From jaybee@... Fri Jun 14 03:56:54 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 14 Jun 2002 10:56:54 -0000
Received: (qmail 65518 invoked from network); 14 Jun 2002 10:56:53 -0000
Received: from unknown (66.218.66.217) by m10.grp.scd.yahoo.com with QMQP; 14 Jun 2002 10:56:53 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 14 Jun 2002 10:56:53 -0000
Received: from user (sp-103-90.tm.net.my [210.186.103.90]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXO00C3NZQG1M@...> for agathiyar@yahoogroups.com; Fri, 14 Jun 2002 18:56:42 +0800 (SGT)
Date: Fri, 14 Jun 2002 18:56:49 +0800
Subject: Savaalum saththiyamum - Traditions#3
X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020614185649.006e9770@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18621
சவாலும் சத்தியமும்
ஒருநாள், நல்ல பாடல் ஒன்றைச் செய்துகொண்டு, திருச்சி
சென்று தியாகராசச்செட்டியாரிடம் சொல்லி, பரிசிலாகப்
பிள்ளையவர்களுக்குப் பிடித்த மாங்கனிகளை வாங்கிவருமாறு
சுப்பையா பண்டாரத்திடம் ஆறுமுகத்தா பிள்ளை சவால் விட்டார்.
அந்தச் சவாலை பண்டாரம் ஏற்றுக்கொண்டார்.
அந்தச் சம்பவத்தை உ.வே.சா. அவர்கள் மிகவும் சுவையாகச்
சித்தரித்திருக்கிறார். 'மீனாட்சிசுந்தரம் பிள்ளையவரகள் சரித்திரம்'
என்னும் புத்தகம் எல்லா இடங்களிலும் கிடைக்காது. இங்கு
எல்லாரிடமும் இருக்கவும் மாட்டாது. ஆகவே அவர்களும் ரசித்து
இன்புறும்வண்ணம், அதனை அப்படியே எழுதுகிறேன். 'கேலி முறை'
என்று சொல்லப்படும் மாமன் மைத்துனன் உறவினர் எப்படியெல்லாம்
பேசிக்கொள்வர் என்பதனையும் இந்தச் சம்பவத்தின்மூலம் அறிந்து
கொள்ளலாம்.
ஆறுமுகத்தா பிள்ளை: சுப்பையா நீ அனேகரிடம் சென்று நூதனமான
பாடல்கள் செய்து பரிசுகள் பெற்று வருவதாகச்சொல்கிறாயே?
அதனை நாங்கள் தெரிந்து கொள்ளும்படி இன்று கும்பகோணம்
போய்த் தியாகராசச்செட்டியார்மீதுஏதாவது பாடலியற்றிப்
பரிசுபெற்று ஐயா அவர்களுக்குப் பிரியமான மாம்பழங்களை
விலைக்கு வாங்கிவரமுடியுமா?
சுப்பையா பண்டாரம்: அவசியம் நான் பாடல் செய்து சொல்லிக்காட்டி
மகிழ்வித்து அவரிடம் பரிசு பெற்று மாம்பழம் வாங்கிக்கொண்டு
வந்துவிடுவேன்.
ஆறு: ஒருநாளும் முடியாது.
சுப: ஏன் முடியாது?
ஆறு: உனக்குப் படிப்பில்லையே?
சுப: எனக்குப் படிப்பில்லை என்று நீர் கண்டீரா? எவ்வளவோ இடங்களுக்குச்
சென்று திரவியங்கள் முதலியவற்றைப் பெற்றுவருகிறேனே!
படிப்பில்லாவிட்டால் முடியுமா?
ஆறு: படிப்பில்லாத இடமாகப் பார்த்துத்தான் நீ போய்வருகிறாய்.
எனக்கும் பிறர்க்கும் அது நன்றாகத் தெரியுமே.
சுப: 'தோட்டத்துப் பச்சிலைக்கு வீர்யம் மட்டு' என்பதுபோல் என்
படிப்பை நீர் மதிக்கவில்லை.
ஆறு: செட்டியாரிடம் போனால் உன் படிப்பு நன்றாக வெளிப்பட்டுப்போகும்!
சுப: அவர் என்ன செய்வார்?
ஆறு: உன் நரம்பை எடுத்துவிடுவார். வெளிக்கிளம்பவொட்டார்.
சுப: நான் தான் அவர் நரம்பை எடுத்துவிடுவேன். அவரிடத்தில்
எனக்குக் கொஞ்சமேனும் அச்சமில்லை.
ஆறு: ஏன் அச்சமிருக்கும்? கொஞ்சமேனும் படிப்பிருந்தால் அல்லவோ
படித்தவரிடத்தில் அச்சமிருக்கும்? மகாமூடனாக இருக்கிற
உனக்கு மகா பண்டிதராகிய அவரிடத்தில் எப்படி அச்சமுண்டாகும்?
நீ மாத்திரம் அவரிடம் போய் ஒரு பாடலைச் சொல்லுவையாகில்
உன் சரக்கு வெளிப்படும்.
சுப: நீர் இப்படிச் சொல்வது என்னுடைய கௌரவத்திற்குக் குறைவாக
இருக்கிறது.
ஆறு: உனக்கு என்ன கௌரவம் இருக்கிறது? இருந்தாலல்லவோ அது
குறையுமென்று நீ கவலைப்பட வேண்டும்?
சுப: இருக்கட்டும். நீர் என்ன செய்யச்சொல்கிறீர்?
ஆறு: செட்டியார்மீது ஒரு பாடல் செய்து பரிசு பெற்று மாம்பழம்
வாங்கிக்கொண்டு இன்று மாலைக்குள் வரவேண்டும். அப்படிச்
செய்யாவிட்டால் நீ மனுஷ்யனே அல்ல.
சுப: நீரென்ன சொல்கிறது? அப்படிச்செய்யாவிட்டால் 'நான் மனுஷ்யனல்ல'
என்று நானே சொல்கிறேன்.