From aysh@... Thu Jun 13 18:01:36 2002
Return-Path:
X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 14 Jun 2002 01:01:36 -0000
Received: (qmail 26224 invoked from network); 14 Jun 2002 01:01:35 -0000
Received: from unknown (66.218.66.217) by m3.grp.scd.yahoo.com with QMQP; 14 Jun 2002 01:01:35 -0000
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 14 Jun 2002 01:01:34 -0000
Received: (qmail 9274 invoked by uid 7002); 14 Jun 2002 06:31:32 +0530
Received: from unknown (HELO webmail5.maa.sify.net) (202.144.76.21) by webmail5.maa.sify.net with SMTP; 14 Jun 2002 06:31:32 +0530
Received: (qmail 9265 invoked by uid 7002); 14 Jun 2002 06:31:31 +0530
Received: from unknown (HELO User) (210.214.131.224) by webmail5.maa.sify.net with SMTP; 14 Jun 2002 06:31:31 +0530
To: "Agathiyar@Yahoogroups. Com"
Subject: velu nachchiyar
Date: Fri, 14 Jun 2002 06:30:28 +0530
Message-ID:
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"
Content-Transfer-Encoding: 8bit
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
Importance: Normal
From: "era.murugan achwin"
X-Yahoo-Group-Post: member; u=35388564
X-Yahoo-Message-Num: 18607

கணையாழியில் 'வேலு நாச்சியார்' என்ற பெயரில் கே.ஜீவபாரதி
எழுதிய நாவலுக்கு விமர்சனம் படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்
சிவகங்கைச் சீமையின் முதல் விடுதலைப் போராட்ட வீராங்கனை
நாச்சியார் அம்மாதான்.

ஜான்சி ராணி லட்சுமிபாய் போன்ற விடுதலைப் போராட்ட வீரப்
பெண்மணி வேலு நாச்சியார் என்று எழுதிய வரலாற்று ஆசிரியர்களை
முட்டிக்கு முட்டி தட்ட வேண்டும்.
யாருக்கு யார் உவமை?

வேலுநாச்சியார் போல் மகத்தான விடுதலைப் போராட்ட வீராங்கனை
ஜான்சி ராணி என்று திருத்தி எழுத வைக்க வேண்டும். அதுதான்
நியாயம்.

போகட்டும். நாவலில் "ஆகமத்தைக் காரணம் காட்டியதற்காக அய்யர்களை
நாடு கடத்த உத்தரவிடுகிறேன்" என்று வேலு நாச்சியார் சொல்வதாக
வருகிற செய்தி விமர்சனத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.

வேலுநாச்சியாரின் காலமான பதினெட்டாம் நூற்றாண்டு கொந்தளிப்பான
அரசியல் சூழ்நிலை நிலவிய காலம். அவர் அப்படி யாரையும் நாடு
கடத்தினாரா? இதற்கு வரலாற்று ஆதாரம் உண்டா?

அன்புடன்,
இரா.முருகன்