From arull@... Thu Jun 13 07:25:08 2002
Return-Path:
X-Sender: arull@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 13 Jun 2002 14:25:08 -0000
Received: (qmail 65544 invoked from network); 13 Jun 2002 14:25:07 -0000
Received: from unknown (66.218.66.216) by m11.grp.scd.yahoo.com with QMQP; 13 Jun 2002 14:25:07 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 13 Jun 2002 14:25:07 -0000
Received: from tm.net.my (sja-179-142.tm.net.my [202.188.179.142]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with ESMTP id <0GXN0003UEPTU5@...> for agathiyar@yahoogroups.com; Thu, 13 Jun 2002 22:25:06 +0800 (SGT)
Date: Thu, 13 Jun 2002 22:18:24 +0800
Subject: திருமுறைத் தியானம்
To: "agathiyar@yahoogroups.com"
Message-id: <3D08A9B0.C2C0283F@...>
MIME-version: 1.0
X-Mailer: Mozilla 4.77 [en] (Win95; U)
X-Accept-Language: en
From: arull othuvar/ஓதுவார்
X-Yahoo-Group-Post: member; u=21400202
Content-Type: text/plain
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 18601

திருச்சிற்றம்பலம்

திருமுறைத்தியானம்

ஸ்ரீமடம் ஆஸ்தான வித்வான் புலவர்.
பு.மா.ஜய செந்தில்நாதன்

ஜூன் 13

திருஞானசம்பந்தர்

அரிசிற்கரைப்புத்தூர்

சொர்ணபுரீஸ்வரர் - சௌந்தரநாயகி

"அரிசிற்கரைப் புத்தூரா போற்றி"

நிலந்தணீரோடு அனல்கால் விசும்பின் நீர்மையான்
சிலந்தி செங்கோற் சோழனாகச்செய்தான் ஊர்
அலந்த அடியானற்றைக் கன்றோர் காசெய்திப்
புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.

நிலம் நீர் முதலாகிய ஐம்பூதங்களாய் விளங்கும்
அண்ணலே! பிறவிப் புண்ணியத்தால் சிலந்தி யொன்று தன்
வாய்நூலால் உனக்குப் பந்தரிட்டு வழிபட, அச்செயலுக்கு
மகிழ்ந்து அடுத்த பிறவியில் அதனைக் கோச்செங்கட்
சோழனாக அவதரிக்கச் செய்து, அவன் பணியால் மாடக்
கோயில்களை மகிழ்வுடன் ஏற்ற மணியே! அடியவர்கள்
நாடொறும் காலை மாலை வேளைகளில் மலரிட்டு வழி
பட்டுப் போற்றுகின்ற அரிசிற்கரைப் புத்தூரில் அமர்ந்துள்ள
தேவே!
எளியேனின் செயல்களையும் வழிபாட்டினையும்
சிவபுண்ணியச் செயல்களாக ஏற்றருளி அருள்வாயாக!

திருச்சிற்றம்பலம்

ஓதுவார்
பினாங்கு.


[Non-text portions of this message have been removed]