From jaybee@... Thu Jun 13 05:14:38 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 13 Jun 2002 12:14:38 -0000
Received: (qmail 48227 invoked from network); 13 Jun 2002 12:14:38 -0000
Received: from unknown (66.218.66.218) by m13.grp.scd.yahoo.com with QMQP; 13 Jun 2002 12:14:38 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 13 Jun 2002 12:14:37 -0000
Received: from user (sp-103-38.tm.net.my [210.186.103.38]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXN00NB38O95A@...> for agathiyar@yahoogroups.com; Thu, 13 Jun 2002 20:14:36 +0800 (SGT)
Date: Thu, 13 Jun 2002 20:14:43 +0800
Subject: AwwaikkuRaL(81-90)
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: netranger@...
Message-id: <3.0.3.32.20020613201443.0076d6ec@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: Gnanavettiyan by way of jaybee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18595

Subject:
awwaikkuRaL(81-90)
Date:
Thu, 13 Jun 2002 11:56:47 +0530
From:
ஞானவெட்டியான்
To:
agathiyar@yahoogroups.com



ஒளவைக் குறள் (81 - 90)

9. உள்ளுணர்வு

உள்ளுணர்வாவது அறிவாகிய பிரணவத்தின்
சக்தியைக்கொண்டு யாவற்றையும் அறியும் தன்மை.

81. எண்ணிலியூழி தவஞ் செய்திங் கீசனை
உண்ணிலைமை பெற்ற துணர்வு.

கணக்கற்ற முறை அசைவற்ற தன்மையை உண்டாக்கித்
தவமியற்ற, அசைவற்ற நிலைமை ஏற்படுமிடமாகிய
இருதயகமலத்தில், சிவத்தை நிலைபெற்ற தன்மையுடன்
அடைந்ததே அறிவின் சக்தியாம்.
ஆக, தவத்தின் மூலமாய் அசைவையொழித்து, சிவத்தை
இருதயகமலத்தில் நிறுத்த அறிவுக்கு அளவற்ற
சக்தியுண்டாம்.

ஊழி என்பது பஞ்சபூதங்கள் மறையுங்காலம். பஞ்சபூதத்தின்
சூக்குமமாகிய உடலுக்கு ஊழிக்காலம் மரணம்.
ஞானகர்மத்துக்கு ஊழிக்காலம் மனோநாசமே. உணர்வு என்பது
அறிவின் சக்தியை விவகார தசையில்பிரயோகித்தலே
யாம்.

வாசிட்டம்:

"தெரி பொருளுந் தரிசனமுஞ் சேரும் போதில்
சேர்ந்த சுகமறிவு மிகச் சிறந்ததாகும்." எனவும்,

"உள்ளும் புறமும் அசைவின்றி உயிர்மன்னு மடங்கு மெனிற,
றள்ளுறாமலொருக் காலுந் தாதுவெல்லாஞ் சடத்துறையும்"
என்றும்,

வாசிட்டம் - புசுண்டர் கதையில்:

"இனையயாரு மிந்தவறிவு யிறவா திருக்க வீதறிய,
வினயமின்றி மிகச்சேர்ந்தார் வீணர் செருக்குமிகுமுரப்பு,
முனையில் வின்னா ணோசையைப் போன்மூடர்
கேட்பதிறப்பதற்கே,
யனையர் வீணாட் கழிப்பதலா லறியா வறிவை
யறியாரே."
எனக் கூறியிருத்தல் காண்க.

82.பல்லூழி காலம் பயிறனை யர்ச்சித்து
நல்லுணர்வு பெற்ற நலம்.

நன்மையைய் கொடுக்கும் அறிவானது அடைந்த நன்மை, பல
முறைகளாக அசைவற்ற மனத்துடன் சிவத்தை அருச்சித்து
சிவவொளிவை அடைந்ததே.

83.எண்ணற்கரிய வருந்தவத்தா லன்றே
நண்ணப் படுமுணர்வு தான்.

உணர்வாகிய அறிவானது தவத்தினாலல்லாது வேறு
விதத்தால் பூரணமடையாது.

84.முன்னைப் பிறப்பின் முயன்ற தவத்தினால்
பின்னைப் பெறுமுணர்வு தான்.

பிறப்பு - உடல்

முன்னர் முயன்று தவத்தால் ஏற்றிய அகத் தீயால்தான்
உணர்வாகிய அறிவு பூரணம் பெறும்.
அதாவது, முதலில் தவத்தைச் செய்து அதனாலுண்டாகிய
சக்தியை உணர்வாகிய அறிவு அடையும்.
'முன்னை', 'பின்னை' என்பதை முன்சென்மம்,பின்சென்மம்
என்று எடுத்துக் கொள்வதற்கில்லை. இத் தேகமெடுத்து என்ன
பயன்? இதிலுள்ள அறிவின் கதியென்ன?

