From poo@... Fri Jun 14 12:39:53 2002
Return-Path: X-Sender: poo@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 14 Jun 2002 19:39:53 -0000
Received: (qmail 34670 invoked from network); 14 Jun 2002 19:39:52 -0000
Received: from unknown (66.218.66.216) by m15.grp.scd.yahoo.com with QMQP; 14 Jun 2002 19:39:52 -0000
Received: from unknown (HELO backupsrv.nesma.net.sa) (212.71.32.90) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 14 Jun 2002 19:39:52 -0000
Received: from mail.nesma.net.sa ([192.168.1.18]) by backupsrv.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.197.19); Fri, 14 Jun 2002 22:39:42 +0300
Received: from s0024156401.giasmd01.vsnl.net.in ([213.181.166.94]) by mail.nesma.net.sa with Microsoft SMTPSVC(5.5.1877.537.53); Fri, 14 Jun 2002 22:39:40 +0300
Message-Id: <4.3.0.20020614205717.03017460@...>
X-Sender: poo/giasmd01.vsnl.net.in@...
X-Mailer: QUALCOMM Windows Eudora Version 4.3
Date: Fri, 14 Jun 2002 20:58:52 +0300
To: agathiyar@yahoogroups.com,tamil-ulagam@yahoogroups.com,tamil@...
Subject: measurements
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset="iso-8859-1"; format=flowed
Content-Transfer-Encoding: quoted-printable
Return-Path: poo@...
From: Krishnan Ramasamy X-Yahoo-Group-Post: member; u=23389931
X-Yahoo-Profile: iramaki
X-Yahoo-Message-Num: 18628
அன்பிற்குரிய இணையத்தாருக்கு,
தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். கூடவே இளம்பூரணரின் உரையையும் அருகே
வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். மாத்திரையின் அளவுகள் பற்றிச் சொல்கிற தொல்காப்பியரின்
கூற்றுக்கு இளம்பூரணர் உரையைப் படிக்கிறபோது ஏகப் பட்ட கேள்விகள்.
தொல்காப்பியர் கூற்று:
"கண்ணிமை நொடி என அவ்வே மாத்திரை
நுண்ணிதின் உணர்ந்தோர் கண்ட வாறே"
என ஏழு முறையைக் கூறி அதில் மேலே மாத்திரை அளந்தது சார்த்தியளத்தல் முறைஎன்கிறார். (இந்த
வரிசையில், தேங்க முகத்தளத்தலை தெறித்தளத்தல் என்று இன்னொரு உரையாசிரியரான நச்சினார்க்கினியர்
குறிப்பிடுகிறார்.)
இந்த அளவைகள் எல்லாம் எதைக் குறிப்பிடுகின்றன என்று பார்த்தால், சில அளவைகள் உடனே புரிகின்றன.
நிறுத்தல் என்பது எடையை அளப்பதைக் குறிப்பிடுகிறது.
பெய்துஅளத்தல் நீர்மத்தின் வெள்ள அளவைக் குறிப்பிடுகிறது. [வெள்ளத்தை இந்தக் காலத்தில் கன அளவு என்று
சொல்லுகிறோம். volume - என்பதைக் இருபதாம் நூற்றாண்டுச் சொல்லான "கன அளவு" என்பதைக் கொண்டு
தவறான முறையில் குறித்துக் கொண்டு வருகிறோம் என்றே நான் எண்ணுகிறேன். கனம் என்பதும் ஒரு வகையில்
எடையைக் குறிப்பதுதான். நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள் எந்தந்த அளவு விரிந்து பெருகி வெளியை
(space) அடைத்து உள்ளனவோ அந்தப் பெருக்கைத் துல்லியம் கருதி வெள்ளம் என்றே குறிப்பிடலாம். ஏன்
பழஞ் சொல்லைத் தவிர்க்கிறோம் என்றுபுரியவில்லை. வெள்ளம் என்ற சொல் பெருக்கைத்தானே குறிக்கிறது?
சட்டென்று அது நம் மனத்தில் வெளியையும் குறிக்குமே?]
நீட்டி அளத்தல் என்பது நீளத்தை அளப்பது.
நெறித்து அளப்பது என்பது விளங்காது நிற்கிறது. நெறித்தல் என்பதற்கு ஒடித்தல், நிமிர்த்தல், நெருக்குதல்
(to make it compact) என்ற பொருள்கள் உண்டு. மறுபடியும் இங்கே வெள்ளம் தான் அளக்கப் படுகிறதா?
