From jaybee@... Sat Jun 15 05:45:46 2002
Return-Path:
X-Sender: jaybee@...
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Received: (EGP: mail-8 0 3 2); 15 Jun 2002 12:45:46 -0000
Received: (qmail 88661 invoked from network); 15 Jun 2002 12:45:46 -0000
Received: from unknown (66.218.66.218) by m5.grp.scd.yahoo.com with QMQP; 15 Jun 2002 12:45:46 -0000
Received: from unknown (HELO ipop3) (202.188.0.247) by mta3.grp.scd.yahoo.com with SMTP; 15 Jun 2002 12:45:46 -0000
Received: from user (sp-103-131.tm.net.my [210.186.103.131]) by ipop3.tm.net.my (iPlanet Messaging Server 5.1 (built May 7 2001)) with SMTP id <0GXQ00G7DZG7W7@...> for agathiyar@yahoogroups.com; Sat, 15 Jun 2002 20:45:45 +0800 (SGT)
Date: Sat, 15 Jun 2002 20:45:49 +0800
Subject: Re: [agathiyar] Savaalum saththiyamum#2 - Traditions#3
In-reply-to: <3.0.3.32.20020614185649.006e9770@...>
X-Sender: jaybee@... (Unverified)
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020615204549.006e8a80@...>
MIME-version: 1.0
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
Content-type: text/plain; charset=iso-8859-1
Content-transfer-encoding: quoted-printable
From: JayBee
X-Yahoo-Group-Post: member; u=1292825
X-Yahoo-Profile: jaybee555
X-Yahoo-Message-Num: 18653


At 06:56 PM 6/14/02 +0800, JayBee wrote:

ஆறு: செட்டியார்மீது ஒரு பாடல் செய்து பரிசு பெற்று மாம்பழம்
வாங்கிக்கொண்டு இன்று மாலைக்குள் வரவேண்டும். அப்படிச்
செய்யாவிட்டால் நீ மனுஷ்யனே அல்ல.

சுப: நீரென்ன சொல்கிறது? அப்படிச்செய்யாவிட்டால் 'நான் மனுஷ்யனல்ல'
என்று நானே சொல்கிறேன்.

இவ்வாறு சொல்லிவிட்டு அவர் புறப்படத் தயாரானார்.

அதனைக்கண்ட ஆறுமுகத்தாபிள்ளை வழக்கம்போலவே
சயனத்துக்குச் சென்றுவிட்டார். அவர் நன்றாகத் தூங்கிவிட்டாரா
என்பதை அறிந்து வரச்செய்து, பிள்ளையவர்கள் தியாகராசச் செட்டியார்
மீது புதிதாக ஒரு பாடலை இயற்றி, எழுதுவித்து, எழுதிய ஏட்டை
சுப்பையா பாண்டரத்திடம் கொடுத்தனர்.
"இப்பாடலை நன்றாகப் பாடம் பண்ணிக்கொண்டு சென்று
தியாகராசனிடம் நீ செய்ததாகச் சொல்லிக்காட்டி, பணம் பெற்று
மாம்பழம் வாங்கிக்கொண்டு இந்த மாலைக்குள்ளே வந்துவிடும்.
அவன் என்ன சொன்னாலும் பயப்படாமல் எதிர்மொழி கொடும்.
இதன் பொருளை நன்றாகத் தெரிந்துகொண்டு போம்", என்று
சொல்லிவிட்டு, அங்கே நின்ற மாணாக்கராகிய சரவணபண்டாரம்
என்பவரை அவருடன் போய்வரும்படி அனுப்பினார்.
அந்தப்பாடலின் பொருளை நண்றாக அவருக்குப் போதித்து
அனுப்பும் வண்ணம் எனக்குக் கட்டளையிட்டார். பின்பு தம் வழக்கம்
போலவே சிரமப்பரிகாரம் செய்துகொள்ள ஆரம்பித்தார்.

சுப்பையா பண்டாரம் பிள்ளையவர்கள் சொன்னபடி என்னிடம்
அச்செய்யுளின் பொருளை நன்றாகத் தெரிந்துகொண்டு, சட்டை முதலியன
தரித்தவராகி, கையில் கோலொன்றைஎடுத்துக்கொண்டு அந்தப் பாடலை
நெட்டுருப் பண்ணிக்கொண்டு, பொருளைச் சிந்தித்துக்கொண்டும்
சரவணபண்டாரத்துடன் தைரியமுடையவராகி ஊக்கமுற்று
கும்பகோணத்துக்குச் சென்று தியாகராசச் செட்டியாருடைய வீட்டை
அடைந்து விசாரித்தார். செட்டியார் வீட்டிலில்லை என்பதை அறிந்து,
சுப்பையா பண்டாரம் அந்த வீட்டின் வெளித்திண்ணையிலேயே இருந்தார்.

இந்த இடத்தில் தியாராசச்செட்டியாரைப் பற்றிக்கொஞ்சம் சொல்ல
வேண்டும். அந்தக்காலத்தில் இருந்த பெரிய தமிழறிஞர்களில் அவரும் ஒருவர்.
செல்வாக்குள்ளவர். கண்டிப்பானவர். மனதில் உள்ளதை வெளிப்படையாகப்
பேசுவார். பதவிக்கொ, அதிகாரத்துக்கோ அஞ்சாதவர். 'மகாக்கண்டணவாதி'
என்று அக்காலத்தில் பெயர் பெற்றவர்.

கும்பகோணத்தில் அவர் பார்த்துவந்த பதவியில் சாமிநாதய்யரை
அமரச்செய்து வழிகாட்டியவர். ஐயரவர்கள் பிற்காலத்தில் சென்னையில்
கட்டியவீட்டுக்கு 'தியாகராச விலாசம்' என்று அவருடைய ஞாபகார்த்தமாகப்
பெயரிட்டார்.
அவரிப் பார்த்து அந்தக்காலத்தில் எல்லாரும் அஞ்சுவார்கள்.
தம் ஆசிரியராகிய மீனாட்சிசுந்தரம்பிள்ளையையேகூட அவர்
கண்டித்திருக்கிறார். அவருடைய தலை மாணாக்கரே அவர்தான்.

அன்புடன்

ஜெயபாரதி







-