webcams?

Of these which is of a higher priority than another? Why?

The solving of all these needs are income opportunities for minds in your
ethos space.

The unearthing of other whitespace, unfilled space in your minds ecosystem,
will show up all the other opportunities.

And that comes from ecosystems thinking. That is why ecosystems thinking is
important.


(This message is released for use, redistribution, or modification under
the OpenContent License . In plain
English, the license relieves the author of any liability or implication of
warranty, grants others permission to use the Content in whole or in part,
and ensures that the original author will be properly credited when the
Content is used. It also grants others permission to modify and
redistribute the Content if they clearly mark what changes have been made,
when they were made, and who made them. Finally, the license ensures that
if someone else bases a work on OpenContent, the resultant work will be
made available as OpenContent as well. Please send comments,
suggestions or edits to the author, Bala Pillai at bala@... or
bala@... Nandri)


anpudan../bala
bala@...
bala@...
Founder/Producer/Funder, Thamil Innaiyam (since 1995)
Click on http://groups.yahoo.com/group/erumbugal
Founder, The Asia Pacific Internet Company
Networking Minds in Halls Without Walls Since 1995
Sydney, Australia