From jaybee@... Thu Jun 13 22:51:52 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 14 Jun 2002 05:51:51 -0000
Received: (qmail 6850 invoked from network); 14 Jun 2002 05:51:51 -0000
Received: from unknown (66.218.66.217) by m2.grp.scd.yahoo.com with QMQP; 14 Jun 2002 05:51:51 -0000
Received: from unknown (HELO ipop4) (202.188.0.248) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 14 Jun 2002 05:51:50 -0000
Received: from user (sp-103-119.tm.net.my [210.186.103.119]) by ipop4.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXO001KHLKUTY@...> for agathiyar@yahoogroups.com; Fri, 14 Jun 2002 13:50:58 +0800 (SGT)
Date: Fri, 14 Jun 2002 13:48:37 +0800
Subject: Re: [agathiyar] RasaVaadham #2
In-reply-to: <3.0.3.32.20020609072325.01b0e018@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Cc: "P.N. Kumar" , pnkumar@..., Los Angeles Ram , netranger@...
Message-id: <3.0.3.32.20020614134837.007710f8@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18613

At 07:23 AM 6/9/02 +0800, JayBee wrote:
>
> வேறு சில சித்தர்கள் ஆன்மாவைப் பரிசுத்தப்படுத்தி
>இறைப்பொருளுடன் ஒன்றுவதையே ஒருவிதமான ரசவாதமாகப்
>பயின்றனர். இதையே 'தெய்வீக ரசவாதம்' என்றும் 'பேரின்பரசவாதம்',
>'இன்பரசவாதம்', என்றும் 'ஞானரசவாதம்' என்றும் சொல்வார்கள்.
>சூஃபி ஞானிகள் இதனை 'கீமியா -ஏ-ச'ஆதத்' என்று குறிப்பிடுவார்கள்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>

நேற்று பினாங்கில் 'ஞானபூமி' பத்திரிக்கையில் ஒரு வரலாற்றைப்
படித்தேன். அதுவும் ரசவாதத்தைப் பற்றியதுதான். பத்திரிக்கை இருந்தால்
அப்படியே பெயர்த்தெழுதலாம். கைவசம் இல்லை. படித்ததை என்னுடைய
வாக்கினால் சொல்கிறேன்.

இமயமலையில் ஞானானந்தர் ஆசிரம் என்றொன்று உண்டு.
அதைப் பற்றிய வரலாறு அது.

அந்த ஆசிரமத்தில் ஆதிகாலத்தில் ஞானானந்தர் என்னும் மகான்
ஒருவர் இருந்தார். அவருக்கு ரசவாதவித்தை தெரியும் என்று எல்லாரும்
பேசிக்கொண்டனர். அதன்மூலம் அவர் இரும்பைப் பொன்னாக்குவார் என்றும்
ஆனால் அந்த வித்தையை அவர் தமது பிரதம சீடனுக்கே சொல்லிக்
கொடுக்கப்போகிறார் என்றும் பேசப்பட்டது.

அந்த வட்டாரத்தில் இருந்த அமர்சிங் என்பவன் கொடிய
கொள்ளைக்காரன். அந்த வித்தையைக் கற்கவேண்டும் என்று நினைத்தான்.
ஏனெனில் அந்த வித்தை மட்டும் தெரிந்தால் இப்படிச் சிரமப்பட்டுக்
கொள்ளையடித்துக்கொண்டு உயிருக்குப் பயந்து வாழவேண்டாமே.