வாசிட்டம் சனகனின் கதையில்:

"சங்கற்ப நாசத்தா லெளிதாக மனநாசந்தானே யெய்து,
மங்குற்ற மனமிறக்கிற் சனன மரணங்களெனு மரமுமாயு,
மிங்கிப்பா லெனைத் திருடுங் கள்வனை கண்டேன்
கண்டேனிவன்பேர் நெஞ்சம்,
பொங்குற்ற நெஞ்சத்தா னெடுநா ணொந்தே னின்றுபொன்று
விப்பேன்"

இதைப் புரிய மருமமுடிச்சவிழும்.

85.காயக்கிலேச முணர்ந்த பயனன்றே
ஓயா வுணர்வு பெறல்.

காயக்கிலேசம் - மரணபயம்
உடல் அநித்தியமென உணர்ந்ததன் பயன், இடைவிடாத
தவத்தால் அறிவாகிய உணர்வை(உணர்வாகிய
அறிவை)னடைவதே.

86.பண்டைப்பிறவிப் பயனாந் தவத்தினால்
கண்டங் குணர்வு பெறல்.

பிறவி - மூலவித்து
எழுபிறவியின் வித்தாலேயே தவம் முடியுமென்பது
அறிவாகிய உணர்வு பெறுதலே.

எழுபிறவி:

1.பஞ்ச பூதங்கள்
2.அவைகளின் கூட்டுறவால் உண்டான சக்திகள்
3.அச்சத்திகளை பிரிதிவிசத்தி உள்வாங்கி ஓஷதிகளை
வெளிப்படுத்தல்
4.ஓஷதிகளிலிருந்து வித்தாகிய சீவவுணவுகளை
உண்டாக்கல்
5.உணவையுண்டு நாதபிந்துக்களை உண்டாக்கல்
6.நாதபிந்துக்களால் இனப்பெருக்கம் செய்தல்
7.மறுபடி மனித உருவாய் வெளிப்பட்டு நிற்றல்

87.பேராத் தவத்தின் பயனாம் பிறப்பின்மை
ஆராய்ந் துணர்வு பெறின்.

ஆராய்வின் மூலமாக உணர்வாகிய அறிவை பெற்றால்,
இடைவிடா ஞானசாதனைகளின் பயனாகிய பிறப்பின்மையை
அடையலாம்.(பிறப்பு என்பது எண்ணப் பிறப்பு)

88.ஞானத்தாலாய வுடம்பின் பயனன்றே
மோனத்தா லாய வுணர்வு.

ஞானசாதனைகளினால் உண்டாகும் ஞானவுடலின் பயன்,
மவுனத்தால் கிடைக்கும் உணர்வை அடைவதே.
"மோனமென்பது ஞான வரம்பு"

89.ஆதியோடொன்று மறிவைப் பெறுவதுதான்
நீதியாற் செய்த தவம்.

ஆதியோடு - சிவகலையோடு
அறிவாகிய பிரணவத்தில் சிவகலையைச் சேர்த்தலே
அரிய தவமாம்.

90.காடு மலையுங் கருதித்தவஞ் செய்தால்
கூடு முணர்வின் பயன்.

காடு - உடலில் உள்ள அஞ்ஞான தத்துவங்கள்
மலை - பிரணவ மேரு

பிரணவத்தை அறியவும், அதை மறைக்கும் அஞ்ஞான
தத்துவங்களைப் போக்கவும், எண்ணியே ஞான வினையைச்
செய்தாலே அறிவினால் உண்டாகும் பயன்வெளிப்படும்.

திருமந்திரம் :

"ஒடுங்கு நிலைபெற்ற உத்தமருள்ள
னடுங்குவதில்லை நமனு மங்கில்லை
இடும்பையுமில்லை யிராப்பகலில்லை
படும்பயனில்லை பற்று விட்டோர்க்கே"

"பிறப்பறியார் பலபிச்சை செய் மாந்தர்
சிறப்பொடு வேண்டிய செல்வமும் பெறுவர்
மறுப்பில ராகிய மாதவஞ் செய்வார்
பிறப்பினை நீக்கும் பெருமை பெற்றோரே."

"சாத்திர மோதுஞ் சதுர்கலை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தவிப் பார்வை பசுமரத் தாணிபோ
லார்த்த பிறவி யகல விட்டோடுமே."

- ஞானவெட்டியான்
- திண்டுக்கல்(தமிழகம்)