From naga ganesan@... Sat Jun 15 05:07:51 2002
Return-Path:
Received: (qmail 41772 invoked from network); 15 Jun 2002 12:07:51 -0000
Received: from unknown (66.218.66.216) by m13.grp.scd.yahoo.com with QMQP; 15 Jun 2002 12:07:51 -0000
Received: from unknown (HELO n28.grp.scd.yahoo.com) (66.218.66.84) by mta1.grp.scd.yahoo.com with SMTP; 15 Jun 2002 12:07:51 -0000
X-eGroups-Return: naga ganesan@...
Received: from [66.218.67.172] by n28.grp.scd.yahoo.com with NNFMP; 15 Jun 2002 12:07:51 -0000
X-eGroups-Approved-By: jaybee555 via web; 15 Jun 2002 12:07:49 -0000
X-Sender: naga ganesan@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 15 Jun 2002 11:31:24 -0000
Received: (qmail 85370 invoked from network); 15 Jun 2002 11:31:24 -0000
Received: from unknown (66.218.66.217) by m14.grp.scd.yahoo.com with QMQP; 15 Jun 2002 11:31:24 -0000
Received: from unknown (HELO n2.grp.scd.yahoo.com) (66.218.66.75) by mta2.grp.scd.yahoo.com with SMTP; 15 Jun 2002 11:31:24 -0000
Received: from [66.218.67.150] by n2.grp.scd.yahoo.com with NNFMP; 15 Jun 2002 11:31:24 -0000
Date: Sat, 15 Jun 2002 11:31:24 -0000
To: agathiyar@yahoogroups.com
Subject: Re: Arumai Tamilukkup perumai
Message-ID:
In-Reply-To:
User-Agent: eGroups-EW/0.82
MIME-Version: 1.0
Content-Type: text/plain; charset=ISO-8859-1
Content-Transfer-Encoding: base64
Content-Length: 1627
X-Mailer: Yahoo Groups Message Poster
From: "naga ganesan"
X-Originating-IP: 216.88.65.175
X-Yahoo-Group-Post: member; u=9040551
X-Yahoo-Profile: naga ganesan
X-Yahoo-Message-Num: 18651


> எருமையைத் தொடர்ந்து கவுண்டமணி பாணியிலே 'நாயே', 'குரங்கே',
> 'பன்னித்தலையா' எல்லாம் வரும் முன்னால் நான் காப்பி ஆற்றப்
> போறேன்...
>

ஒவ்வொரு ஊரிலோ, காலத்திலோ சொற்களின் பொருள் வேறுபடுகிறது.
கோவைப் பக்கம் தொண்டு செய்தல் என்றால் அர்த்தம் வேறு: "அவள் தொண்டு".
தொண்டு என்றால் குறைவுபடுவது. தொள்-/தொண்-, 10 என்னும் பேரெண்ணிலிருந்து
ஒன்று குறைவுபட, தொண்டு (=9) என்றே தொல்காப்பியர் குறிக்கிறார்.
தொண்டு = 9, தொம்பது = 90, தொன்னூறு = 900, தொளாயிரம் = 9000
என்பது சரியாகப் படுகிறது. பெண் எருமைகளுடன் விளையாடும் போத்துக்குக்
காலில் கட்டப்படுவது தொண்டுமுட்டி. செட்டிநாட்டில் பந்தல் போட்டாச்சு
என்றால் கெட்டநிகழ்ச்சிகளுக்கே சொல்வது என்று கேள்விப்பட்டிருக்கிறேன்,
உண்மையா? காவணம் என்று கல்யாண நிகழ்ச்சிக்குச் சொல்லணுமாம்.

எருமை ஒருகாலத்தில் நல்லதாகவும் இருந்திருக்கிறது. எருமைமண்டலம்
என்று மைசூர்/மஹிசூர் நாட்டுக்கே பெயர். பட்டத்து ராணியை
பட்ட-மஹிசி என்கிறோம். சிந்து முத்திரைகளில் எருமைக் கொம்பை
அணிந்த ஆண்கள் உண்டு. பைகர்கள் (baiga) மத்திய இந்தியாவில்
திரவிட மொழி பேசுவோர் விழாக்களில் எருமைக் கொம்பை அணிந்து
கொண்டாடுகின்றனர். அவன் என்ன கொம்பனா?, கொம்பு சீவாதே,
கொம்பு முளைச்சவனா - என்பதில் தமிழின் பழைய நிலைகள் தெரிகிறது.

எருமை நீரில் திளைத்து விளையாடும். அதற்கே ஆங்கிலத்தில் water buffalo
என்பது பெயர். சங்க இலக்கியப் பாடல்களில் ஊரன் - ஊர்த் தலைவன்
பரத்தையருடன் இருப்பதை எருமை, யானை என்று பல பாடல்களில் வரும்.
மீன்கள் நீரை எதிர்த்துத் துள்ளுவது உறுதியாக இருக்கும்.
நீர், மீன்கள், தாமரை எனப் பரத்தைக்கு உவமை, - இதிலெல்லாம்
sexual imagery இருக்கும்.

அன்புடன்,
நா. கணேசன்