From jaybee@... Thu Jun 13 21:22:59 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 14 Jun 2002 04:22:59 -0000
Received: (qmail 31613 invoked from network); 14 Jun 2002 04:22:59 -0000
Received: from unknown (66.218.66.216) by m3.grp.scd.yahoo.com with QMQP; 14 Jun 2002 04:22:59 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 14 Jun 2002 04:22:59 -0000
Received: from user (sp-103-33.tm.net.my [210.186.103.33]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXO001HJF6E1G@...> for agathiyar@yahoogroups.com; Fri, 14 Jun 2002 11:32:40 +0800 (SGT)
Date: Fri, 14 Jun 2002 11:32:47 +0800
Subject: Re: [agathiyar] velu nachchiyar
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020614113247.0075fc48@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18612
At 06:30 AM 6/14/02 +0530, you wrote:
>
>போகட்டும். நாவலில் "ஆகமத்தைக் காரணம் காட்டியதற்காக அய்யர்களை
>நாடு கடத்த உத்தரவிடுகிறேன்" என்று வேலு நாச்சியார் சொல்வதாக
>வருகிற செய்தி விமர்சனத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
>
>வேலுநாச்சியாரின் காலமான பதினெட்டாம் நூற்றாண்டு கொந்தளிப்பான
>அரசியல் சூழ்நிலை நிலவிய காலம். அவர் அப்படி யாரையும் நாடு
>கடத்தினாரா? இதற்கு வரலாற்று ஆதாரம் உண்டா?
>
>அன்புடன்,
>இரா.முருகன்
தமிழ் நாவலாசிரியர்கள் பெரும்பாலும் historicity என்னும்
சமாசாரத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்கள் கதைகளில்
Madurai city, Madras city-யெல்லாம் வரும். ஆனால் அந்த
இன்னொரு city மட்டும் வராது.
கதைக்காகக் கற்பனை, கற்பனைக்காகக் கதை என்றுதான்
விளங்குமேயல்லாது உண்மைச் சம்பவம் என்பது மிக அரிதாகவே
காணப்படும்.
சில கதாசிரியர்கள் வரலாற்று நாயகர்களையும் சில
சம்பவங்களையும் வைத்துக்கொண்டு மற்றவற்றைக் கற்பனை
செய்துகொள்வர். பலர், பெயர்களை மட்டுமே வைத்துக்கொண்டு
மற்ற எல்லாவற்றையும் கற்பனை செய்துகொள்வர்.
ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.
அதற்கு வரலாற்றுப் பின்னணியையும் தெரிந்துகொள்ள
வேண்டியது அவசியமாகிறது.
மதுரையின் இடைக்காலப் பாண்டியர்களைஒடுக்கிவிட்டு
9-ஆம் நூற்றாண்டில் சோழர்கள் பேரரசை நிறுவிக்கொண்டனர்.
ஆரம்பத்தில் பாண்டியர்கள் போராடிப்பார்த்தனர். ஆனால்
அடக்கப்பட்டனர். ஒருகாலகட்டதில் முதலாம் ராஜேந்திர சோழர்,
பாண்டிய அரசகுலத்தை ஒதுக்கித்தள்ளிவிட்டு 'சோழபாண்டியர்'
என்னும் புதிய அரசபரம்பரையைத் தோற்றுவித்தார். அவருடைய
மகன்களே 'சுந்தர சோழ பாண்டியன்', அந்தச்சோழபாண்டியன்'
'இந்தச்சோழபாண்டியன்' என்றெல்லாம் பெயர் போட்டுக்கொண்டு
ஆண்டனர். இரண்டு மூன்று தலைமுறைகள் கழிந்தபிறகு முதலாம்
குலோத்துங்க சோழர், மீண்டும் பழைய பாண்டிய மரபை தமக்கு
அடங்கிய அரசர்களாகப் பாண்டியநாட்டை ஆளவிட்டார்.
1120-இல் மதுரையில் ஸ்ரீவல்லபபாண்டியர் என்பவர் ஆண்டு
வந்தார்.
அதன்பின்னர் 1160-களில் பாண்டியர்கள் சிங்களவர்களின்
உதவியோடு சோழர் பிடியிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள
முயன்றனர். ஆனால் அதுவும் முறியடிக்கப்பட்டுவிட்டது. அதில்
சம்பந்தப்பட்டிருந்த வீரபாண்டியனின் மனைவியரை மூன்றாம்
குலோத்துங்க சோழர் வேளமேற்றினார்.வேளம் என்பது
அந்தப்புரம்.
அடுத்த தலைமுறையைச்சேர்ந்த ஜடாவர்மன் குலசேகரபாண்டியர்
1196-இல் சுதந்திரம் அடைய முயன்றார். ஆனால் மூன்றாம் குலோத்துங்க
சோழர் அந்த முயற்சியை முரட்டுத்தனமாக முறியடித்தார். அதன் விளைவாக
மதுரையில் பாண்டியர்களின் மாடமாளிகைகள் அழிக்கப்பட்டு, அவ்விடத்தில்
கழுதைகளை வைத்து உழுது ,கவடி என்னும் கொள் விதைக்கப்பட்டது.
பாண்டியநாட்டின் பெயரையும் மாற்றி மதுரைக்கும் 'முடித்தலைகொண்ட
சோழபுரம்' என்ற பெயர்மாற்றத்தை ஏற்படுத்திவிட்டு, மதுரையில் வீராபிஷேகம்
விஜயாபிஷேகம் ஆகியவற்றைச் செய்துகொண்டார். பாண்டியர்களிடமிருந்து
'பாண்டியன்' என்னும் அரசமரபுக்குரிய பட்டத்தையும் பறித்து, யாழ் படும்
பாணன் ஒருவனுக்கு அந்தப் பட்டத்தைத் தந்து, பாண்டியர்களைப்
பெரிதும் அவமதித்தார்.
பின்னர் சோழநாட்டை மீண்டும் குலசேகரருக்கே கொடுத்துவிட்டு
'தியாகவினோதன்' என்னும் பட்டத்தைத் தரித்துக்கொண்டு திரும்பினார்.
அதன்பின்னர், சோழரின் அடிப்பட்ட அரசாக பாண்டியநாட்டை
ஆண்டுவந்தார். ஆனால் அவருடைய தம்பியாகிய மாறவர்வன் சுந்தரபாண்டியர்,
1219-ஆம் ஆண்டு, பழைய பல்லவர்களின் வழியில் வந்து காலம் பார்த்துக்
கொண்டிருந்த கோப்பெருஞ்சிங்கன், பழைய வாணர் குலத்தவனாகிய
வாணகோவரையன் ஆகியோருடைய உதவியோடு சோழநாட்டைத் தாக்கிப்
பேரழிவு புரிந்தார். அவ்வமயம் மைசூரின் ஹொய்சாளரின் தலையீட்டால்
சோழநாட்டை மீண்டும் அவர்களிடமே கொடுத்துவிட்டார். ஆகவே
அவருக்கு 'சோணாடு கொண்டருளிய', 'சோணாடு வழங்கியருளிய'
என்ற விருதுகள் ஏற்பட்டன. அதன்பின்னர் 1231-இல் மீண்டும் ஒருமுறை
சுந்தரபாண்டியர், சோழநாட்டைத் தாக்கினார்.