From harikris@... Wed Jun 12 19:27:22 2002
Return-Path:
X-Sender: harikris@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 13 Jun 2002 02:27:21 -0000
Received: (qmail 86206 invoked from network); 13 Jun 2002 02:27:21 -0000
Received: from unknown (66.218.66.216) by m1.grp.scd.yahoo.com with QMQP; 13 Jun 2002 02:27:21 -0000
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 13 Jun 2002 02:27:20 -0000
Received: (qmail 27211 invoked by uid 7002); 13 Jun 2002 07:57:18 +0530
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by webmail5.maa.sify.net with SMTP; 13 Jun 2002 07:57:18 +0530
Received: (qmail 27161 invoked by uid 7002); 13 Jun 2002 07:57:14 +0530
Received: from unknown (HELO g9d6h9) (210.214.131.129) by webmail5.maa.sify.net with SMTP; 13 Jun 2002 07:57:14 +0530
Message-ID: <00fd01c21282$9d32dd40$3c83d6d2@g9d6h9>
To:
References:
Subject: Re: [agathiyar] Re: kaNNOttam ennum kaziperum kArikai
Date: Thu, 13 Jun 2002 08:01:41 +0530
MIME-Version: 1.0
X-Priority: 3
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook Express 5.50.4522.1200
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.50.4522.1200
From: "Hari Krishnan"
X-Yahoo-Group-Post: member; u=35460435
X-Yahoo-Profile: harikrishnan61
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 18587
அன்புள்ள குமார்,
அதில் என்ன "வளி வழங்கும்" என்று மிகத் தனியாக பஞ்ச பூதங்களில் ஒன்றை மட்டும் குறித்த ஒரு அடைமொழி?
மண்திணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்தியற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சிய தகலமும்
வலியும் தெறலும் அளியும்
என்ற புறநானூற்றுப் பாட்டு, காற்றை வலிமைக்குத்தான் நேர்ப்படுத்துகிறது. 'வலிய தீயை வளர்ப்பான் எளிய தீயை அவிப்பான்' என்றுதான் பாரதி சொல்கிறான். சாதாரணமாக நீர்தான் தண்-அளிக்குஉவமிக்கப்படும். இவர் வளியை அருளோடு சேர்க்கிறார். வேறு ஏதோ விஷயம் இருக்கிறது. வளியின் ஒவ்வொரு இயக்கத்தையும், இயல்பையும் நிதானமாகப் பொருத்திப் பார்த்தால்தான் புரியும்.
உங்களுடைய பார்வையைச் சொல்லுங்கள் குமார். செவிவாசலில் கோலம் போட்டாயிற்று.
அன்புடன்,
ஹரி கிருஷ்ணன்.
----- Original Message -----
From: sarabeswar
To: agathiyar@yahoogroups.com
Sent: Thursday, June 13, 2002 7:30 AM
Subject: [agathiyar] Re: kaNNOttam ennum kaziperum kArikai
மிக்க நன்றி ராமண்ணா.
மோதிரக்கை குட்டுமொரு உருவகமென்றே
நினைக்கிறேன். அதையும் அப்புறம் பார்ப்போம். இ
இன்னொரு குறளைப் பற்றியும் எழுதவேண்டும்.
குறள் 245 -
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.
அன்புடன்,
குமார்
ஜாவா
[Non-text portions of this message have been removed]