அப்படியெனில் பெய்தளத்தலுக்கும் முகந்தளத்தலுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு?
முகந்தளத்தல் என்பதன் மூலம் இந்தக் காலத்தில் திண்மப் பொடிகளை (solid powders) அளக்கவும், நீர்ம
(liquid)த்தை அளக்கவும் உள்ள அளவையைச் சொல்லுகிறோம். அப்படியெனில் ஏன் தனியே பெய்தல் அளவை என
ஒன்று இருந்தது? இரண்டிற்கும் என்ன வேறுபாடு? மாறாக முகத்தல் அளவை என்பது திண்மப் பொடிக்கு மட்டுமே
இருந்ததா? திண்மப் பொடிகள் அவற்றின் புரைமை (porosity) க்குத் தக்க அவற்றின் வெள்ளத்தில் மாறுபடும்.
அவற்றைத் தட்டித் தட்டி அமுக்கி அமுக்கி வெள்ளத்தை நெருக்க முடியும்; ஓரளவு குறைக்க முடியும். அப்படி நெறித்து
அளந்தது தான் மேல் கூறியதோ? வெறுமனே திண்மப் பொடியை முகந்து நெறிக்காமல் அளந்தால், அதன் இயல்பான
புரைமையோடு (natural porosity) கூடிய வெள்ளத்தை அளக்க முடியும். இன்னும் ஒரு கேள்வி. அது என்ன
தேங்க முகந்தளத்தல்? தேங்க என்ற முன்னொட்டு எதைக் குறிக்கிறது? தேங்கி இயல்பாகக் கிடந்ததையா?
தேங்க முகந்தளத்தல் என்பதற்கு மாறாக நச்சினார்க்கினியர் தெறித்து அளத்தல் என்கிறார். அகரமுதலியில்
தெறித்து அளத்தல் என்பதற்கு இசைக்கருவியின் நரம்பைத் தெறித்து செவியின் அருகே வைத்து அளப்பது என்று
போட்டிருக்கிறது. செவியின் அருகே அதன் அதிர்வு எண்ணை அளக்கிறார்களா? அதிர்வின் நேர அளவைக்
கண்டுபிடிக்கிறார்களா? என்ன செய்கிறார்கள்? ஏன் இப்படி இளம்பூரணருக்கும் நச்சினார்கினியருக்கும் வேறுபாடு?
ஒருவர் முகந்தளத்தலைக் குறிக்க இன்னொருவர் ஒலியியல் பற்றிய கருத்தைக் குறிக்கிறாரே? இரண்டிற்கும்
தொடர்பே இல்லையே?
சார்த்தியளத்தல் என்பது ஒன்றை இன்னொன்றோடு சார்த்தி ஒப்பிட்டு அளப்பது. கண்ணிமைக்கின்ற நேரம், விரல்
நொடிக்கின்ற நேரம் என்பது ஒரு ஒப்பீட்டு அளவுதான். இந்தக் காலத்தில் வெதுமையை (temperature)
அளவிட, இதள்த் தெறுவமானியை ( Mercury thermometer; தெறுதல் = சுடுதல்)ப் பயன்படுத்தும் போது,
வெதுமைக் கூடக் கூட இதள்த் தண்டின் நீட்டம் கூடி வருகிறது அல்லவா? அங்கே இதளின்நீட்டத்தை வெதுமையில்
சார்த்தி அளவெடுக்கிறோம்.
எண்ணிஅளத்தல் என்பதும் நேரத்தை அதிர்வெண்ணைப் பயன்படுத்துவது போலத் தான்.
சரி பரப்பை அளப்பது என்ன ஆயிற்று? அதுஏன் மேலுள்ள வரிசையில் இல்லை? [அகலமாக அகண்டு கிடப்பது
அகரம் ( இந்தையிரோப்பிய acre, area). பரந்து கிடப்பது பரப்பு, பரட்டு,பரத்து (இந்தையிரோப்பிய
broad, breadth).] இல்லை, எதையாவது தவறாகப் புரிந்து கொண்டு விட்டுவிட்டோமா?
மேலே இன்னும் விளங்காத கேள்விகளை அப்படியே கொடுத்திருக்கிறேன். விடைதெரிந்தவர்கள் எழுதினால்
எல்லோருக்கும் பயன்படும்.
என்னவொரு நிலைமை பாருங்கள்? சொல்லிக் கொடுக்க ஆளில்லாமல் "வேரில் பழுத்த பலாவாக" இன்னும்
எத்தனை கிடக்கும் இந்தத் தமிழில்?