From jaybee@... Fri Jun 14 03:54:07 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 14 Jun 2002 10:54:07 -0000
Received: (qmail 926 invoked from network); 14 Jun 2002 10:54:06 -0000
Received: from unknown (66.218.66.217) by m11.grp.scd.yahoo.com with QMQP; 14 Jun 2002 10:54:06 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 14 Jun 2002 10:54:06 -0000
Received: from user (sp-103-90.tm.net.my [210.186.103.90]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXO007I4Z2LZ2@...> for agathiyar@yahoogroups.com; Fri, 14 Jun 2002 18:42:22 +0800 (SGT)
Date: Fri, 14 Jun 2002 18:42:30 +0800
Subject: Re: [agathiyar] Traditions#2-Saththiyam
In-reply-to: <3.0.3.32.20020611235813.016d38a0@...>
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020614184230.006e5b10@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
References: <3.0.6.32.20020611181053.007cf390@...> <3.0.3.32.20020611180526.0078a9a0@...>
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18620
At 11:58 PM 6/11/02 +0800, JayBee wrote:
> சத்தியத்தின் அடுத்தடுத்த வகைகளை காலையில் பார்த்துக்
>கொள்ளலாம். மணி 12-00க்கு மேலாகிறது. நேரத்துக்குப் படுப்பதில்லை
>என்று வீட்டில் அனைவருமே புகார் செய்கிறார்கள்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
சத்தியம் செய்வதில் இருந்த பலமுறைகள் இப்போது
வழக்கில் இல்லை.
இப்போதும் வழக்கில் உள்ளவை சில இருக்கத்தான்
செய்கின்றன.
விளக்கு தீபத்தை வைத்து சத்தியம் செய்வது இன்றும்
உண்டு.
இன்னொரு முறையில் கற்பூரத்தை ஏற்றிவைத்துவிட்டு,
அதன்பின் அணைத்துச் சத்தியம் செய்வார்கள்.
தனக்கு மிகவும் வேண்டியவர்கள் தலையில் கைவைத்து/
தலையில் அடித்துச் செய்வதும் இன்றும் இருக்கிறது.
துண்டைப்போட்டுத்தாண்டும் முறையும் ஒன்று
இருந்திருக்கிறது. தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யரின் ஆசிரியர்
மீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் சரித்திரத்தில் ஒரு சம்பவம்
வருகிறது.
மீனாட்சிசுந்தரம்பிள்ளையின் தலை மாணாக்கர் தியாகராசச்
செட்டியார். அவர் கும்பகோணம் கல்லூரியில் தமிழாசிரியராக
இருந்தார்.
பிள்ளையவர்களுடன் எப்போதும் உடன் இருக்கும் கூட்டம்
ஒன்று உண்டு. அதில் சுப்பையா பண்டாரம் என்பவரும் ஒருவர். சிறிது
தமிழ்ப்பயிற்சியுள்ளவர். சில பாடல்களை மனனம் செய்துவைத்துக்கொண்டு
பெரிய மனிதர்களிடம் போய் அவர்கள்மனதுக்கேற்றபடி நடந்து பழைய
பாடல்களைச் சொல்லி அவர்களை மகிழ்வித்து வருவாய் தேடுவார்.
ஒருமுறை ஆறுமுகத்தா பிள்ளை என்னும் பெரியதனக்காரார்
கேட்டுக்கொண்டபடியால் பிள்ளையவர்கள் அவருடன் பட்டீச்சரத்தில்
தங்கியிருந்தார். சுப்பையா பண்டாரம் ஆறுமுகத்தாபிள்ளையின் மைத்துனர்.
ஒருநாள், நல்ல பாடல் ஒன்றைச் செய்துகொண்டு, திருச்சி
சென்று தியாகராசச்செட்டியாரிடம் சொல்லி, பரிசிலாக
பிள்ளையவர்களுக்குப் பிடித்த மாங்கனிகளை வாங்கிவருமாறு
சுப்பையா பண்டாரத்திடம் ஆறுமுகத்தா பிள்ளை சவால் விட்டார்.
அந்தச் சவாலை பண்டாரம் ஏற்றுக்கொண்டார்.
அந்தச் சம்பவத்தை உ.வே.சா. அவர்கள் மிகவும் சுவையாகச்
சித்தரித்திருக்கிறார். 'மீனாட்சிசுந்தரம் பிள்ளையவரகள் சரித்திரம்'
என்னும் புத்தகம் எல்லா இடங்களிலும் கிடைக்காது. இங்கு
எல்லாரிடமும் இருக்கவும் மாட்டாது. ஆகவே அவர்களும் ரசித்து
இன்புறும்வண்ணம், அதனை அப்படியே எழுதுகிறேன். 'கேலி முறை'
என்று சொல்லப்படும் மாமன் மைத்துனன் உறவினர் எப்படியெல்லாம்
பேசிக்கொள்வர் என்பதனையும் இந்தச் சம்பவத்தின்மூலம்
அறிந்துகொள்ளலாம்.
தயாரா....?