From jaybee@... Fri Jun 14 06:45:58 2002
Return-Path: X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 14 Jun 2002 13:45:58 -0000
Received: (qmail 1847 invoked from network); 14 Jun 2002 13:45:58 -0000
Received: from unknown (66.218.66.218) by m7.grp.scd.yahoo.com with QMQP; 14 Jun 2002 13:45:58 -0000
Received: from unknown (HELO ipop2) (202.188.0.246) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 14 Jun 2002 13:45:57 -0000
Received: from user (sp-103-218.tm.net.my [210.186.103.218]) by ipop2.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXP00C8F7KJYT@...> for agathiyar@yahoogroups.com; Fri, 14 Jun 2002 21:45:57 +0800 (SGT)
Date: Fri, 14 Jun 2002 21:46:04 +0800
Subject: Re: [agathiyar] velu nachchiyar
In-reply-to: X-Sender: jaybee@...
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020614214604.007394c4@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18623
At 06:30 AM 6/14/02 +0530, you wrote:
> கணையாழியில் 'வேலு நாச்சியார்' என்ற பெயரில் கே.ஜீவபாரதி
>எழுதிய நாவலுக்கு விமர்சனம் படித்துக் கொண்டிருந்தேன்.
>போகட்டும்.
நாவலில் "ஆகமத்தைக் காரணம் காட்டியதற்காக அய்யர்களை
>நாடு கடத்த உத்தரவிடுகிறேன்" என்று வேலு நாச்சியார் சொல்வதாக
>வருகிற செய்தி விமர்சனத்தில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.
>
>வேலுநாச்சியாரின் காலமான பதினெட்டாம் நூற்றாண்டு கொந்தளிப்பான
>அரசியல் சூழ்நிலை நிலவிய காலம். அவர் அப்படி யாரையும் நாடு
>கடத்தினாரா? இதற்கு வரலாற்று ஆதாரம் உண்டா?
>
>அன்புடன்,
>இரா.முருகன்
வேலு நாச்சியாரைப் பற்றி மிகவும் நுணுகி ஆழ்ந்து
ஆராய்ந்திருப்பவர் மலேசியாவில் இருக்கிறார். காளையார்கோயிலைச்
சேர்ந்தவர். பெயர் தங்கக்காளீஸ்வரன்.
வேலு நாச்சியாரின் கணவர் சிவகங்கை மன்னர் முத்துவடுக
நாதரைப் பற்றி இரு சிறுநூல்கள் எழுதியுள்ளார்.
விஷயத்துக்கு வருவோம். அப்படி யாரையும் வேலு நாச்சியார்
நாடு கடத்தவில்லை. முத்துவடுகநாதருக்குப் பின்னர் பெரிய மருது
சேர்வைக்காரரின் பாதுகாப்பில் வாழ்ந்துவந்தார். பெரிய மருது
சேர்வைக்காரர் தம்முடைய கடைசி வாக்குமூலத்தில் தாம்
வேலுநாச்சியாரை மறுமணம் புரிந்துகொண்டிருந்ததாகக் கூறியிருக்கிறார்.
சிவகங்கைச்சீமையின் நிர்வாகம், அதிகாரம் எல்லாமே
சின்ன மருது எனப்படும் மருது பாண்டியனின் கையிலேயே இருந்தது.
ஊமைத்துரைக்கு மருது பாண்டியன் சேர்வைக்காரர்
அடைக்கலம் கொடுத்ததுகூட பெரிய மருதுசேர்வைக்காரருக்குத்
தெரியாது.
ஆகவே இந்தமாதிரியெல்லாம் வேலு நாச்சியார் அதிகாரம்
செய்துகொண்டிருக்கவில்லை. அதுவும் அய்யர்களையோ அல்லது
வேறு யாரையுமோ நாடுகடத்தியதாக ஏதும் உண்மைச்சம்பவம்
கிடையாது.
கணையாழியைப் பற்றி மலேசியாவில்ஒரு கருத்து நிலவுகிறது.
அதைப் பற்றி இராமுருகனிடம்தான் கேட்கவேண்டும்.