From poo@... Fri Jun 14 03:17:43 2002
Return-Path:
X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 14 Jun 2002 10:17:43 -0000
Received: (qmail 55180 invoked from network); 14 Jun 2002 10:17:43 -0000
Received: from unknown (66.218.66.217) by m1.grp.scd.yahoo.com with QMQP; 14 Jun 2002 10:17:43 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.90) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 14 Jun 2002 10:17:41 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Fri, 14 Jun 2002 13:16:52 +0300
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([212.71.57.86]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Fri, 14 Jun 2002 13:16:47 +0300
Message-Id: <4.3.0.20020614131332.03006610@...>
X-Sender: poo/giasmd01.vsnl.net.in@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Fri, 14 Jun 2002 13:56:19 +0300
To: tamil araichchi vaddam@yahoogroups.com,agathiyar@yahoogroups.com, tamil@...,tamil-ulagam@yahoogroups.com, "M Muthu" ,
Subject: Re: [tamil araichchi vaddam] [MMuthu]No word in Tamil to correspond to 'murder' in English?
In-Reply-To:
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy
X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 18619

At 08:04 AM 06/14/2002 Friday +0000, you wrote:
>diverting a message by M Muthu. pls point your answers to M Muthu.
>
>From: "M Muthu"
>
>I find in English, 'kill' means different from 'murder'. In tamil, to the
>best of my knowledge, there is only one word, 'kollu' or its derivatives.
>Am I missing something or are there two words, one to denote killing which
>is not a sin (as killing animals for eating, killing in self-defense) and
>murdering, which is essentially the intentional or pre-meditated killing of
>another human being?
>
>M Muthu, P.E., Ph. D.
>Associate Professor of Civil Engineering
>Alabama A&M University
>P. O. Box 367
>Normal AL 35762
>voice: 256-858-4148
>Fax: 775-521-8249 or 256-851-5909
>e-mail: mmuthu@a... (work)
>mmuthu@h... (preferred)
>http://alpha1.aamu.edu/engineering/muthu.htm

தமிழாராய்ச்சி வட்டத்தார்க்கு,

இந்தக் காலத் தமிழரின் பெருங்குறையேதமிழைப் பேசாத, தமிழ் நூல்களைப் படிக்காத, தமிழைப் பலுக்கிக்
கொண்டே இருக்காத குறைதான். நான் பார்த்து கொண்டு வரும் வகையில் மொத்தத்தில் தமிழரிடையே
தமிழறிவு குறைந்துவருகிறது. குறிப்பாகச் சொன்னால், நாமறிந்த தமிழ்ச் சொற்களின் தொகுதி
(கொத்து) குறைந்து கொண்டே வருகிறது. அப்புறம் சட்டியில் இருந்தால் அல்லவா அகப்பையில் வருவதற்கு?

ஆங்கிலச் சொல் தெரியவில்லை என்றால், தேடிப் பிடித்து அகரமுதலியைத் தேடுகிற தமிழர்கள் எத்தனை
பேர் தங்கள் வீட்டில் தமிழ்-தமிழ் அகரமுதலியையோ, ஆங்கிலம்-தமிழ் அகரமுதலியையோ,
தமிழ்-ஆங்கிலம் அகரமுதலியையோ வாங்கிவைத்து அதை அவ்வப்போது ப்யன்படுத்துகின்றனர்? எத்தனை பேர்
தமிழ் நூல்களை, இலக்கியங்களை வாங்குகின்றனர்? நாலு மடல் தன் வீட்டாருக்கும் நண்பருக்கும் தமிழில்
எழுதுகின்றனர்? நாலுபேரோடு தமிழில்பேசுகின்றனர்? அந்தக் காலக் "காதலிக்க நேரமில்லை"
திரைப்படம் தான் நினைவுக்கு வருகிறது. "We don't see Tamil Pictures, We see only
English Pictures" என்று நாயகிகள் இருவரும் செல்லப்பாவிடம் (நாகேசிடம்) சொல்லுவார்கள்." அந்த
நிலைக்கு இப்போது வந்தாயிற்று. தன் மொழியைப் பற்றி இன்னொருத்தன் மொழியில் கதைக்கும் நிலை
தமிழுக்கு வந்துவிட்டதல்லவா? இது ஒரு அவல நிலைதானே!

தமிழைப் புழங்காவிட்டால் அப்புறம் எப்படி நம்முடைய விதப்பான சிந்தனை, நமக்கே உரிய சிந்தனை
வளரும்? ஆங்கிலத்திலே சிந்தித்து ஆங்கிலத்திலே விடையுரைத்தால் நாம் தமிழர் என்ற அடையாளத்தை
விட்டுவிடலாமே? அல்லது "ஆங்கிலம்/தமிழ் என்ற கலவையில் தான் சிந்திப்பேன், பேசுவேன், எழுதுவேன்"
என்றால் தமிங்கிலர் என்றே ஆகிவிடலாமே? (இதில் என்னையும் உட்படுத்தித்தான் எழுதுகிறேன்.)

இந்தக் குறை சோம்பல் தனத்தாலும், அக்கறை இல்லாதாலும், ஏற்படும் குறை. முடிவில்நம் குறையை மொழியின்
மேல் ஏற்றித் "தமிழால் சொல்ல முடியவில்லை; ஆங்கிலம், வடமொழி கலப்பதைத் தவிர்க்க முடியாது" என்ற
நொள்ளைக் குற்றச்சாட்டிற்கு வந்துவிடுகிறோம். ((இந்த நண்பர் தன்னைக் குறைசொல்வதாக எழுத்துக் கொள்ள
வேண்டாம். நான் என் கவலையைச் சொல்கிறேன். முன்பின் தெரியாதவரைச் சொல்வதுபோல் மறுபடியும் தொனி
எழுவதால் என் உணர்வை இத்தோடு தடுத்துக் கொள்கிறேன். அண்மைக் காலமாக ஒரு குழுவில் வரும் மடலை
இன்னொரு குழுவிற்கு அனுப்புவதில்லை என்ற கைப்பிடியைக் கொண்டிருந்தேன். இதற்கு மட்டும் மட்டுறுத்தர்
பொறுத்தருளவேண்டும். நான் இந்த உணர்வை மற்றவரோடு பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற உந்துதலில்
அகத்தியர், தமிழ் உலகம், தமிழிணையம் ஆகிய குழுக்களுக்கும் அனுப்புகிறேன். அந்தக் குழுக்களின்
மட்டுறுத்தர்களும் பொறுப்பார்களாக!)

கொலைசெய்தலைக் குறிக்க ஏகப்பட்ட சொற்கள் இருக்கின்றன. ஐந்தாயிரம் ஆண்டுகளாவது இருக்கின்ற ஒரு இனம்
கொலைசெய்து கூறுபடாமலா இருக்கும்?

"எருக்குதல், காதுதல், சவட்டல், எற்றுதல், ஒழித்தல், கோறல், முருக்கல், வீழ்த்துதல், வீட்டுதல், படுத்தல்,
மாய்த்தல், மடிவித்தல்". இன்னும் பல உண்டு.