From aysh@... Sat Jun 15 02:07:49 2002
Return-Path: X-Sender: aysh@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 15 Jun 2002 09:07:48 -0000
Received: (qmail 5064 invoked from network); 15 Jun 2002 09:07:47 -0000
Received: from unknown (66.218.66.217) by m6.grp.scd.yahoo.com with QMQP; 15 Jun 2002 09:07:47 -0000
Received: from unknown (HELO webmail3.maa.sify.net) (202.144.76.19) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 15 Jun 2002 09:07:46 -0000
Received: (qmail 15803 invoked by uid 7002); 15 Jun 2002 14:37:39 +0530
Received: from unknown (HELO webmail3.maa.sify.net) (127.0.0.1) by localhost with SMTP; 15 Jun 2002 14:37:39 +0530
Received: (qmail 15767 invoked by uid 7002); 15 Jun 2002 14:37:37 +0530
Received: from unknown (HELO User) (210.214.130.124) by webmail3.maa.sify.net with SMTP; 15 Jun 2002 14:37:37 +0530
To: Subject: RE: [agathiyar] Arumai Tamilukkup perumai
Date: Sat, 15 Jun 2002 14:36:33 +0530
Message-ID: MIME-Version: 1.0
X-Priority: 3 (Normal)
X-MSMail-Priority: Normal
X-Mailer: Microsoft Outlook IMO, Build 9.0.2416 (9.0.2910.0)
In-Reply-To: X-MimeOLE: Produced By Microsoft MimeOLE V5.00.2314.1300
Importance: Normal
From: "era.murugan achwin" X-Yahoo-Group-Post: member; u=35388564
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: quoted-printable
X-Yahoo-Message-Num: 18648
மொழி வளர்சிதை மாற்றத்துக்கு உட்பட்ட ஒன்று. அதில் மாற்றங்கள் காலப் போக்கில் ஏற்படுவதற்குச்
சமூகவியல் நோக்கில் காரணங்களைத் தேடுவதே பொறுத்தமாக இருக்கும்.
1) தமிழில் இருந்து பிறந்த மலையாளத்தில் 'குத்துப் பட்டுச் செத்தான்' என்பதை, 'குத்தேற்று மரிச்சு'
என்பார்கள். (குத்து ஏற்று மரித்தான்). 'ஏற்பது' என்பது விரும்பிப் பெறப்படுவது நாம் புழங்கும்
மொழியில். அந்தப் பின்னணியில் பார்த்தால், கத்தியால் குத்தப்பட்டதற்காகஇறும்பூது எய்தி மகிழ்ச்சியின்
உச்சிக்கே போய் ஆனந்தமாகச் செத்துப்போனதாகப் பொருள் கொள்ள வேண்டும். (மண்டையோட்டை ஒரு படத்தில்
பார்த்து விட்டு நாகேஷ் சொல்வார் - 'சிரிச்சுக்கிட்டே செத்துருக்கான்ப்பா')
2) அழித்தல் தமிழில் மங்கல வழக்கில்லை. மலையாளத்தில் சட்டையைக் கழற்றினாலும் 'சட்டை அழிச்சு'
தான். நல்ல புத்தகம் ஆயிரம் பிரதி விற்றால் 'ஆயிரம் கோப்பி விற்றழிஞ்சு' என்று சொல்வதில்
வயிற்றெரிச்சல் இல்லை; லேசான மகிழ்ச்சி கலந்த வியப்புத்தான் உணர்த்தப்படும்.
3) சல்லாபம் என்ற சொல்லைப் போன நூற்றாண்டு வரை சர்வ சாதாரணமாக உரையாடுதல் என்ற பொருட்படப்
பயன்படுத்தியிருக்கிறார்கள். மடத்தில் போய் பண்டார சன்னிதிகளோடு சல்லாபம் செய்து விட்டுத்
திரும்பியது பற்றி உ.வே.சா எழுதுவார்.இந்தக் காலத்தில் சல்லாபம் அர்த்தம் மாறி விட்டது.
4) சமூக வழக்குக் காரணமாக சில புழங்கும் சொற்கள் மாறி இருக்கின்றன. குசுகுசு இல்லை இப்போது. அதில்
அசங்கியமான அபானவாயுவை முகர்ந்து தமிழ்ப் பத்திரிகைகள் கிசுகிசுவாக மாற்றி விட்டார்கள். 'சாமான்'
வாங்குவது போய்ப் 'பொருள்' வாங்குவது வந்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்.
5) தமிழ் அல்லாத 'பஜனை' அடுத்தது. சரோஜாதேவி புத்தகங்கள் படித்த காலத்தில் (ஆமா, படிச்சேன்,
அதைச் சொல்வதில் எந்த வெட்கமும் கிடையாது) பஜனைக்குக் கிடைத்த பொருளோடு ஒரு பக்திப்பயணப்
புத்தகத்தைப் படிக்க நேர்ந்தது. அறுபது ஆண்பக்தர்கள் நடையாத்திரையாக வடநாட்டுக்குப் போனது.
"பண்டரிபுரத்தில் நாங்கள் ஒரு ராத்திரி தங்கினோம். முழுக்கப் பெண்கள் கொண்ட ஒரு அடியார் கூட்டமும்
நாசிக் நகரில் இருந்து அங்கே வந்திருந்தது. அவர்களுடன் சேர்ந்து ராத்திரி முழுக்க பஜனை செய்து
கொண்டிருந்தோம்"
6) "நான் பூனையைப் பார்த்தேன்" - ஒரே சொற்றொடர் தான். 'நான்' அழுத்த உச்சரித்தால், பூனையை
நீயோ உங்கப்பனோ பாக்கலே; நாந்தாய்யா பார்த்தேன்னு அர்த்தம். 'பூனை'யில்அழுத்தம் கொடுத்தால்
(செத்துடும் பாவம்), புலியையோ, நீர்யானையையோ பார்க்கலே .. பூனையைத்தான் பார்த்தேன்னு அர்த்தம்.
'பார்த்தேன்' க்கு அழுத்தம் கொடுத்தால் சும்மா பார்த்தேன் .. அதை விரட்டலே .. வாலைப் பிடித்து
இழுக்கலே.. மாமியார் தூங்கும்போது முகத்தில் பிராண்டத் தூக்கிப் போடலே என்று அர்த்தம் ..
சொற்கள் .. பொருட்கள் ..
நாகூர் ரூமியின் குட்டியப்பா போல் சொற்களுக்கு நாம் தான் அர்த்தத்தை உருவாக்கிக் கொள்கிறோம்.
கோபிகிருஷ்ணனின் 'மொழி அதிர்ச்சி' படித்து ரிலாக்சேசன் அடைந்தவர்கள் எத்தனை பேர்?
மத்தளராயன்
[Non-text portions of this message have been removed]