ஆகவே அவனும் ஞானானந்தருக்குச் சீடனாக ஆசிரமத்துக்குப்
போய்ச் சேர்ந்துகொண்டான். ஆசிரமத்திற்கு ஏற்ற வகையில் தன்னுடைய
தோற்றத்தை மாற்றிக்கொண்டான். தன்னுடைய பழக்கவழக்கங்களையும்
மாற்றிக்கொண்டான்.
ஆசிரமத்தின் கட்டொழுங்குகளை மிகவும் ஒழுங்காகக்
கடைபிடித்தான்.
ஞானானந்தர் சொற்பொழிவு ஆற்றும்போதும் தத்துவவிளக்கம்
அளிக்கும்போதும் உபதேசம் செய்யும்பொதெல்லாம் மிகவும் கவனமாகக்
கேட்பான். ஞானானந்தரின் அருகிலேயேஎப்போதும் இருந்து அவருக்குரிய
பணிவிடைகளை முன்னின்று முனைப்பாகச் செய்துவந்தான். ஞானானந்தர்
கேள்விகள் கேட்பார். அவற்றிற்குரிய பதில்களைச் சொல்ல
வேண்டுமல்லவா? ஆகவே அவனே பல நூல்களைச் சிரத்தையுடன்
கற்றான்.
ஞானானந்தரின் தலைமைச் சீடனாக வேண்டுமல்லவா?
அப்போதுதானே அவர் அவனுக்கு ரசவாதத்தைக் கற்றுக்கொடுப்பார்?
ஆகவேதான் அப்படியெல்லாம் செய்தான்.
பலவகையான யோகநிலைகளைக் கற்றாலே ரசவாதம் கைவரும்
என்று சொல்லக்கேட்டு, அட்டாங்க யோகம், ஜபயோகம் போன்றவற்றை
மும்முரமாகச்செய்தான். 'சத்யம் வச; தர்மம் சர' -
'சத்தியத்தையே பேசு; தர்மத்தின் வழி நட' என்று வேதத்தின் சாரம்
கூறுவதால் அவற்றையே தன் வாழ்வில் மேற்கொண்டான். (சிலர்,
மாட்டுக்கால் சூப்தான் வேதத்தின் சாரம்என்று நினைப்பார்கள்).

இவ்வாறு ஆசிரமத்தில் இருந்தவர்களிலேயே மிகச்சிறந்த
சீடனாக விளங்கினான். தீட்சாநாமமாகப் பெயரையும் ஞானானந்தர்,
'ஆத்மாநந்தன்' என்று கொடுத்தார்.

ஞானானந்தரின் உடல்நிலை மோசமாகிவந்தது.
முன்புபோல அவரால் ஆசிரம நடவடிக்கைகளில் கலந்து
கொள்ளமுடியவில்லை.
ஆகவே ஆத்மாநந்தனே எல்லாவற்றையும் மற்ற சீடர்களின்
உதவியோடு கவனித்துவந்தான். சொற்பொழிவுகளும் விளக்கங்களும்
உபதேசங்களும் அவனே செய்யலானான்.

ஆத்மாநந்தரை ஞானானந்தர் பிரதமசீடராக அறிவித்தார்.
அத்துடன் தம்முடைய வாரிசாக ஆசிரமத்தலைமையையும் அவருக்கே
தந்தார்.

ஞானானந்தர் மகாசமாதியடையும் காலம் வந்தது.
அப்போது ஆத்மானந்தரை அருகில் அழைத்தார்.
எல்லாரும் ஞானானந்தர் ஆத்மாநந்தருக்குரசவாதவித்தையைப்
போதிக்கப்போகிறார் என்றே எண்ணிக்கொண்டனர்.

ஞானானந்தர் பேசலானார்:

"துருப்பிடித்த இரும்பு போன்ற சித்தம் படைத்த அமர்சிங்
என்னும் பயங்கரவாதியை, களிம்பே ஏறாத பசும்பொன்னான ஆத்மாநந்தனாக
மற்றியிருக்கிறேன். இதுதானப்பா நான்இரும்பைப் பொன்னாக மாறச்
செய்த ரசவாதவித்தை".

செம்பு பொன்னாகும் சிவாயநம வெனில்
செம்பு பொன்னாகத் திரண்டது சிற்பரம்
செம்பு பொன்னாகும் ஸ்ரீயும் கிரியும் எனச்
செம்பு பொன்னான திருவம்பலவே.

-திருமூலர்


அன்புடன்

ஜெயபாரதி
>====================================