From sadayan50@... Wed Jun 12 03:14:14 2002
Return-Path:
X-Sender: sadayan50@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 12 Jun 2002 10:14:14 -0000
Received: (qmail 68688 invoked from network); 12 Jun 2002 10:14:14 -0000
Received: from unknown (66.218.66.218) by m11.grp.scd.yahoo.com with QMQP; 12 Jun 2002 10:14:14 -0000
Received: from unknown (HELO web13804.mail.yahoo.com) (216.136.175.14) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 12 Jun 2002 10:14:14 -0000
Message-ID: <20020612101414.37190.qmail@...>
Received: from [195.229.240.243] by web13804.mail.yahoo.com via HTTP; Wed, 12 Jun 2002 03:14:14 PDT
Date: Wed, 12 Jun 2002 03:14:14 -0700 (PDT)
Subject: Re: [agathiyar] Re: what is the tamil word for ....
To: agathiyar@yahoogroups.com
In-Reply-To: <3.0.3.32.20020612073153.00746e84@...>
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=us-ascii
From: Shaboo
X-Yahoo-Group-Post: member; u=26887761
X-Yahoo-Profile: sadayan50
X-Yahoo-Message-Num: 18570



இது முற்றிலும் நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. யாரும் சீரியசாக எடுத்துக்
கொள்ள வேண்டாம்


> > Date: Mon, 10 Jun 2002 21:32:13 +0300
> >Subject: Re: what is the tamil word for ....
> >
lsk wrote:
> >>vaNakkam
> >>
> >>its soccer time.
> >>what is the tamil word for "goal" in the context
> of soccer ?

திரு.இராம.கி

இரு பந்தாட்ட அணிகள் ஒன்றையொன்று வெற்றிகொள்ள அவர்களுக்குள்ளே வைத்துக்
கொள்வது ஒரு 'குறிக்கோள்'. அதாவது கால்பந்தை குறி பார்த்து வலைக்குள்
உதைப்பதால் அது குறி+கோள் = குறிகோள். தவிர முன்பு கால் பந்தாட்ட
வீரர்கள் சரியாக விளையாடவில்லையெனில், அவ்வணியின் மேலாளர் கையில்
ஒரு 'கோலை' வைத்துக் கொண்டு வீரர்களை அதட்டி விளையாடச்
சொல்வார்கள். அக்கோலுக்கு அஞ்சி பந்தாட்ட வீரர்கள் பந்தை வலைக்குள்
செலுத்தி விடுவார்கள். இதனாலும் இதற்கு 'கோல்' என்ற பெயர் வந்தது.
ஆகையால் கால்பந்து விளையாட்டில் கோள் அல்லது கோல் போடுவது என்பது
ஆங்கிலச் சொல் அல்ல நல் தமிழ் ஆகும்.

திரு.ஆசிப் மீரான்

இப்போது மட்டைப்பந்தில் சொல்லிவைத்துக் கொண்டு (match fixing)
ஆடுவதுபோல, கால்பந்தாட்டத்திலும் விளையாட்டு வீரர்கள் ஒருவருக்கொருவர்
கோள் மூட்டி விடுவார்கள். கோள் மூட்டி விட்டு வீரர்கள் அசந்த சமயம்
கோல் போட்டுவிடுவார்கள். இது சாத்தான் குளத்தில் சர்வ சாதாரணம்.

திரு.lsk

please answer the issues only.
BTW Saudi Arabian Football team Manager said that his
players didn't performed well, since Saudi Arabian
opponent's goal area is always directly facing
towards Mecca, and my players are refused to kick
towards Mecca.
http://www.lskumar.com -----
http://www.egroups.com/messages/lsk/
ICQ -------------------------
http://web.icq.com/wwp?Uin=41865351
YIM ---
http://edit.yahoo.com/config/send_webmesg?.target=lskumar
=================================================================
திரு. ஜெயபாரதி

இந்தக் 'கோள் கோல்' என்ற வார்த்தையை மண்டையில் போட்டு குழப்பிக்
கொண்டிருந்த நேரம், வெளியேயும் கோல் கோல் என்ற சத்தம் கேட்டது.
என்னவாக இருக்கும் என்று வெளியில் சென்று பார்த்தால் , கோத்தா
கினபாலாவிலிருந்து ஒரு கோவில் கோஷ்டி 'கூழ்' காய்ச்சி ஊற்றினார்களாம்
அதை எனக்கு கொடுப்பதற்காக வெகு தொலைவிலிருந்து வந்திருப்பதாக
சொன்னார்கள். ( அவர்கள் கூழ் கூழ் என்றதுதான் என் காதில் கோல் கோல்
என்று கேட்டிருக்க வேண்டும்) நான் ஏற்கனவே அகத்தியத்தில் கூழ் காய்ச்ச்சுவது
எப்படி என்று எழுதியிருக்கிறேன். அதை தேடிப் பார்க்க வேண்டும்.

சாபு

அய்யா இராம.கி நம் பூமி உருண்டையாக இருப்பதனால்தானே இதை பூகோளம்
என்கிறோம். அதேபோல் கால்பந்து உருண்டையாக இருப்பதால் அந்த ஆட்டத்தில்
ஆடும் குறியீடுகளுக்கு கோள்/கோல் என்று புழங்குகிறோமோ ?

இரா.முருகன்

தோள் கண்டார் தோளே கண்டார்
கோல் கொண்டார் கோலே கொண்டார்

என்ன நங்கநல்லுராரே இவ்வரிகளை வைத்து ஒரு வெண்பா தாருங்களேன்.

திரு.ஹரிகிருஷ்ணன்

என்ன முருகா ? அழகான வரிகளை கொடுத்து விட்டு உடனே 'பா' தா என்றால்
தரமாட்டேம்'பா' . பாரதி பாடல்களில் பார்க்க வேண்டும் கோள் கோல்
பற்றி ஏதாவது சொல்லியிருக்கிராறா என்று ?

திரு.

<தோள் கண்டார் தோளே கண்டார்
<கோல் கொண்டார் கோலே கொண்டார்

அற்புதம்.

திரு.எல்லேராம்

இந்த கோல் கோள் வார்த்தை விளையாட்டு ரொம்ப பிடித்து போய்விட்டது,
நம் பங்கிற்கு ஏதாவது ஆராய்ச்சி செய்வோமென கோல்கொண்டா (
அமெரிக்காவில் ஏது 'கோல் கொண்டா' என்று திரு திரு வென விழிக்க
வேண்டாம். தாய் மண்ணே வணக்கம் என்று வரும்போதே தள்ளிக் கொண்டு வந்தது)
பிராந்தியை எடுத்து அதில் மேல் ஒரு ஐஸ் துண்டை போட்டவுடன், எனக்கு
நம்மாள் ஐஸ் நினைவு வந்து விட்டது. கோல் கோள் எல்லாம் அம்பேல்.

திரு.போசு

மதுரையில் இதற்கு பெயர் கால்பந்து அல்ல, கோல் போடுவதால் கோல்பந்து.
மதுரை தெருக்களில் விடிய விடிய விளையாடுவார்கள். மசாலா பாலைக்
குடித்துக் கொண்டு விளையாட்டைப் பார்ப்பதே தனி போதையைத் தரும். ஹும்
கும்பகோணம் போனபிறகு இதெல்லாம் காணுவது அரிதாகி விட்டது.

திரு நா. கணேசன்.

நான் எழுதிய காராளன் விழுப்பரையன் மடலில் கோல்/கோள் இருந்தாலும்
இருக்கும். தேடிப்பார்க்க வேண்டும்

திரு.மணி மணிவண்ணன்

எப்பொழுது ஈழத் தமிழர்கள் உலகக் கோப்பைக்கு தேர்ந்தெடுக்கப்
படுகிறார்களோ அப்போதுதான் கால்பந்தாட்டத்தை கண் கொண்டு பார்ப்பேன்.


=====
அன்புடன்

சாபு
துபாய்

__________________________________________________
Do You Yahoo!?
Yahoo! - Official partner of 2002 FIFA World Cup
http://fifaworldcup.yahoo.com